31 ஆக., 2025

டெக் உலகம்


அறிவியல் / தொழில்நுட்பம்

110 கி.மீ வேகம் 0% மாசு! இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு!


India’s first hydrogen train

நடேஷ் கன்னா

Published on: 

26 Aug 2025, 8:42 am



நாட்டில் முதன் முறையாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐ சி எப் பேக்டரி மூலம் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 118 கோடி செலவில் இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்வதற்காக வேறொரு இன்ஜின் மூலம் இந்த ரயில் ஹரியானா மாநிலத்துக்கு சோதனை ஓட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயில் நீராவியை மட்டுமே வெளியிடும் அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட இது மிகவும் பாதுகாப்பானது.

முதலில் முக்கிய நகரங்களில் இருந்து குறுகிய தூரத்துக்கு மட்டுமே விடப்படும். அதாவது 50 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த ரயில் விடப்படும். இதில் பத்து பெட்டிகள் இருக்கும் ஒவ்வொரு பெட்டியிலும் 84 நபர்கள் பயணம் செய்யலாம். எஞ்சின் 1200 குதிரை திறன் கொண்டது .

அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இந்த ரயில் ஹரியானா மாநிலம் சோனி பட்டு முதல் ஜிந்து வரை செல்லும் இந்த இடத்தில் மின் தடம் கிடையாது வயல் வெளியிலும் காட்டுபகுதியும் நிறைந்த பகுதி ஆகும்.

இதையும் படியுங்கள்:

வருங்காலத்தை ஆக்கிரமிக்க உள்ள ஹைட்ரஜன் வாகனங்கள்!


சோதனைக்கு பாதுகாப்பான இடமாக இந்த இடம் இருந்ததால் இதனை தேர்வு செய்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்புக்கு உகந்தது என்று தெரிந்த பின்னர் இந்த ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நலக்குறிப்புகள்

சிரிப்புத்தான் வருகுதையா

இன்றைய சிந்தனைக்கு

இன்று ஒரு தகவல்

ஆன்மீக மஞ்சரி


31:08:2025

🕉️✳️🕉️

🌹நமசிவாயவாழ்க🌹

அத்தனை தேவரும் பார்த்து ரசிக்க
அத்தன் ஆடும் தில்லையம்பதி 

நடராஜா நடராஜா ❤️

ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்

ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி...

சேட னேயுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நா நமச்சி வாயவே.🌹🙏

🕉️✳️🕉️

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்

அருள்வாக்கு

29 ஆக., 2025

மேன்மக்கள்: மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரது திருவாசகமும்திருக்கோவையாரும் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றவை.

வரலாறு

மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இயற்கை பெயர்  'வாதவூரர்'. சிறந்த கல்வி அறிவும், நேர்மையும் கொண்ட மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக பணியாற்றினார். திருப்பெருந்துறையில் இறைவனின் திருவருளால் ‘மாணிக்கவாசகர்’ எனும் பெயர் பெற்றார்.

உருவாக்க நிகழ்வு

திருப்பெருந்துறை என்பது சோழநாட்டில் கடற்கரை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற சிவத்தலம் ஆகும்; இது மாணிக்கவாசகரின் ஆன்மீக வாழ்வில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தெய்வீக அனுபவம் பெற்று, தனது வாழ்க்கை முழுவதும் சிவனுக்கே அர்ப்பணித்தார் என்பதே திருப்பெருந்துறை மற்றும் மாணிக்கவாசகர் தொடர்பான சிறப்பு ஆகும்.

திருப்பெருந்துறையின் சிறப்பு

  • தற்போது ஆவுடையார்கோவில் என்றும் அறியப்படுகிறது.

  • கோவிலில் சிவன் குருந்தமரம் அடியில் “குருமூர்த்தி”யாக மாணிக்கவாசகருக்கு அருள் புரிந்தார் என்ற இலக்கிய மரபு உள்ளது.

  • இந்தத் தலத்தில் மாணிக்கவாசகர் பெரும் திருப்பணியும் அறப்பணியும் ஆற்றினார்; அவர் கொண்டுவந்த அரசின் பொருளை கோவில் கட்டுதலுக்கே பயன்படுத்தினார்.

மாணிக்கவாசகர் – ஆன்மீக வழிகாட்டி

  • திருப்பெருந்துறையில் சிவன் “ஆட்கொண்டது”, அழகிய அருட்பார்வையை வளங்கியது என்பதே இவர் வாழ்வில் திருப்புமுனை.

  • நானேயோ தவம் செய்தேன்; சிவாய நம எனப்பெற்றேன்!” மற்றும் “என்னை ஓர் வார்த்தை யுட்படுத்துப் பற்றினாய்” என்று பாடலில் வாழ்த்தியுள்ளார்.

  • குதிரை வாங்க அரசன் தந்த பொருளை கோவில் அருட்பணிக்காக செலவு செய்தார்; அரசன் கோபம் கொள்ள பின்னர் இறைவனே நரிகளை பரிகளாக மாற்றி மாணிக்கவாசகருக்கு அருள்செய்த திருவிளையாடல் இலக்கியத்தில் இவர் புகழ் பாடுகின்றது 

இலக்கியத்தில் இடம்

  • திருப்பெருந்துறை மற்றும் மாணிக்கவாசகர் தொடர்பாக “திருவாசகம்” உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

  • மாணிக்கவாசகரின் வாழ்க்கை, அதில் திருப்பெருந்துறை சம்பவம், ஆன்மீக செயற்பாடுகளில் சைவ சித்தாந்தத்துக்கு சமய அடையாளமாக திகழ்கிறது.

திருப்பெருந்துறை என்பது மாணிக்கவாசகர் ஆன்மீக வளர்ச்சிக்கு ஊற்றாக அமைந்த புனித தலம்

  • மாணிக்கவாசகர் ஓலைச் சுவடியில் பாடல்களைத் தொகுத்துக் கூற, இறைவன் தன் கரத்தால் “திருவாசகம்” என எழுதி முடித்து “திருச்சிற்றம்பலமுடையான்” என்று கையெழுத்திட்டார் என்று சொல்லப்படுகிறது 

திருவாசகத்தின் அமைப்பு

  • இது 51 பாடல்பகுதியுடன் 658 பாடல்களைக் கொண்டுள்ளது.

  • இதில் சிவபுராணம், திருவெம்பாவை, திருவம்மானை, நீத்தல் விண்ணப்பம், திருச்சதகம், உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட பகுதி பாடல்கள் அடங்கும்.

  • பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக இது மதிக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • மாணிக்கவாசகரின் இந்த நூல் சிவபக்தியில் மனிதக் உள்ளத்தை உருக்கும் இயல்பினால் பெருமையும் புகழையும் பெற்றது.

  • திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பது இதன் சிறப்பை எவரும் ஒப்புக்கொள்வர்.

திருவாசகம் உருவாக்கம் உண்மையிலே ஒரு பக்திப் பெருவிழா, தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமயத்துக்கு அளிக்கப்பட்ட புனித படைப்பு.

இறுதி நிகழ்வுகள்

மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து ஆனி மாதம் சிதம்பரத்தில் சிவன் திருவடியில்  முக்தியடைந்தார். இவரது நினைவாக ஆண்டுதோறும் அனைத்து சிவன் கோயில்களிலும் குரு பூஜை நடைபெறுகிறது.

மற்ற பெயர்கள்

மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள்,  மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என பல பெயர்களாலும் அறியப்படுகிறார்.

திருவாசகம் தமிழ் சமய இலக்கியத்தில் அவருக்கு நிரந்தர இடம் பெற்றுத் தந்துள்ளது. அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Grateful thanks to PERPLEXITY AI for its help and support in creating this blogpost and the creators of the beautiful images cited above 

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

ஆன்மீக மஞ்சரி

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

இன்றைய புத்தகம்


குந்தவை கதைகள் தொகுப்புக்கு ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் எழுதிய மதிப்புரை

The Unflinching Gaze: A Homage to Kunthavai’s Enduring Legacy

“குந்தவையின் கதைகள் இலக்கிய படைப்புகள் மட்டுமல்ல. ஒரு நிலத்தின், அதன் ஆன்மாவின் கூட்டு நினைவுகளின் தொகுப்பு.”

முழுக் கட்டுரையையும் படிக்க: 

https://femasiamagazine.com/the-unflinching-gaze-a-homage-to-kunthavais-enduring-legacy/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/Kunthavaikathaigal_1524/

மின் நூலைப் பெற: 
https://books.kalachuvadu.com/catalogue/KunthavaiKathaigal_1585/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0F5HRCYKZ

மின் நூலைப் பெற: 

https://www.amazon.in/dp/B0FKLVR3M1/

https://www.amazon.com/dp/B0FKLVR3M1/

@followers @highlight D.i. Aravindan Kannan Sundaram Swarnavel Eswaran

குட்டிக்கதை

       அஞ்சலி 🙏🙏🙏


ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.

சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.🙏🙏🙏

#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்🙏🙏🙏


27 ஆக., 2025

நலக்குறிப்புகள்

மேன்மக்கள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

இன்றைய புத்தகம்


தமிழருவி மணியன் எழுதிய "ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்" ஒரு வரலாறு மற்றும் சுயசரிதை நூல் ஆகும், இது ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தையும், அவரது கருத்துக்களையும், அறச்சீற்றத்தையும் படம்பிடிக்கிறது. இந்த புத்தகம் ஒரு நேரடியான, அறநெறிசார்ந்த பார்வையை வழங்குகிறது என்றும், ஆசிரியரின் எழுத்துக்கள் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

புத்தகத்தின் சிறப்பு அம்சங்கள்: 

ஆசிரியர்: இந்நூலை எழுதியவர் தமிழருவி மணியன் ஆவார்.
பிரிவு: வரலாறு மற்றும் சுயசரிதை வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.

தன்மை: வாசகர்கள் புருவங்களை உயர்த்தும் அளவுக்கு கடுமையான, அறச்சீற்றமான கருத்துக்கள் இதில் உள்ளன.

நோக்கம்: இது ஒரு அறச்சீற்றவாதியின் அரிதாரம் கலக்காத படைப்பு என்றும், வாசகனை சிந்திக்கத் தூண்டும் வகையிலான எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளது.

மொழி: தமிழ்.
வெளியீட்டு ஆண்டு: 2020.

வாசகப் பார்வைகள்: 

தினமணி நாளிதழில், இது ஒரு அறச்சீற்றவாதியின் நேர்மையான படைப்பாகவும், வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் ஒரு புத்தகமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூல், தமிழருவி மணியனின் சிந்தனைகள் மற்றும் அவர் உலகைப் பார்க்கும் விதத்தை விரிவாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வழியாகும்.

24 ஆக., 2025

அஞ்சலி 🙏🙏🙏

                                                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருள்வாக்கு

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி

சிரிக்கவும் சிந்திக்கவும்

இன்றைய புத்தகங்கள்


பெண் மொழிபெயர்ப்பாளர்கள் மாதம்: சிறப்புச் சலுகை  

ஆகஸ்ட் மாதம் பெண் மொழிபெயர்ப்பாளர்கள் மாதமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. மொழியாக்கத்தில் ஈடுபட்டுவரும் பெண்களுக்குக் காலச்சுவடு தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

பெண் மொழிபெயர்பாளர்கள் மாதத்தை முன்னிட்டு, பெண்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் காலச்சுவடு நூல்களை 25% சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆகஸ்ட் 24 முதல் 31 வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும்.

காலச்சுவடு இணையதளம் மூலம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை.

நூல்களை வாங்குவதற்கான இணைப்பு:
https://shorturl.at/6jGL3 

@followers @topfans D.i. Aravindan Kannan Sundaram

23 ஆக., 2025

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23

பொதுவாக நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை குறைவு. வரலாற்றில் ஆர்வமும் இல்லை; வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தும் பழக்கமும் இல்லை.

ஆனால் ஒரு இனத்தின் தனித்தன்மை, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும் சீரிய பணி வரலாற்றுக்கே உரியது. வரலாற்றிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும். நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்யாமலிருக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.

ஒரு ஆங்கிலப் பழமொழி இங்கே நினைவுக்கு வருகிறது:
“Those who forget the past are condemned to repeat it.”
(“கடந்தகாலத்தை மறந்தவர்கள்,  மீண்டும் அதையே செய்து துன்பப்பட நேரிடும்)

வரலாற்று விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில், நான் தினமும் “வரலாற்றில் இன்று” என்ற தொடரை இங்கு பதிவிடத் தீர்மானித்துள்ளேன். உங்கள் ஆதரவு எனக்கு பெரும் உற்சாகமாக இருக்கும். இதோ மூன்றாவது பதிவு!

India Post, Government of India
Via WIKIMEDIA COMMONS


1872 டங்கட்டூரி பிரகாசம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, 1946-1947 சென்னை  (ஆந்திரம் தமிழ்நாடு உட்பட்ட சென்னை பிரசிடென்சியின் பிரிமியர் பதவியும் (முதலமைச்சர்), அதன் பின்னர் 1953-1954ல் ஆந்திர மாநில முதல்வர் பதவியும் வகித்தவர். ஆந்திர கேசரி என்று மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். ஆந்திராவில் அவரது பிறந்த தினம் மாநில அரசால் கொண்டாடப்படுகிறது


Battle of San Domingo, also known as the Battle for Palm Tree Hill
Collection. Polish Army Museum  
Via WIKIMEDIA COMMONS

சர்வதேச அடிமை வர்த்தக நினைவு நாள் மற்றும் அடிமைத்தன ஒழிப்பு நாளாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. 1791ல் இந்த நாளில் ஹைதியில் (HAITI NOW, ISLAND OF SAINT DOMIQUE THEN) அடிமை வர்த்தகத்திற்கு எதிராக கிளர்ச்சி மூண்டது. 

1697 முதல் ஸ்பானிய காலனியாக இருந்த இந்தத் தீவில் கரும்புத் தோட்டங்களில் மக்களை கடத்தி வந்து, அடிமைகளாக விற்று, கொடுமைப்படுத்தி வேலை வாங்கி வந்தனர். புரட்சியில் வென்று, போராட்டத்தின் மூலம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசான முதல் அமெரிக்க நாடு என்ற சிறப்பைப் பெற்றது 

இந்த நாளில் வரலாற்று ஆய்வாளர்கள் மாணவர்கள் கூடி ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபிய நாடுகளில் வரலாற்று ரீதியாக மக்களை அடிமைகளாக்கி ஆதிக்கம் செய்ய நேரிட்டது ஏன் என்று கேள்விகளை மக்களிடையே எழுப்பி, மனிதரை அடிமைப்படுத்தும் இந்த கொடிய பழக்கத்தை வேரோடு அழிக்கும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


File:World wide web.jpg

Author:  Svilen.milev

licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

1991.  உலகளாவிய இணைய வலை   அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கென  உருவாக்கப்பட்ட போதிலும், இந்த உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற பெருமையைப் பெறுகிறது 



Chandrayaan-3 Lunar Mission-3.jpg

Author:  Truckjunction

licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license


2023  விண்வெளித்துறையில் இந்தியாவின் மகத்தான சாதனை சந்திரயான் விண்கலம் நிலாவில் தரை இறங்கியது. உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது 



நன்றி: விக்கிப்பீடியா மற்றும் விக்கிமீடியா காமன்ஸ் ...


இன்றைய சிந்தனைக்கு


...

சிரிக்கவும் சிந்திக்கவும்

...

அருள்வாக்கு


...

22 ஆக., 2025

கருணை உள்ளமே, கடவுள் இல்லயே...


.                                                                   Wikimedia Commons 


கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரைஇந்த இடைப்பட்ட 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 310 கோடி ரூபாயை ஒரு தமிழ் நடிகர் நன்கொடையாக பிறருக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அந்த சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்.

🙏🙏🙏🙏🙏🙏

அஞ்சலி 🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருள்வாக்கு

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

சென்னை தினம்

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 22



வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 22

பொதுவாக நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை குறைவு. வரலாற்றில் ஆர்வமும் இல்லை; வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தும் பழக்கமும் இல்லை.


ஆனால் ஒரு இனத்தின் தனித்தன்மை, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லும் சீரிய பணி வரலாற்றுக்கே உரியது. வரலாற்றிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும். நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்யாமலிருக்க இந்த விழிப்புணர்வு அவசியம்.

ஒரு ஆங்கிலப் பழமொழி இங்கே நினைவுக்கு வருகிறது:
“Those who forget the past are condemned to repeat it.”
(“கடந்தகாலத்தை மறந்தவர்கள்,  மீண்டும் அதையே செய்து துன்பப்பட நேரிடும்)

வரலாற்று விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில், நான் தினமும் “வரலாற்றில் இன்று” என்ற தொடரை இங்கு பதிவிடத் தீர்மானித்துள்ளேன். உங்கள் ஆதரவு எனக்கு பெரும் உற்சாகமாக இருக்கும். இதோ இரண்டாவது பதிவு!


📌 இந்திய வரலாறு



Francis Day ,
NHM archives, , Author Unknown, via WIKIMEDIA COMMONS

1639 ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே (Francis Day) மதராசப்பட்டினத்தில் (இன்றைய சென்னை) கிழக்கு இந்தியா கம்பெனிக்காக நிலம் வாங்கினார்; பின்னர் மதராஸ் நகரம் தோற்றம் பெற்றது.


1969 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO) நிறுவப்பட்டது.

1989 – ராகி பந்தன் (Raksha Bandhan) பண்டிகை தேசிய பண்டிகையாக அறிவிக்கப்பட்டது.



🌍 உலக வரலாறு


Richard_III_earliest_surviving_portrait.jpg
Wikimedia Commons

1485 – போஸ்வொர்த் போரில் மன்னர் மூன்றாம் ரிச்சர்டு (Richard III)  கொல்லப்பட்டார்; இங்கிலாந்தில் ட்யூடர் (TUDOR) வம்சம்  தொடங்கியது.



Portrait of Charles I, King of England (1600-1649) 
National Gallery of Ireland
Wikimedia Commons

1642 – இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் மன்னரான முதலாம் சார்லசுக்கு (Charles I) எதிராக புரட்சிப் போர் தொடங்கியது. இப்போரில் மன்னர் முதலாம் சார்லஸ் தோல்வியடைந்து தப்பியோடினார்.  பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட அவர் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குப் பின், 1649ல் சிரச்சேதம் செய்யப்பட்டார்



Captain James Cook, Painting by Nathaniel Dance-Holland,1775, National Maritime Museum through Wikimedia Commons

1770 – பிரிட்டிஷ் ஆய்வாளர் கேப்டன் ஜேம்ஸ் குக் (CAPTAIN JAMES COOK) ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை பிரிட்டனுக்காகக் கைப்பற்றினார்.


1851 – தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை (அப்போது நியூயார்க் டெய்லி டைம்ஸ்) வெளியீடு தொடங்கியது.


1922 – Irish revolutionary leader Michael Collins (1890-1922)
as delegate to the Anglo-Irish Treaty negotiations in London in 1921.
Source. Bibliothèque nationale de France
Agence de presse Meurisse  

மைக்கேல் காலின்ஸ், (Michael Collins) ஐரிஷ் சுதந்திரப் போராட்டத்தின் தலைவர், கொல்லப்பட்டார்.



File:CHARLES DE GAULLE.jpg

AuthorJerome.losy
licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.

1962 – பிரான்சில் ஷார்ல் டிகால் (Charles de Gaulle) படுகொலை முயற்சி.



🎭 பிறந்த தினம்


Photo of Ray Bradbury.DateAugust 1975Sourcehttps://www.flickr.com/photos/alan-light/332925230/ (cropped - lossless - by High on a tree)AuthorAlan Light. via WIKIMEDIA COMMONS

1920 – ரே பிராட்பரி (RAY BRADBURY), அமெரிக்க விஞ்ஞான புனைவு எழுத்தாளர் (Fahrenheit 451 புகழ்).


File:Dorothy Parker LCCN2014685624.jpg

Bain News Service, publisher

Via WIKIMEDIA COMMONS

1893 - டோரதி பார்க்கர் (Dorothy Parker), கவிஞர், சிறுகதை எழுத்தாளர்

 

மறைந்த தினம்


File:Jomo Kenyatta (cropped) in June 15th, 1966.jpg
AuthorPridan Moshe
Via WIKIMEDIA COMMONS

1978 ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta (1978): கென்யாவின் முதல் ஜனாதிபதி



நன்றி: Wikipedia for biographical details and Wikimedia Commons for images


🕯️