"எரிமலர் ."
ஜெயமோகன் அவர்கள் எழுதியது .
கிழக்கு பதிப்பகம் வெளியீடு .
விலை ரூபாய் 140 .மொத்த பக்கங்கள் 207. முதல் பதிப்பு 2015.
டயல் ஃபார் புக்ஸ் நிறுவனத்தார் பரிசாக வழங்கிய எரிமலர் புத்தகத்திற்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் முதற்கனல் ,மழைப்பாடல் ,வண்ணக்கடல், நீலம் ,பிரயாகை ,வெண்முகில் நகரம், இந்திரநீலம் ,எரிமலர் புல்லின் தளல், செம்மணிக்கவசம் .
.எரிமலர்அம்பையின் கதை. மகாபாரதத்தில் வருகின்ற அம்பையின் பாத்திரம் விவரித்த கதை இது.
******"**"
மார்கழி மாதம் என்றால் என் தந்தை ராமாயண புத்தகம் பெரிய எழுத்துக்களில் உள்ளது எடுத்து வாசிப்பார். பாட்டி வீட்டில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும்போது, கோடைக்காலத்தின் போது மகாபாரத பிரசங்கம் நடக்கும் .30 நாளும் அருமையாக நடத்துவார்கள் .பிரசங்கம் செய்யப்படும். அதிலும்கூட அர்ஜுன தவசு ,பாஞ்சாலி சபதம் போன்றவை மட்டுமே மிகுத்து பேசப்படும். எனது ஐந்து வயது பிராயத்தின் போது தெருக்கூத்து கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன் இரவு முழுக்க விழித்திருந்து.
ஒரு தெரு முழுக்க மக்கள் அமர்ந்திருப்பார்கள் நடுவிலே மேடை ஏதுமின்றி , வட்டவடிவில் இடம் அமைத்து ,தெருவிலேயே கூத்து கட்டி ஆடுவார்கள் .மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு சிறு கதையை எடுத்துக்கொண்டு.
எனது ஐம்பதாவது வயதில்தான் சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் முழுமையாக படிக்க ஆரம்பித்தேன். உபபாண்டவம் முழுவதும் மூன்று முறை படித்தேன். பாலகுமாரன் எழுதிய மகாபாரதக் கதையும் படிக்க வேண்டும் .இந்த நிலையில்தான் வெண்முரசு என்ற தலைப்பிட்டு மகாபாரதம் கதையை ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ளார் .இதில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே நீலம் எனும் புத்தகத்தை மட்டும் வாங்கி வாசித்தேன். இப்பொழுது எரிமலர் வாசிக்கிறேன்..
மற்றதும் வாசிக்கவேண்டும். கொரோனா தடை செய்கிறது.
*****"**"""
ஜெயமோகன் குறித்து அறிமுகம் தேவையில்லை.
ஊரறிந்த தமிழ் உலகம் அறிந்த மிகப்பெரும் எழுத்தாளர் .பள்ளி நாட்களில் ரத்ன பாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார்.1987 கணையாழியில் எழுதிய நதி சிறுகதை பரவலாக கவனம் பெற்றது .1988ல் எழுதப்பட்ட நாவல் அகிலன் நினைவு போட்டியில் பரிசு பெற்றது .இதுதவிர சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார் .இவர் எழுதிய விஷ்ணுபுரம் தமிழ் இலக்கிய உலகில் பெரும் கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தை ஏற்படுத்தியது .இவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளையும் புதிய சாத்தியங்களையும் ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளிலும் இவரது பங்களிப்பு தொடர்கிறது.
இந்தப் புத்தகம் படித்த பின்னர் இப்படியெல்லாம் கூட தெளிவாக விவரமாக மற்றவர்களுக்கு அறிய தக்க வகையில் அறியப்பட்ட தக்க வகையில் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனேன் .
அரசியல் பௌதிகம் இயற்பியல் வானியல் கூடவே இலக்கியம் எல்லாம் கலந்து எழுதும் திறன் பெற்றவர் ஜெயமோகன்.
இவரின் அதிசயத்தக்க சொல்லாடல்களை ஆங்காங்கே காணமுடியும் .
. தனிப்பட்ட முறையில் இவருக்கான சில கொள்கைகள் உண்டு .சில காட்சிகளையும் உணர்ச்சிகளையும் மொழியால் சித்தரிக்க முடிப்பவனே இலக்கியவாதி என்கிறார். சித்தரிப்பு ஒரு போதும் அதன் இலக்கை எட்டுவது இல்லை .ஆனால் மொழி அதன் உச்சகட்ட சாத்தியத்தை அந்த முயற்சி வழியாகவே அடைகிறது.
சொல்ல முடியாத ஒன்றை சொல்வது மொழிக்கு அப்பால் உள்ள ஒன்றை நோக்கி மொழியை முடிந்த வரை கொண்டு செல்வது .முடியாமல் திரும்பி வரும் இடமே எப்பொழுதும் மொழி அனுபவத்தின் உச்சம் என அறியப்படுகிறது .
ஏனென்றால் கற்பனை மொழியின் அந்த உச்சி விழும் இடத்தில் இருந்து மேலே ஏறிச் சென்று விடுகிறது..
பப்பு புருஷோத்தமன் என்கிற எனது முகநூல் நண்பர் ஒருமுறை தனது முகநூலில் கீழ்கண்டவாறு
பதிவிட்டிருந்தார் .
"ஜெயமோகன் அவர்கள் ஒரு நாளில் ஆறு மணி நேரம் வாசிக் வாசிக்கிறார் .16 மணிநேரம் எழுதுகிறார் எழுதுகிறார் எழுதுகிறார். மீதி உள்ள இரண்டு மணி நேரங்கள் தான் அவருக்கு உணவு உறக்கம் எல்லாம் ",என்று .அது உண்மைதான் போலிருக்கிறது.
்.*****"""""""""""""*******
இனி எரிமலர் கதை பார்ப்போம்.
அம்பை குறித்த கதை இது .அம்பை எழுத்தாளரைப் பிடிக்கும் .அம்பை கதாபாத்திரமும் எனக்கு பிடிக்கும்.
அகலிகை குறித்து வானம்பாடி காலத்திலேயே கவிஞர்கள் பலர் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள்.
பாஞ்சாலி குறித்தும் பல கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள் .பாரதியார் பாஞ்சாலி சபதம் என்றே கவிதை எழுதி இருக்கிறார் .ஆனால் அம்பை குறித்து அம்பையின் மன ஓட்டம் குறித்து இதுவரை யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது. நான் அறிந்தவரையில் இதுதான் முதல் அம்பை பாத்திரம்.
பாரதி கூட ,
"பாவி துச்சாதனன் செந்நீர் -,அந்தப்
பாழ் துரி யோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து - குழல்
மீதி னி ற் நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்
என்று எழுதி முடித் தாரே அன்றி அவள் பட்ட உள்ள துடிப்பினை வரி வரியாக எழுதவில்லை பாரதி.
அம்பை பட்டதுயர் அம்பை பட்ட வேதனை அம்பை கொண்ட சபதம் எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆய்ந்து ஜெயமோகன் தன் வெற்றி திருக்கரத்தால் வடித்திருக்கிறார்கள் இந்த நூலை..
மகாபாரதத்தில் மிகச் சுருக்கமாக சொல்லப்படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர் துளி. அது அந்த நகரை அழித்தது .அதை விரித்து எழுதிய நாவல் முதல் கனல் . கதையோட்டத்தில் மையத்திலும் இது முழுமையான நாவல்.
அஸ்தினாபுரம் வம்சம் வளர்ப்பதற்காக வேண்டி காசிராஜனின் மூன்று பெண் மக்களை கவர்ந்து வருகிறார் பீஷ்மர். அம்பையின் மனக் காதலை அறிந்து அவளை விடுவித்து விடுகிறான் .திரும்பச் சென்ற அம்பையை அவள் காதலனும் காசிராஜனும் ஏற்றுக்கொள்வதில்லை.
மீண்டும் அம்பை பீஷ்மரிடம் வருகிறாள் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு. தான் விரும்பிய தன் மனதுக்கு உகந்த ஆண்மகன் நீ ஒருவன் தான் என்று பீஷ்மரிடம் மன்றாடுகிறார் .அவன் கொடுத்த வாக்கு காரணமாக மறுக்கிறான். இரு பிறவி எடுத்து சிகண்டி ஆகி பீஷ்மரை வீழ்த்துகிறார் அம்பை .இதுதான் கதை.
இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நானே (என் மனம் )அம்பை ஆக மாறிவிடுகிறது .அவ்வளவு தூரம் ஆசிரியர் நம்மை கதையிலேயே ஆழ்த்தி விடுகிறார். அஸ்தினாபுரம் வம்சம் தழைத்ததா என்றால் பீஷ்மர் கொண்டுசென்ற நோக்கம் நிறைவேறவில்லை .அதன் காரணமாக கொண்டு செல்லப்பட்ட பெண்களுக்கு வேறு ஒருவர் மூலமாக கரு ஊட்டப்படுகிறது .அது வேறு கதை.
இங்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு பெண்ணுக்கு அவள் உகந்த ஆண்மகன் உலகில் கிடையவே கிடையாது .எனது அனுபவம் கூட.
"சினத்தை வெல்லவே அனைத்துப் போர் கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன .
சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண் முன் தோற்றமே புறம்.ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலே ஆகும்.
புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றை பற்றுக .அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக .
கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவாகவே மாறிவிடுகிறான்., அதுவே உலகம் என்றாகி விடுகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்த பருப்புடவியும் அவன் கையில் இருக்கிறது .அது வில் ஆகலாம், வாள் ஆகலாம் , உளி ஆகலாம், முரசு கோலாகலம் ..."
என்று அக்னிவேசர் மூலமாக ஆசிரியர் இந்தக் கருத்தை பதிவு செய்கிறார்.
மேலும் ஆசிரியர் ஒரு கருத்தை பதிவு செய்கிறார் கீழ்கண்டவாறு :
"கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால் தான் கருவுற வேண்டுமா ?கடும் சினத்தால் கருவுருதல் ஆகாதா? உடலால் தான் கருவுறல் வேண்டுமா உள்ளதால் கருவுறுதல் ஆகாதா?
என்ன ஒரு தீர்க்கமான பதிவு.
அதனால்தான் கருவுறும்போது கண்ணை மூடிக்கொண்டு அவள் பெற்றது அந்தகன். உள்ளத்தை மூடி கொண்டவள் பெற்றது உடல் ஊனமுற்றவன் .உள்ளத்தையும் கண்களையும் அன்பையும் வெளிப்படுத்தி கருவுற்றவள் பெற்றது ஞானி .இது மகாபாரதத்தில் தெரியவருகிறது.பெற்ற தாய்மார்கள் பீஷ்மரால் கொண்டுவரப்பட்ட இரு பெண்கள் அம்பாலிகை அம்பிகை மற்றுமொரு தாதிப் பெண்.
...
இந்த புத்தகம் படித்து முடித்த கையோடு ஒரு மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.
22 Female Kottayam என்கிற படம் பார்த்தேன் .இந்த புத்தகத்தை படித்த பாதிப்போ என்னவோ அதில் வருகின்ற கதாநாயகி எனக்கு அம்பை ஆகவே
தென்பட்டாள் .
அந்த காலத்தில் பழிவாங்கும் முறை அப்படி இருந்தது. இந்த காலத்தில் பழிவாங்கும் முறை இப்படி இருந்தது.
திரைப்படத்தில் சிறைக்கூடம் வருகிறது. சிறைக்கூடத்தில் இருக்கக்கூடிய எல்லா பெண்களின் கதைகளையும் பார்க்கும்போது எல்லா பெண்களுமே எனக்கு அம்பையாகத் தான் தெரிகிறது .
நிஜ உலகில் அம்பை மன நிலையை அடையாத , அம்பை அனுபவம் இல்லாத, அம்பைப் போல ஆவேசம் கொள்ளாத பெண்களே இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
நுணுகி ஆராய்ந்து பார்த்தால் எல்லா பெண்களின் மனதிலும் அம்பை இருக்கிறாள் .அதில் சந்தேகம் ஏதும் இருக்க வாய்ப்பே இல்லை.
வாழ்க அம்பை !வாழ்க பெண்கள்!!
நன்றி :
திரு கருணாமூர்த்தி, முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக