30 அக்., 2021

நூல் நயம் : அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ


#ஆண்டுவிழா
#மொழிபெயர்ப்புநூல் 
#பதினொன்றாம்வாரம்

சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய 'ஹட்டாக்' என்றழைக்கப்பட்ட 'அவமானம்' நூல் தான் இந்த புத்தகம். 
இந்த புத்தகம் வாங்கும்போது டைட்டில் பார்த்து தான் வாங்கினேன். மொழிபெயர்ப்பு என்பதற்காக இப்படியெல்லாமா மொழிபெயர்ப்பாங்க. 
தவறேதும் இல்லை, படிப்பதற்கு எளிமையாகவும் கிரீன் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தி எழுதிருக்காங்க. கதைகள் நல்லா இருக்கு.. 

'காலித்' , 'திற' கதைகள் எனக்கு பிடித்திருந்தது. இந்து - முஸ்லிம்- சீக்கிய மக்களின் மனங்களே மண்ட்டோக்களின்  படைப்புகளாகின்றன. மதக்கலவரம் அன்றைய நாளின் தட்பவெப்பமாக இருந்தபோது மனிதர்கள் என்னவாகவெல்லாம் மாற்றம் பெருகிறார்கள் என்பதை அவருடைய எழுத்துக்களில் வாசிக்கிறோம். ஆண்மை, பெண்மை, பண்பு, நற்குணங்கள், வீரம், விவேகம் என எல்லா மனிதக் குணங்களும் சிதைகின்ற கோலத்தை விருப்பு வெறுப்பின்றி, எந்தச் சாய்மானமும் இன்றி மண்ட்டோ தன் படைப்புகளில் முன்வைத்துள்ளார்.

மண்ட்டோ எழுதிய நிறைய கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது தான். 

"தண்டா கோஷ்" சிறுகதை ஆபாசமானது என்று தொடரப்பட்ட வழக்கில் லாகூர் உயர் நீதிமன்றம் செக்சன் 292 ஐபிசி படி இவ்வாறு தீர்ப்பளித்தது: 

ஓர் எழுத்தாளனின் குறிக்கோள் என்னவென்பதோ, அது நல்லதா கெட்டதா என்பது பற்றியோ சட்டம் அக்கறை கொள்ள முடியாது. சட்டம் ஒரு வாசகனின் மனநிலை எவ்வழியில் நடத்தி செல்லப்படுகிறது என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்பட முடியும். ஓர் எழுத்து ஆபாச உணர்வுகளை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் என்றால் அந்த எழுத்தை ஆபாசமானது என்று கருதுவதற்கும் அதற்காகத் தண்டனை கொடுப்பதற்கும் தகுதி உடையது ஆகிறது. 

மக்கள் மண்ட்டோவை மதநம்பிக்கை இல்லாதவன் என்றும் ஆபாசக்காரன் என்றும் சொல்வது விநோதமாக இருக்கிறது. இந்தச் சொற்களின் எல்லைக்குள் வைத்து பார்க்கப்படவேண்டியவர் தான் என்று நானும் நினைக்கிறேன். இதற்குக் காரணம் நாகரீக மற்றது என்று பொதுவாகக் கருதப்படும் விஷயங்களையும், ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதப்படும் வார்த்தைகளையும் தான் அவர் தன்னுடைய எழுத்துக்களில் உயயோகிக்கிறார். 
இருந்தாலும் அவர் எப்போது என்ன எழுதினாலும் முதல் பக்கத்தின் மேலே பிஸ்மில்லா என்பதைக் குறிக்கும் 786ஐ எழுதி விட்டுத்தான் எதையும் எழுதத் தொடங்குகிறார். இந்த மண்ட்டோ, மதநம்பிக்கை அற்றவன் என்று அறியப்படுகிறவன் காகிதத்தில் மதநம்பிக்கை உள்ளவனாகவும், ஓர் இறைவிசுவாசியாகவும் மாறிவிடுகிறார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள். அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்தமட்டுமே செய்கிறேன்".

என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். 

                                 - சாதத் ஹசன் மண்ட்டோ. 

என்று மண்ட்டோ சொல்லிருக்கிறார். ஓகே கருத்தில் எடுத்துக் கொள்வோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

---------------------------------------------
Reading Marathon 2021 
38/50 
ID : RM 00211
புத்தகம் : அவமானம்
தமிழாக்கம் : ராமாநுஜம்
பக்கங்கள் : 96 
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
----------------------------------------------------
~சரண்யா

நன்றி :

Ms சரண்யா M, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: