திருமந்திரம் -பாடல் #1318: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
சீவிப் பதன்முன்னே தேவியையுத் துவாகனத்தாற்
பாவித் திதைய கமலத்தே பதிவித்தங்கி
யாவற்கு மெட்டா வியந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்தெதுந் தருமே.
விளக்கம்:
பாடல் #1317 இல் உள்ளபடி போற்றி வணங்கும் சாதகர் தமக்கு முன்பு எண்ணத்தில் இருக்கும் இறைவியை மனதில் உறுதியோடு உருவமாக இருக்கின்றவளை அருவமாக மாற்றி பாவித்து இதயத் தாமரையில் நிலை பெறச் செய்ய வேண்டும். அதன் பிறகு அவளின் நன்மை தரும் நெருப்பு உருவத்தோடு எவருக்கும் எளிதில் கிடைக்காத புவனாபதி சக்கரத்தின் அதிபதியாகிய இறைவனையும் சேர்த்து வைக்க வேண்டும். இப்படிச் சேர்த்து வைத்திருக்கும் சக்கரத்திலிருந்து கிடைக்கும் சக்தியை சேமித்து வைத்தால் சாதகர் நினைத்தது எதுவாக இருந்தாலும் அதை புவனாபதி சக்கரம் தந்து அருளும்.
இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://kvnthirumoolar.com/song-1318/
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக