4 செப்., 2021

நூல் நயம் : வாசிப்பது எப்படி?

#readingmarathon2021 
இலக்கு 20/25

#ஆண்டுவிழா #சுயமுன்னேற்றம் 

#இரண்டாவது_வாரம் 

 வாசிப்பது எப்படி.?
- செல்வேந்திரன்
எழுத்து பிரசுரம் 
(80 பக்கங்கள்)

புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும்
படிப்பதற்கு யாருக்குத் தான் தெரியாது.?
பள்ளி பாட புத்தகத்தில் துவங்கி, கல்லூரி பாடம் வரை படித்துக்கொண்டு தானே இருக்கிறோம். இது தவிர இதர புத்தகங்களையும் அவ்வப்போது வாசித்துக் கொண்டுதானே இருக்கிறோம். புதிதாய் என்ன சொல்லப் போகிறார் என்ற ஒரு முழு ஈடுபாடின்றியே  வாசிக்க ஆரம்பித்தேன்.  

முதல் சில பக்கங்கள் மேலோட்டமாக படித்தபோதும் அதற்கடுத்த பக்கங்களில் புத்தகல்தோடே ஒன்றிவிட்டேன் எனலாம்.

தினசரி நாளிதழ் வாசிப்பதிலிருந்து நமக்கு என்னென்ன  நன்மைகள் கிடைக்கின்றன என்பதை தனது சொந்த அனுபவத்திலிருந்தே விளக்கியுள்ளார்.

நாம் ஏன்  நாள், வார இதழ்கள், புத்தகங்களை வாசிப்பது இல்லை.  அதற்கான காரணங்கள். அதை களைவதற்கான வழிமுறைகள்.
அன்றாட வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள் என ஒவ்வொரு தலைப்பிலும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து நம்மை  வாசிப்பை நோக்கி திரும்ப வைக்கிறார்.
இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை ஆரம்பிப்பதற்கான வழியை தேடுவார்கள்.  அதற்காகத்தானே இந்த புத்தகமும்.
எனவே அவர் கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் எனலாம்.

நாம் தினசரி நாளிதழ்களை படிக்கும் போது தான் நம்மைச் சுற்றியுள்ள மக்களை,  சமூகத்தை, அரசியலை, நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறோம். 
நம்மைச் சுற்றி நடப்பவைகள் பற்றிய பொதுவான அறிவே இல்லாமல் நாம் வாழ்ந்து என்ன பயன்.?

வாசிப்பது என்று முடிவான பிறகு ஏதோ புத்தகத்தை எடுத்தோம் படித்தோம் பின் மறந்தோம் என்று இருப்பதற்கு "பருத்தி மூட்டை குடோனிலியே இருந்திருக்கலாமே"
என்ற பதிலே சிறந்தது.

பாதை இருக்கிறதே என்று எல்லா பாதைகளிலும் மாறி மாறி பயணம் செய்தால்,  நாம் எப்போது தான் இலக்கை அடைவது.?
 வலைத்தளங்களில் எண்ணற்ற அளவில் புத்தகங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. நமது ஆர்வத்தை பொறுத்து அதில் நூல்களை தேடிப் பிடித்து படிக்கலாம். 
இந்த புத்தகத்திலும் கூட 50 சிறந்த புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளார் ஆசிரியர் செல்வேந்திரன் அவர்கள்.

வாசிப்பது என்றாலே  புத்தகம் வாங்கி தான் படிக்க வேண்டுமென்றல்ல.. சில இணையதளங்களில் புத்தகங்களை, கட்டுரைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த இணையதள முகவரிகளையும் பட்டியலிட்டுள்ளார்.  

வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், அதனைப் பற்றி குறிப்பெடுத்து வைத்து வருவதன் மூலம் நமது வாசிப்பு பழக்கமும் மேம்படும், எழுத்து முறையும் மேம்படும். பின்னாளில் நாமே ஒரு எழுத்தாளராகவும் மாறலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: