29 நவ., 2021

நூல் நயம் : சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்


பலத்த கனத்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன்.

இந்த புத்தகத்தினை எழுதியவர், இதனை பிழைகள் சரி பார்த்தவர், அச்சிட்டவர்கள் என இந்த புத்தகத்திற்கு சம்மந்த பட்டவர்கள் அனைவரும் எப்படி இதனை எழுதி, வாசித்து கடந்து வந்தார்கள் என்று என்னால் யோச்சிக்க கூட முடியவில்லை.

சோளகர் தொட்டியைச் சேர்ந்த மக்களும், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அப்பாவி மக்களும், இந்த உலகத்தில் எந்த விதமான சித்ரவதைகள் இருக்கின்றனவோ என்று எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு துன்புருத்தப்பட்டிருக்கின்றனர்.

ஜெய் பீம், கர்ணன், விசாரனை என சில படங்கள் lockup death பற்றி பேசியுள்ளது. போலீசாரின் வெறியாடலை பற்றி வெளிச்சம் போட்டும் காட்டியுள்ளது. இந்த படத்தையே பார்த்து முடித்து வெளியே கடந்து வர ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். இந்த புத்தகத்திலுள்ள கால் பாகம் கூட அந்த படங்களில் காட்டவில்லை. அதுவே என்னை மனதளவில் மிகவும் பாதித்திருந்தது.
இப்போது நான் இருக்கும் மன நிலையை என்னால் எழுத்துக்களால் எழுத முடியவில்லை. 

பாகம் இரண்டு ஆரம்பித்தபோது வேகமாக துடிக்கத் தொடங்கிய என் இதய துடிப்பு இன்னும் நிற்கவில்லை. மாலை 8.15 போல ஆரம்பித்தேன். இப்போது இரவு 2.16 இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் என் இதய துடிப்பு சத்தம் என் காதுகளில் கேட்கின்றது. என்னால் அழ கூட முடியாத ஓர் மன அழுத்தத்தை இந்த புத்தகம் தந்துள்ளது.

என் மனதிற்குள் வெற்றிமாறனா யார் என்று சரியாக நினைவில்லை. அவர்தான் என்று நினைக்கிறேன். அவர் சொன்ன இந்த வார்த்தைகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருவர் அவரிடம் ஏன் நீங்கள் உங்கள் படங்களில் போலீசாரை கெட்டவர்களாகவே காட்டுகிறீர்கள்? போலீசார்கள் அனைவரைமே கெட்டவரகள் தானா? அதில் நல்லவர்கள் யாரும் இல்லாயா? என்று கேட்பார்.

அதற்கு அவர் “நான் என் வாழ்க்கைல எத பாத்தேனோ அத தான் படமா எடுக்க முடியும்.  இது வரைக்கும் என் வாழ்க்கைல பாத்த போலீசெல்லாம் இப்டி தான் இருந்திருக்காங்க. சப்போஸ் நல்ல போலீஸ பாத்தா நான் என்ன மாத்திக்குறேனு” சொல்லுவார்.

இது நிதர்சனமான உண்மையும் கூட. இங்கு பலர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜெய் பீம் படத்தில் பல காட்சிகள் இந்த புத்தகத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். அதில் வரும் ராஜாகண்ணு, சுவாதியின் வழக்கில் கொல்லப்பட்ட ராம்குமார், ஜெயராஜ், பெனிக்ஸ் என் நமக்கு தெரிந்த சில. நமக்கு தெரியாத எத்தனை சோளகர் தொட்டி அழிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை ராஜாகண்ணுக்களும் அவர்களின் மனைவிமார்களும் மகள்களும் மானபங்கம் படுத்தப்பட்டு புணரப்பட்டு ரத்தத்தை உரிந்து வெரும் சக்கைகளாக வீசப் பட்டிருக்க வேண்டும்?

என் கைகள் எல்லாம் நடுங்குகிறது 💔

நன்றி :

கருத்துகள் இல்லை: