24 டிச., 2022

MGR நினைவுகள்

M.G.R நினைவு தினம்!

ஒரு சம்பவம் !

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சென்னை
"கன்னிமாரா ஹோட்டல்" என்ற நட்சத்திர ஹோட்டலில் அடிக்கடி விருந்து நடக்கும்.

ஹோட்டலில் இருந்து வெளியே அண்ணாசாலை வரை
சுமார் 200 மீட்டர் தூரம்
மிக மெதுவாக "எம்ஜிஆர்
கார் செல்லும்!
எல்லோரும் அவரை பார்ப்பதற்கு வசதியாக
ஒரு பிரகாசமான சிறு
விளக்கும் உண்டு.
எல்லாரையும் கை கூப்பி
வணங்கியபடியே செல்வார்.
ஹோட்டலின் எதிர்ப்புறம்
பெண்கள் கலைக்கல்லூரி
இருக்கிறது !

ஒருநாள் விருந்து முடிந்து
மூன்று மணி இருக்கும்!
கலைக்கல்லூரி முன் திடீரெனவண்டி நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய "எம்ஜிஆர் "
சாலையை எதிர்ப்புறமாக
கடந்தார்.
உயரதிகாரிகள் பதறியடித்து  ஓடோடி வந்தனர்!
எம்ஜிஆரோ நேராக சாலையில் நின்றிருந்த
போக்குவரத்து
காவலரிடம் சென்றார்.
தோளில் கை வைத்தார்.
எம்ஜிஆரை பார்த்தாலே
போதும் என்றிருந்த காலகட்டம்.
தோளில் கை வைத்தவுடன் ஏட்டையாவுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்க ஆரம்பித்து விட்டது.
எம்ஜிஆர் அவரிடம்
சாப்பிட்டீர்களா ?என்று
கேட்டவுடன்
"இல்லை ஐயா நீங்கள் போனபிறகுதான் சாப்பிட
வேண்டும்" என்று உத்தரவு
என்று ஆனந்த கண்ணீருடன் சொன்னார்.
"மணி மூன்று ஆகப்போகிறது இன்னும்
சாப்பிடவில்லையா?" என்று
கேட்ட முதல்வர்
"கன்னிமாரா ஹோட்டல் "
மேனேஜரை அழைத்து
இங்கிருக்கும் அத்தனை
காவலர்களுக்கும்
ஹோட்டலில் உணவு வழங்க வேண்டும்.
அதுவும் நான் சாப்பிட்ட அதே போன்ற உணவை வழங்க
வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இன்றும் அது தொடர்வதாக
கேள்வி!

ஆயிரம் விமர்சனம் அவர்மேல் இருக்கலாம்
ஆனால் மக்களின்
நாடித்துடிப்பை அறிந்த
ஒருவர் என்றால் அது "எம்ஜிஆர் "மட்டுமே!

கருத்துகள் இல்லை: