24 நவ., 2021

நூல் நயம் : மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

மானுடம் வெல்லும்’ எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச்-- -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்நாவல்.

'இந்தியாவின் பெப்பிஸ் (Pepys)' என்று அழைக்கப்படும் ஆனந்த ரங்கப்பிள்ளை, தாம் கண்டு, கேட்ட அரசியல் நிகழ்ச்சிகளை 1736 தொடங்கி 1761 வரை தினமும் தொடர்ந்து எழுதி வைத்திருக்கிறார். ( http://en.wikipedia.org/wiki/Ananda_Ranga_Pillai )  தமிழுக்குக் கிடைத்த மாபெரும் செல்வமான அவரது தினக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டவை  இந்தப் புதினம்.  பிரபஞ்சனே குறிப்பிடுவது போல "இக்காலக் கட்டத்து உழைக்கும் மக்கள், நிலச்சுவான்தார்கள், அதிகாரிகள், தாசிகள் ஆகியோரது வாழ்வும் மற்றும் அவர்களின் உணவு பழக்கங்கள் ஆகியவை எவ்வாறு இருந்தது என்கிற கலாபூர்வமான, இலக்கிய ரீதியான விமர்சனமே இந்த மானுடம் வெல்லும்.

பிரபஞ்சனின் மிகவும் வசீகரமான மொழி ஆளுமைக்காகவும் அவசியம் வாசிக்கப் பட வேண்டிய நூல்.   ஒரு நிகழ்வு முடிந்ததும், அதை அடியொற்றி, அதன் தொடர்ச்சியை, அடுத்தக் காட்சியில், நிகழ் கதையில் விவரிப்பதாக ஓர் அற்புதமான நடை.  மக்கள் பேசிய அன்றைய வட்டார வழக்கு, நம்மை அப்படியே ஒன்றிவிடச் செய்யும் வர்ணனைகள்.

மனித நுண் உணர்வுகள், அரசியல் சூழ்ச்சிகள், சமூக அவலங்கள்,  எனப் பலத் தளங்களில் இயங்கும் இந்த நாவல், எழுத்தாளரின் மொழிவீச்சை மோகிக்க வைக்கிறது.  நாவலில் அங்கங்கே, ஆனந்தரங்கரின் வாய் மூலமாகவே, அவர் தினக்குறிப்பைப் படிக்க வைக்கிறார் ஆசிரியர். தினக்குறிப்பின்  அந்தக் காலத்து மணிப்பிரவாள நடை படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. 📚🎬♥️✒️

Check out : Instagram @films_and_literature

நன்றி :

திரு கலை ரசிகன், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல் 

கருத்துகள் இல்லை: