7 நவ., 2021

நூல் நயம் : தமிழ் விருந்து - ரா.பி.சேதுப்பிள்ளை


RM.072
300/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி :

பன்னிரண்டாம் வாரம்: பழந்தமிழ் இலக்கியங்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள்:.  5
                  மொத்தம்.              134

 " தமிழ் விருந்து."
ரா. பி .சேதுப்பிள்ளை .
பாரி புத்தகப் பண்ணை வெளியீடு .
முதல் பதிப்பு 2009 இரண்டாம் பதிப்பு 2012 நூலின் விலை 50 ரூபாய் .
மொத்த பக்கங்கள் 160.....

ஆசிரியர் குறிப்பு:

        ரா பி சேதுப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரம் கிராமத்தில் பிறந்தவர்.

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் 25 ஆண்டுகள் தமிழ் பணியாற்றினார் .சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் .
         சொல்லாராய்ச்சியில் வல்லவர் .எதுகை மோனையை வைத்துப் பேசும் ஆற்றல் உடையவர்.மொழி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் .எழுத்திலும் பேச்சிலும் இணையற்ற ஆற்றலுடையவர்.
           தமிழ் இன்பம் என்ற நூலுக்கு முதல் முதல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் .திருவள்ளுவர் நூல் நயம் ,சிலப்பதிகாரம் நூல் நயம் ,
வீர மாநகர், தமிழ் விருந்து ,தமிழக ஊரும் பேரும் போன்ற 25 நூல்களை எழுதியுள்ளார்.
      வள்ளுவர் இளங்கோ கம்பர் பாரதி நால்வரிடத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். இடைக்காலத்தில்  கம்ப ராமாயண எரிப்பு போராட்டம் என்ற நிலையில் தீ பரவட்டும் என் அண்ணாதுரை அவர்கள் எழுச்சி பெற்றபோது எதிர்த்து போராடி பேசியவர் .
      கம்பராமாயணத்தில் மிகுதியான ஈடுபாடு உடையவர் .
ரா.பி .சேதுப்பிள்ளையின் ஆற்றங்கரையிலே 1961 இல் வெளிவந்தது .இதுவே இறுதி ஆகும் . அவர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைக்கு மட்டுமன்றி இந்திய மொழிகள் அனைத்திற்கும் அரும் துணையாய் பெரும் வழிகாட்டியாகவும் விளங்கினார் .தருமை ஆதீனம் சொல்லின் செல்வர் என்ற பட்டத்தை வழங்கியது. தமிழ் இன்பம் என்பது விடுதலைக்குப்பின் வெளிவந்த சிறந்த தமிழ் நூல் என்பதற்காக மத்திய அரசிடம் ரூபாய் அழகு ஆயிரம் பரிசு பெற்றது.

   
##₹₹#₹₹######

         முகவுரை என்று கீழ்கண்டவாறு ரா பி சேதுப்பிள்ளை அவர்கள் கூறுகிறார் :
        இலக்கிய பசி இப்போது தமிழ்நாட்டில் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாக கொள்வர் .அந்த வகையில் வந்தது இந்த தமிழ் விருந்து .

        தமிழ் கலைகளின் தன்மை ,தமிழ் இலக்கியத்தின் சீர்மை ,தமிழ் மொழியின் செம்மை, தமிழர் வாழ்க்கையில் மேன்மை இவை நான்கு கூறுகளாகப் இந்த நூலில் காணப்படும் .
           வானொலி நிலையத்தில் பேசிய 18 பேச்சுகள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன என்கிறார் ரா பி சேதுப்பிள்ளை அவர்கள்.

######
இந்த நூலில் மொத்தம் 20 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
​கலையும் கற்பனையும் .
​புராதன போர் --படை எடுப்பு .
​போர்க்களங்கள் .
​ஆகாயவிமானம் .
​வாழ்கையும் வைராக்கியமும் .
​புற நானூறு.
​சிலப்பதிகாரம் 
​மணிமேகலையும் மதுவிலக்கும் .
​நளவெண்பா .
​நகைச்சுவை .
​தமிழ் நாட்டாரும் அயல்நாட்டாரும்.
​தமிழ்மொழியும் பிற மொழியும் -- தெலுங்கு .
​தமிழ் மொழியும் பிற மொழியும் -- மலையாளம் .
​தமிழ்மொழியும் பிற மொழியும் -- கன்னடம் .
​இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை .
​தமிழ் இலக்கியத்தில் கண்ட அரசு .
​தமிழ் இலக்கியத்தில் கண்ட அமைச்சு .
​தமிழ் இலக்கியத்திற்கு கண்ட தூது.
​தமிழ் இலக்கியத்தில் கண்ட பக்தி .
​தமிழ் இலக்கியத்தில் கண்ட கடவுள். என்று 20 கட்டுரைகள் உள்ளன .படிக்கப் படிக்கச் சுவை மிகுந்தவை.
#######

1) கலையும் கற்பனையும்:
   கலைச் செல்வமே ஒரு நாட்டின் செல்வத்துள் எல்லாம் சிறந்த தலை சிறந்த செல்வம் அந்தச் செல்வம் என் எழுத்து என்னும் இரு வகைகள் அடங்கும் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப என்பது திருவள்ளுவர் வாக்கு இவற்றுள் காவியம் ஓவியம் முதலிய கலைகள் கற்பனையில் இன்பம் பயக்கும் கற்பனை நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும் என்று ஆசிரியர் கற்பனை எல்லாம் ஒருவருக்கு பயனளிக்கும் என்று அற்புதமாக விளக்கிச் செல்கிறார்.
ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே. 
                            குறி -மலை 
        யாள மின்னல் ஈழ மின்னல் சூழ    
                             மின்னுதே 
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்   
                  காற்றடிக்குதே -- கேணி 
          நீர் படுசொறித்தவளை கூப்பி டுகுதே சேற்று நண்டு சேற்றில் வாளை   
                             ஏற்றடைக்குதே -- மழை 
       தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம்   
                                     பண்ணைச் -- சேரி             
       புள்ளிப்பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக்   
                            கொள்வோமே "
என்ற பாட்டு உழவர் உள்ளத்தை தெள்ளிதின் உணர்த்துகின்றது.

       பூவின் பல பருவங்களை தமிழ் நூல்களில் காணலாம் .
        அரும்பு முதல் பருவம் ,முகை அடுத்த பருவம் ,போது அதற்கு அடுத்த பருவம் ,போது விரிந்த நிலையில் மலராகும் .இந்த நான்கு பருவங்களில் மூன்று திருவள்ளுவர் பாட்டிலே குறித்துள்ளார்.
* காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் *
என்ற குறளில் அரும்பு போது மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாக குறிக்கப்பட்டுள்ளன .

     மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராக பெண்களை கருதினர் தமிழ் நாட்டுக் கவிஞர் .இதனாலே பூவை என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவது ஆயிற்று .
        கற்பனை  எப்படி எல்லாம் பேசுறது பாருங்கள்.

2) புராதன போர்-- படை எடுப்பு.:

     இந்த காலத்தில் நடந்து வரும் பெரும் போரால் விளையும் எல்லையற்ற தொல்லையை அறியாதார் யாரும் இல்லை.
       உலகம் முழுவதையும் அலைத்துக் குலைத்து வருகின்ற இந்தப் போரின் கொடுமையை காண்பவர்கள் , முற்காலத்தில் நிகழ்ந்த போர்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்புதல்  இயற்கையே ஆகும்.

தமிழ் வேந்தர் பகைவரது நாட்டின் மீது படை எடுக்கும் போது சிறந்த பூ மாலைகள் அணிந்து இருப்பார்கள் .
     மூவேந்தர்கள் ஆகிய சேர சோழ பாண்டியர்கள் வெவ்வேறு மாலைகளை அடையாளமாக அணிந்திருந்தார்கள் .
சேர மன்னனுக்கு பனந் தோட்டு மாலையும் ,பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலையும் ,சோழ மன்னனுக்கு ஆத்தி மாலையும் அடையாள மாலைகள் என்று அறிகின்றோம் .
       இந்த அடையாள மாலையோடு வேறுவிதமான பூ மாலைகளும் படையெடுக்கும் அரசர்கள் அணிவதுண்டு.
             பகையரசன் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் கருத்தோடு படையெடுக்கும் அரசன் குறிஞ்சிப் பூ மாலை சூடி இருப்பான் .
மாற்றரசன்  கோட்டையை முற்றுகை செய்யக் கருதி படையெடுக்கும் மன்னவன் உழிஞே  மாலை அணிந்திருப்பான் .
     வீரப் புகழை விரும்பி படையெடுக்கும் அரசன் தும்பைப் பூ மாலை தரித்து இருப்பான் .
     ஆகவே மன்னர்கள் அணிந்திருக்கும் மாலைகளை கண்டு அவர் மனதில் அமைந்த கருத்தை மற்ற அரசர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் .

       போர்க்களத்தில் வெற்றி பெறுகின்ற வேந்தர்கள் வாகை மாலை சூடுதல் வழக்கம்.
3) போர்க்களங்கள்:

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் நடந்த ஒரு போர் குறித்து 
 பார்ப்போம் .பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் சேனைக்கும் மற்றொரு சேனைக்கும் பெரும் புகழ் பெரும் போர் நடந்தது. பாளையக்காரர் தம்பியாகிய ஊமைத்துரை என்பவன் அந்த சேனையை எதிர்த்துப் போர் செய்தான்.
அந்தச் சூழ்நிலையில்  மகனே தேடிக்கொண்டு ஒரு தாயை வந்து , கண்டுபிடித்தாள்.
உயிரோடு போராடிக் கொண்டிருந்த மகனை மீட்டு தன் வீட்டுக்குக் கொண்டுவர  எத்தனிக்கும் போது அடிபட்டுக் உயிருக்கு போராடி கொண்டிருந்த வீரன்,"என்னை எடுத்துச் செல்வதால் யாது பயன் ?நம் படைத் தலைவராக உள்ளார்
ஊமைத்துரை அவர்களை எடுத்துக்கொண்டு போய் காப்பாற்று",என்று உருக்கமாக வேண்டினார் .
    அந்த உரை கேட்ட தாய் மனம் உருகினார் .தன் மகனது அரும்பெரும் தியாகத்தினால் அவன் விரும்பியவாறு துரையை கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினாள்.

      தனக்கென வந்த தண்ணீரை தண்ணீர் தாகம் உடைய ஒரு போர் வீரனுக்கு அளித்த அழியா புகழ் பெற்றான் ஆங்கில வீரன் .அவ்வண்ணமே தன்உயிர் காக்க வந்த தாயை தலைவனிடம் அனுப்பி அவனுயிர் காத்து தன் உயிர் துறந்த தமிழ் வீரன் தியாகம் வியக்கத்தக்க ஒன்று.

4) ஆகாய விமானம்:
பறக்கும் கோட்டைகளை குறித்து ஒரு பழந்தமிழ் கவிஞர் பாடியுள்ளார் .
       ஆகாயத்தில் இயங்கிய அக்கோட்டை தொகையில் என்று பெயர் பெற்றுள்ளது பழக்கம் கோட்டை * தூங்கெயில் *
என்று பெயர் பெற்றிருந்தது.
      பறக்கும் கோட்டையின் உள்ளே இருந்து பகைவன் நாடு நகரங்களை தாக்கி பாழாக்கினான்.அந்தப் பொல்லா பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்.
    அவன் ஓடிச்சென்று , ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டைகளை ஒரு படை கலத்தால் அழித்து ஒழித்தான் .
   அவ்வீரனைத் * தூங்கெயில் 
 எறிந்த தொடித்தோட் செம்பியன்* என்று தமிழ்நாடு போற்றி புகழ்வதில் பரவசம் கண்டது.
     அந்த மன்னன் கையாண்ட படைக்கலம்
என்ன  என்று இப்போது தெரியவில்லை.

         ஒரு மன்னன் இங்குமங்கும் பறந்து செல்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சிறு விமானம் கண்டு பிடித்தான்.
 மயில் போன்ற அமைப்பை அதற்கு வடிவமைத்தான்.
     தனது மனைவியை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் பறந்தான்.மனைவிக்கும் மகாராணிக்கும் எப்படி பறப்பது என்கிற வித்தையை சொல்லிக் கொடுத்தான்.
         இந்த நிலையில்  பல நாடுகளை வென்ற அரசன் அமைச்சரிடம் அரச பாரம் தந்து நீ பார்த்துக்கொள் நான் ஓய்வெடுத்துக் கொண்டேன் என்று சொல்ல,மதி கெட்டு போன அரசன் வஞ்சக மந்திரியின் சூழ்ச்சியல் விழுந்தான் .மந்திரி எல்லா படைகளையும் தன் கை வசப்படுத்தி சான்றோர்களையும் மக்களையும் தன் பக்கம் வென்று அரசனை அவனது பதவியில் இருந்து கீழே இறக்கினான் .
     வஞ்சகத்தை புரிந்து கொண்ட அரசன் தனது மனைவியை நோக்கி நீ தப்பித்து சென்று விடு இந்த ஆகாய விமானத்தில் .நான் பிறகு வந்து உன்னை காண்கிறேன் . நான் வென்று வருவேன் என்று அவனை எதிர்கொள்ள புறப்பட்டான் .சண்டமாருதம் நடைபெற்றது .இறுதியில் அரசன் இறந்து போனான் .
            சான்றோர்கள் ஆன்றோர்கள் அரசனுக்கு எரியூட்டினர் சுடுகாட்டில் .அப்போது பறந்து கொண்டிருந்த மகாராணிவிமானத்தை தரையிறக்கி விழுந்த வேகத்தில் அவள் மகவு ஒன்று ஈன்றாள்.
கண்ணீர் விட்டு அழுதாள் .அரண்மனையில் பிறக்க வேண்டிய மகன் நீ இந்த சுடுகாட்டில் பிறக்கலாமோ  என்று கண்ணீர்விட்டு அழுகிறாள் .
*
அவன்தான் சிவகன் .
சீவக சிந்தாமணியின் கதாநாயகன் ,தலைவனாய் ஆயினான்.

5) வாழ்கையும் வைராக்கியமும்:
வைராக்கியம் என்று சொன்னவுடனே மூண்ட வைராக்கியம் நினைவுக்கு
வரும்..
    புராண வைராக்கியம் மற்றொன்று மயான வைராக்கியம் மேலும் ஒன்று பிரசவ வைராக்கியம்.
    சமய வைராக்கியம் போலவே சமுதாய வைராக்கியமும் உண்டு . தாழ்ந்தோரை உயர்த்துவோம் என்றும் தாய் மொழிக்கு தொண்டு செய்வோம் என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும் உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர்கள் அல்லவா .இத்தகைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால் வருந்த மாட்டார்கள் ;போற்றினால் மகிழவும் மாட்டார்கள் .
   நயத்தினாலேனும் , பயத்தினாலேனும்  அவர் மன உறுதியை மாற்ற முடியாது .அவர்களே நினைத்ததை முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் .

*எண்ணிய எண்ணியாங்கு எய்துப   
           எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின் *
என்பது திருக்குறள்.

6) புறநானூறு:
செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக் காட்ட உணவுகளில் உள்ள வங்கி ஒன்றில் பல புலவர்கள் பலரை பற்றி பல காலத்தில் பாடிய பாட்டுக்கள் அந்த நூலில் காணப்படும் அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருள்களை அறத்தையும் பொருளையும் பற்றிய நானூறு பாட்டுக்கள் திருத்தப்பட்டு இருப்பதால் அந்த நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது உன்னுடைய பெருவேந்தர் காலம் வாழ்ந்த கொத்தவரை காணலாம் கற்று அறிந்து அடங்கிய சான்றோரை காணலாம் சுருங்கச் சொன்னால் கலைமகளும் திருமகளும் பணிபுரிந்த பண்டைத் தமிழ்நாட்டைப் கீழே காணலாம்.
7) சிலப்பதிகாரம்:
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுவதால் இளங்கோவின் மனத்தில் அமைந்த கொள்கை இது விளங்குகிறது கண்ணகியின் சிலம்பு காரணமாக விளைந்த காரணத்தினால் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அந்த காவியத்திற்கு பெயரிட்டார் .

​8) மணிமேகலையும் மதுவிலக்கும்:
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மதுவிலக்கை மதுவிலக்கு பிரச்சாரம் செய்கின்ற தமிழ்நாட்டில் முன்னொரு காலத்தில் மணிமேகலை காப்பியத்தின் மூலமாக மதுவிலக்கு பிரச்சாரம் செய்யப்பட்டதை அறியலாம்.
*மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் மயக்குறு மாக்கள் கடிந்தனர் கேளாய் நல்லறம் செய்வோர் நல் உலகடைதலும் அல்லறம் செய்வோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர்     
            களைந்தனர்*,
என்று சாதுவன் எடுத்து உரைத்த ஒரு சரித்திரம் உண்டு

9) நளவெண்பா:
வெண்பா என்று சொன்னாலே நளவெண்பா தான் நினைவுக்கு வரும் .அதுவும் புகழேந்தி எழுதிய நளவெண்பா. நளன்  குறித்த செய்திகள் குறித்து எழுதப்பட்ட ஒரு செய்யுள்.
        நளன் கதை நாடறிந்த கதை. இந்த பழங்கதை வடமொழியிலுள்ள பாரதத்திலும்,  தமிழ் மொழியிலுள்ள சிலப்பதிகாரத்திலும் நளன் கதை குறிப்பிடப்படுகின்றது .எனவே அதன் தொன்மையை அரிய சான்று தேவையில்லை.
  
       தமயந்தியை நோக்கி அன்னத்தை தூது விடுக்கின்ற நலனி இவ்வாறு பாடுகிறார் :
* இற்றது நெஞ்சம், எழுந்தது இருங்காதல் அற்றது மானம் அழிந்தது நாண்-- மற்றினிஉன் 
 வாயுடைய என்னுடையது வாழ்வென்றான்.*

பஞ்சபாண்டவருள்  தருமன் அத்தன்மை வாய்ந்தவர் என்று நளவெண்பா கூறுகிறது.
 மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர்    
        வந்துற்றாலும் 
 ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே*

என்று வியாசமுனிவர் வாயிலாக புகழேந்தி புலவர் தருமரைப் பாராட்டுகின்றார். இரு கவிகளின்  சொல்லும் பொருளும் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறோம்.
10) நகைச்சுவை:
இலக்கியத்தில் நகைச்சுவை இல்லாமல் இலக்கியச்சுவை இல்லை என்பதையும் உதாரணங்களோடு ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
11) தமிழ்நாட்டாரும் அயல் நாட்டாரும்.
தமிழ்நாடு தவிர மற்ற தேசங்கள் நமது அயல் நாடு ஆகும் . ஆந்திரா தேசத்தில் உள்ளவர்களை வடுகர் என்றார்கள் . வடுகன் தமிழ் அறியான் என்ற வாசகம் தமிழ்நாட்டில் உண்டு .வடுகன் என்ற சொல்லுக்கு வடக்கு உள்ளவர் என்பது பொருள் .
    திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழரைத் தெலுங்கர் , அருவர் என்று அழைத்தார்கள். நாளடைவில் அருவர் என்பதை சிதைந்துஅரவர்  என்றாயிற்று .
    அரவம் என்பதே தமிழுக்கு பெயராக அமைந்தது .அரவர் என்ற பெயர் எவ்வாறு தமிழை தமிழர்களை குறிப்பதாயிற்று என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

12) தமிழ்மொழியும் பிற மொழியும் தெலுங்கு.:
பாரத நாட்டிலே பற்பல தேசங்கள் உண்டு தேசங்கள் தோறும் பாஷைகள்வேறு வடநாட்டு மொழிகளில் ஆரிய மொழி என்றும் தென்னாட்டு மொழிகளை திராவிட மொழிகள் என்று கூறுகிறார் .திராவிட வகையை சேர்ந்த தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழ் தாயின் பிள்ளைகள் என்று வாதிடுகிறார் சிலர்.
முகில் என்பது தெலுங்கில் மொகிலு
 என்றும் கன்னடத்தில் முகில் என்றும் துளு முகல்  என்றும் காணப்படுகிறது.
நேற்று என்பதும் இறப்பு என்பதும் தெலுங்கில் ரேப்பு ஆனது.

சிறப்பு எழுத்தாகிய ழ கரமும் பல தெலுங்குச் சொற்களில் ட கரமாக மாறியிருக்கிறது . ஏழு என்பது ஏடு,, கோழி என்பது கோடி மேழி என்பது மேடி ,பவழம் என்பது பவடம் இவ்வாறு இன்னும் பல.

13) தமிழ் மொழியும் பிற மொழியும் மலையாளம்.:
மலையாள தேசம் ஒரு காலத்தில் சேர நாடு என்று பெயர் பெற்றிருந்தது.
அன்பின் வழியது என்ற குவளில் என்பு என்பது எலும்பை குறிப்பு .கன்னடத்தில் எலு  என்றார்கள். எல்என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும்.
வண்ணான் என்பது மண்ணான் மலையாளத்தில்.
இதுபோலவே ஏராளமான உதாரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

14) தமிழ் மொழியும் பிற மொழியின் கன்னடம்:
தமிழில் உள்ள பூ புல்,புலி பல்லி பத்து இவை போன்ற சொற்கள் கன்னடத்தில் ஹுவு,ஹோல்லு,ஹோலி , ஹல்லி ,
ஹத்து  என்று வழங்கப்படுகிறது.
 இன்னும் இதுபோல பல சொற்களை உதாரணங்கள் கொண்டு ஆசிரியர் எழ்தி இருக்கிறார்

15) தமிழ் இலக்கியத்தில் கண்ட  அரசு:
அந்த காலத்தில் தமிழ்நாட்டில் அரசனுக்கு எவ்வளவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதை பல உதாரண செயல்கள் கொண்டு ஆசிரியர்களுக்கு இருக்கிறார்.
*உறங்கு மாயினும் மன்னவன் தன்ஒளி
தெண்டிரை வையகம் காக்குமால்*
 என்று சிந்தாமணி கூறுகின்றது .

அரசனிடம் தெய்வத்தன்மை அமைந்திருந்த அதனால் அன்றோ திருவாய்மொழி உடையார் ,
*திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்*
 என்று திருவாய் மலர்ந்தருளினார் .
ஆகவே அரசனே, அச்சம் தீர்ப்பவன் அறம் காப்பவன் முறை செய்பவன் குறை தீர்ப்பவனே இறைவன் ஆகும்
 என்பது தமிழ் இலக்கியத்தில் கண்ட கருத்து.

16) தமிழ் இலக்கியத்தில் கண்ட அமைச்சு:
அரசாங்கம் இல்லாத நாடு இந்த காலத்தில் இல்லை அரசனுக்கு உரிய ஆறு அங்கங்களில் ஒன்று அமைச்சு என்று திருக்குறள் கூறுகிறது
 அமைச்சர் என்றாலும் மந்திரி என்றாலும் பொருள் ஒன்றே .மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்ற வாசகம் நம் நாட்டில் வழங்கி வருகின்றது..
 அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ,அவர்கள் பணி என்ன ,அவர்கள் அரசனை அறிவுறுத்திய விதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

17) தமிழ் இலக்கியத்தில் கண்ட தூது:
இந்த நாட்டில் தொன்றுதொட்டு தூது என்பது உண்டு. அரசர்கள் தூது அனுப்பினார்கள் .அன்பர்கள் தூது விடுத்துள்ளார்கள் .புலவர்கள் தூது  போக்கி உள்ளார்கள் .ஞானிகளும் தூது முறையைக் கையாண்டிருக்கிறார்கள் என்றால் அதன் தன்மை தெளிவுரை விளங்கும் .
அரசர்க்கு உரிய சில அங்கங்ளில் இதுவும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார் .
இருவருக்கு இடையே மாறுபாடு நிகழ்ந்தால் அந்த ஏக்கத்தை தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு தூதற்கே உரியதாகக் கூறப்படுகின்றது .
     இதனாலேயே அன்பும் அறிவும் ஆராய்ந்த சொல்வன்மை சொல் வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலன்கள் என்று திருக்குறள் கூறுகிறது .இத்தகைய பெருமையை காவியங்களிலும் காணலாம்.
இவ்வாறு தூது செல்பவர் குறித்த பெருமையை ஆசிரியர் அழகாக எழுதி செல்கிறார்.
18) தமிழ் இலக்கியத்தில் கண்ட பக்தி:
        இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இந்த உலகத்தில் பெருமை வெற்றி வழங்கிற்று .தமிழ்நாட்டு செல்வம் பிற நாட்டவரால் நன்கு மதிக்கப் பெற்றது .திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவர் தமிழர்.
        கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழ்நாட்டின் கொள்கையாக அமைந்திருந்தது .மன்னரும் செல்வரும் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். தஞ்சாவூர் ராஜராஜ சோழன் பெரிய கோயிலை கட்டி முடித்தான்.
      அவன் மைந்தனாகிய கங்கை கொண்ட சோழன் தன் பெயரால் அமைந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறந்ததொரு ஆலயம் எடுத்தான் .

       கோயில் எங்கும் தோன்றிய பொழுது சிற்பக் கலை சிறந்து வளர்ந்தது .ஓவியக்கலை உயர்வடைந்தது .இசையும் நடனமும் ஏற்ற முத்தன .தமிழ்நாடு தெய்வ மணமும் கலை மணமும் ஒருங்கே கமழும் திரு நாடாகத் திகழ்ந்தது என்று இன்னும் பல செய்திகளை ஆசிரியர் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
19) தமிழ் இலக்கியத்தில் கண்ட கடவுள்:
          தெய்வம் உண்டு என்று சாதிப்பாரும்,இல்லை என்ற வாதிப்பாரும்
இந்த உலகில் எந்த நாளும் உண்டு .தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தெய்வம் இல்லை என்பார் மிகச் சிலரே .தெய்வத்தை முன்னிட்டு எந்த வேலையையும் தமிழ்நாட்டார் தொடங்குவார்கள் .வேலை இல்லாமல் வெறுமையாக இருக்கும் பொழுதும் சிவனே என்று இருப்பார்கள் .அல்லது தெய்வமே என்று இருப்பார்கள் .தெய்வத்திற்குரிய கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்பமாட்டார்கள் .கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது இந்த நாட்டுப் பழமொழி.

      சமயச் சண்டை இந்த காலத்தில் அவ்வளவாக இல்லை .அந்த காலத்தில் சொல்லொணாத் துயரம் தந்தது .
    சமரச சன்மார்க்கமே இந்த நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம் .
   தர்க்கமும் குதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானவர் .,
*தர்க்கம் இட்டு  பாழாம் சமய குதர்க்கம் விட்டு
நிற்க்கும் அவர் கண்டவழிநேர் பெறுவது எந்நாளோ *என்று பாடினார் அந்தப் பெரியவர் .

    அந்த நாளே தமிழ்நாட்டுக்கு நன்னாள் ஆகும் என்று ஆசிரியர் ஏங்கி உரைக்கிறார்.

தமிழ் விருந்து சுவைக்க சுவைக்க இனிமையாக இருக்கிறது

நன்றி :

கருத்துகள் இல்லை: