48' மணி நேரத்தில் நடப்பதாக புனையப்பட்ட... நாவல்...
அனந்தன் காடு எனும் பத்மநாபபுரம் (திருவனந்தபுரம்)
தன் அத்தனை அழகுடனும், சந்தடிகளுடனும் நாவலின் ஒரு கதாபத்திரமாகவே இருக்கிறது...
அந்நகர் மக்களின் வாழ்வியல் முறைகளும், கோட்டைகளும், தம்புராட்டிகளின் அரண்மனைகளும், கடற்கரையும், தறவாட்டு வீடுகளும்... நாம் நேரில் போய்ப் பார்த்தாலும் கிடைக்காத பிரமிப்பையும் அனுபவத்தையும் தருகின்றன...
நேர்த்தியான கதையின் போக்கும்...
எளிமையான மொழி நடையும்
நம்மை ஆச்சர்யப்படுத்தும் அதே வேளையில்...
நாவலின் மைய பாத்திரமான அனந்தன் நாயரின் மனம் அகத்திலும், புறத்திலுமாக மாறி மாறி சஞ்சரிக்கும் போது நாமும் அவருடனே பயணிப்பதுபோல் ஒரு நெருக்கத்தை இந்நாவலின் உள்ளே பிரவேசிக்கும் போது நம்மால் உணரமுடிகிறது...!
இந் நாவலை வாசித்து முடித்து விட்டேன்... என்பதை விட
கதையின் ஊடே அனந்தன் நாயரோடு நானும் பயணித்து 48' மணி நேரங்களை கடந்திருக்கிறேன்
என்பதே சரியாகும்...!
நாவலை மு(ப)டித்தபின்...
நம் மனதில் சில நூறு கேள்விகளும்,
அனந்தன் நாயரின் மனதில் ஆயிரம் பதில்களும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது...!!!
இந் நாவலின் தாக்கம் வெகு நாளைக்கு... வாசிப்பவர் மனதில் இருக்கும்...!!!
#நல்ல_வாசிப்பனுபவம்... 👌
நன்றி :
ஜே கே எனும் நான்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக