வாழ்க வளமுடன்
தாகம் எடுக்கிறது,
கையில் ஒரு பெரிய சொம்பில் ( பாத்திரத்தில் ) தண்ணிர் உள்ளது.
நீரை குடிக்கிறோம்.
பாதி நீரை குடித்த உடனே தாகம் தீர்ந்து விடுகிறது. மீதி தண்ணீரை கீழே வைத்து விடுகிறோம்.
ஏன் அந்த நீரையும் குடித்தாலென்ன ?
தேவையில்லை.
தாகம் தீர்ந்து விட்டது.
தண்ணீர் இருக்கிறது என்பதற்காக,
இனிமேல் வரப்போகிற தாகத்திற்கு
நாம் இப்போதே நீர் அருந்த முடியாது.
பசியும் அது போலதான்.
உணவு இருக்கிறது என்பதற்காக,
தேவைக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.
தாகம், பசி இவை இரண்டுமே உடல் தேவைகள்.
தானே தனது தேவைகளை சீரமைத்துக் கொள்கின்றன.
ஆனால்,
மனதில் தோன்றுகிற வேட்கை, ஆசைகள் அப்படியல்ல.
அது கட்டுக்கடங்காதது.
அறிவைக் கொண்டு, நாம்தான் நமது மன ஆசைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் என்றால், நிம்மதியான வாழ்க்கை நமக்கு வேண்டும்.
உடல், மனம் இரண்டுமே நம்மிடம் ( அறிவு வசம்) தான், உள்ளது. பின், ஏன் இந்த வித்தியாசம் ? ஏன் இந்த முரண்பாடு ?
பசி, தாகம் இவை இரண்டும் உடல் தேவையாக இருந்தாலும்,
உயிருடன் நேரடி தொடர்பில் உள்ளதால், தேவை தீர்ந்ததும் மன நிறைவு உண்டாகி விடுகிறது.
ஆனால்,
மனதில் தோன்றுகிற ஆசைகள் ( நகை வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அருகில் வசிப்பவர்களை விட, நிலை (status ) உயர்ந்தவர்களாக வாழ வேண்டும் ) இவையெல்லாம் உயிர் சம்பந்தப் பட்டவை அல்ல.
ஆனால்,
மனம், ( ஆசை எழும் போது )அறிவையே மயக்கி விடுகிறது.
மனதில் எழுகின்ற ஆசைகளை, நாம் நிறைவேற்றி விட்டாலும், அதனால் ஏற்படுகிற இன்ப உணர்வின் மீது அறிவு மயங்கி விடுகிறது.
அதனால், மனம் ( அடக்க ஆளில்லாததால் ) மீண்டும் தேட ஆரம்பித்து விடுகிறது.
தேவைக்காக செய்து முடித்த எந்த செயல் இன்பத்தைத் தந்ததோ, அந்த காரியத்தை தேவை இல்லாமலே, ( அறிவின் மயக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு) மனம் மீண்டும், மீண்டும் செய்ய விழைகிறது.
அறிவு மயக்க நிலையில் உள்ளதால், பின் நாட்களில் ஏற்பட போகும் அல்லல், துன்பத்தை, முன்பே உணர்ந்து கொள்ள அறிவுக்கு திறணற்றுப்போகிறது.
அல்லல், துன்பம், மன இறுக்கம் நிறைந்த வாழ்க்கையே நமக்கு நெருங்கிய சொந்தமாகி போய்விடுகிறது.
இதிலிருந்து மீள்வதற்கு, அறிவு திடமானதாக இருக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி அகத்தாய்வு பயிற்சி மட்டுமே.
வாழ்க வளமுடன்.
_ ஆசை சீரமைத்தல் தலைப்பில் அருட் தந்தை.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக