5 நவ., 2021

நூல் நயம் : திருவாசகம் ‌: மாணிக்கவாசகர் (விளக்கவுரை: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்)


#ஆண்டுவிழாவாசிப்பு 
#வாரம்_12
#பழந்தமிழ்இலக்கியங்கள் 

புத்தகம் : திருவாசகம்
ஆசிரியர் ‌: மாணிக்கவாசகர்
விளக்கவுரை: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
பதிப்பகம் : ராமகிருஷ்ண தபோவனம்

சிவாலயங்களில் ஒலி வடிவமாகக் கேட்டுக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டு பள்ளி காலத்தில் தேடி ஒரு பெயர் தெரியாத பாடல்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பாடல் திருவாசகத்தின் ஒரு பாடல் எனத்‌ தெரிந்த பிறகு வாங்கிய புத்தகம்.

வாசித்து முடிக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நேரம் எடுத்து அனுபவித்துப் படித்த புத்தகம். 

இலக்கியம் வழியே இறையைத் தேடவும் அறிந்து கொள்ள முடியும் எனப் புரியவைத்தது...

பக்தி என்றால் காதல் என்று பொருளாம்.

சிவன்‌ மீது கொண்ட காதலால் எழுதியுள்ள பாடல்கள்.

இறையியல்
மெய்யியல்
மொழியியல்
என‌ அனைத்து தளங்களிலும் கொண்டாடப்படும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்று.

நல்ல விளக்க உரையுடன் கிடைக்கும் புத்தகமெனில் மொழியை அனுபவிக்கலாம்..

அழகிய பழந்தமிழ் சொற்களை அறிந்து கொண்டு உணர்ந்து பயன்படுத்தும் வாய்ப்புகள் இப்புத்தகத்தால் ஏற்படும்.

ஒவ்வொரு பாடலையும் படித்து உணரும் பொழுது நமக்குள்ளே கற்பனையான காட்சிகளை உருவாக்கி அனுபவிக்க வைத்து ஒரு மொழிநடை..

பக்தி இலக்கியம் என்பதால் பொது வாசகர்களின் தளத்தில் பேசப்படவில்லையோ எனக்குத் தோன்றுகிறது...

அடுத்த அடுத்த பாடல்கள் என நம்மை ஈர்க்கும் வரிகள்.
கற்பனை வளம்
உவமை எனத்
தமிழின் மொழி வளத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகத்தில் சமஸ்கிருத பாடலும் அதன் விளக்கமும் கொடுத்துள்ளனர்...

நன்றிகள்
அன்புடன்
முத்துக்குமார் இரவி

நன்றி :

திரு முத்து குமார் ரவி, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: