29 நவ., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் #1320


திருமந்திரம் - பாடல் #1320: நான்காம் தந்திரம் - 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

விளக்கம்:

'ஸௌம்' எனும் அட்சரம் முதலாக 'ஔம்' எனும் அட்சரத்தோடு சேர்த்து 'ஹௌம்' எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் 'கௌம்' எனும் அட்சரத்தின் உள்ளும் 'ஐம்' எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து 'ஹ்ரீம்' எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்' எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு 'ஓம்' எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற 'க்லீம்' எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1320/

நன்றி :

கருத்துகள் இல்லை: