31 அக்., 2025

அஞ்சலி 🙏🙏🙏🙏🙏🙏


*வந்தேமாதரம்!*

இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, வலிமையான பாரதத்தை உருவாக்கிய
தேசப்பற்றாளர்
இந்தியாவின் இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-ஆவது
பிறந்த நாள் இன்று. 

அவரின் தன்னலமற்ற தியாகங்களைப் போற்றி தேசப்பற்றில் 
உறுதி கொள்வோம். 

*ஜெய்ஹிந்த்!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஆன்மீக மஞ்சரி

அதிர்ச்சித் தகவல்கள்

பயனுள்ள தகவல்கள்

சாதனையாளர்கள்

30 அக்., 2025

இன்றைய புத்தகம்

தி. ஜானகிராமனின் ஜப்பான் பயண அனுபவ நூல்

உதய சூரியன் பற்றிய பார்வை

தி.ஜா. அவர்கள் மேற்கொண்ட ஜப்பான் பயணம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன். ஆனாலும் அவர் பகிர்ந்திருக்கும் ஜப்பானின் அழகு, அதன் கலாச்சாரம், ஜப்பானிய மக்களின் பண்புகள் இன்றும் மாறாமல் இருக்கின்றன என்பதை நினைக்கும்பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 

அனுபவமிக்க எழுத்தாளராக இருந்தாலும் தான் முதன் முதலாகக் கொண்ட வியப்புகள் நிறைந்த ஜப்பான் பயண அனுபவங்களை வெகுளியாகப் பகிர்ந்திருப்பது அழகு!

நன்றி: வைதேகி தாயுமானவன் (readsandscenes) இன்ஸ்டகிராம் பதிவு

முழுப்பதிவையும் வாசிக்க: https://www.instagram.com/p/DQHBe4xjK_2/?hl=en

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/uthaya-suriyan_1102/

அமேசானில் வாங்க: https://www.amazon.in/dp/B0BRD3Z7SV

மின் நூலைப்பெற : https://www.amazon.in/dp/B0BRY25TTX/

D.i. Aravindan Kannan Sundaram 

#kalachuvadupublications #tamilbookreaders #bookrecommendations2025 #tamilnovel

சிரிப்புத்தான் வருகுதையா

அருள்வாக்கு

27 அக்., 2025

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

உங்கள் கவனத்திற்கு

இன்று ஒரு தகவல்


ரயில் நிலையங்களில் நெரிசலைக் குறைக்க 'யாத்ரி சுவிதா கேந்திரா' திட்டம் - முதல் கட்டமாக டெல்லியில் அறிமுகம்!

இந்திய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்குச் சிரமமில்லாத மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் விதமாக 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

பிரத்யேக நுழைவாயில்: இந்தத் திட்டத்தின் மிக முக்கிய அம்சம், முன்பதிவு செய்த பயணிகளுக்கு (Reserved Passengers) மட்டுமே பிரத்யேக நுழைவாயில் வசதி ஏற்படுத்தப்படுவதுதான். இதன்மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் நேரடியாக பிளாட்பாரத்திற்குச் செல்ல முடியும்.

அங்கீகாரம் கட்டாயம்: முன்பதிவு செய்யாத பயணிகள், வியாபாரிகள் அல்லது ரயில்வேயில் தொடர்பில்லாதவர்கள் நேரடியாக ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாது. கடை வைத்திருப்போர், ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் ஆகியோருக்கும் தனித்துவமான அடையாள அட்டைகள் (Unique Identity Cards) வழங்கப்படும். இந்த அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பிளாட்பாரத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

டெல்லியில் துவக்கம்:

இந்த முன்னோடித் திட்டம், இந்தியாவில் முதன்முறையாக டெல்லி ரயில் நிலையத்தில் சுமார் 5,281 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பயணிகளின் வசதிக்காக 120 இருக்கைகள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 22 டிக்கெட் கவுன்டர்கள், வைஃபை, ஆர்.ஓ. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் 17 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 5 லக்கேஜ் ஸ்கேனர்களும் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் விரிவாக்கம்:

மத்திய அரசு, இந்தப் பாதுகாப்பு மற்றும் வசதி சார்ந்த திட்டத்தை இந்தியா முழுவதும் கூட்ட நெரிசல் மிகுந்த 76 முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில், சென்னை எழும்பூர், திருப்பதி, பாட்னா, மும்பை, புவனேஸ்வர், குவஹாத்தி, ஹவுரா, கோரக்பூர் போன்ற முக்கிய நிலையங்களும் அடங்கும்.

நலக்குறிப்புகள்

ஆன்மீக மஞ்சரி

இன்றைய புத்தகம்


காலச்சுவடு புதிய வெளியீடு
பேசத் துணிந்த எழுத்துக்கள் ( பெருமாள்முருகன் படைப்புலகம் )

எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகளும் உரையாடல்களும் நிகழ்ந்தன. எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளரின்  உரைகள் கட்டுரை வடிவில் இந்நூலில்  தொகுக்கப்பட்டுள்ளன.
ஆய்வாளர்களில் பெரும்பாலோர் இளம் தலைமுறையினர். அவர்களின் வேறுபட்ட பார்வையை முன்வைக்கும் தீர்க்கமான கட்டுரைகள் இடம்பெறுவது  இந்நூலின்  தனித்துவம்.
பேராசிரியர்கள் க. காசிமாரியப்பனும் அ. செல்வராசுவும் தொகுத்துள்ள இந்த நூல் சமகாலப் படைப்பாளி ஒருவரின் பன்முகச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக  அறியவும் மதிப்பிடவும் பெரிதும் துணைசெய்யும்.
நூலைப்பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/PesaThuninthaEzhuththukkalPerumalMuruganPadaippulagam_1633/

அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0FVLXFL22/

D.i. Aravindan Kannan Sundaram

#kalachuvadupublications #kalachuvadubooks #permalmurugan #tamilnovel #tamilbookreaders

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

குட்டிக்கதை

என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே  உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு.

அப்பா, நேத்து கேட்டேனே, 
எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 
டஅம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத்தெரியாதா?
ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...
ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

#கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?
காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...
இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...
இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...
தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...!

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 
என்ன ராஜா...?

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...?

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

#கண்ணீர்_அதற்குள்_கழுத்தை_தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 
சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள்  ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...
அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.
என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.
சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 
எப்படி அழறான், பாரு.
அவனை பேச வை.
எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று
ஆண்டுகளுக்கு முன்னால்... 
மகா போனபோதே அவனும் போயிட்டான்.
நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"
என்று கேட்க கூட யாரும் இல்லாத 
நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான்  கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 
என்று தம் காதுபடவே -  மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 
தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'
என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 
வாழும்நிலை வந்தபோதே 
அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது"  என்று மகன் அமில வார்த்தையை 
வீசியபோதே அவன் போயிட்டான்;
நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 
அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்...
அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!
என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.
நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது...

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்.

#பார்க்கும்_எல்லாவற்றிலும்_அவன்_மகாவோடு_வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!🙏

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 
நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 
உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 
புரிந்து கொள்ள முயலுங்கள்...!

வாழ்க்கை என்பது... 
வாழ்வது மட்டுமல்ல...! 
வாழ வைப்பதும்தான்...!

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 
பலர் 
உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 
புதைக்கத்தான்... 
சில ஆண்டுகள் ஆகின்றன...!🙏

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...!

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.
நம்புகிறேன்...!

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்று  வேண்டுகிறேன்.🙏🙏🙏

வாட்ஸ்அப்பில் பெற்றது 

26 அக்., 2025

ஆன்மீக மஞ்சரி

இன்றைய புத்தகம்


‘பால்யகால சகி’ நாவல் பற்றிய பார்வை

“சிறு வயதில் சண்டைகளோடு தொடங்கிய நட்பு, பருவ வயதில் அன்போடும் புரிதலோடும், காதலாக முதிர்ச்சியடைந்து, விதியால் பிரிந்துவிடும் இரு நண்பர்களின் காதல் காவியமாகும்.

இக்கதையில் மனதை வாட்டக்கூடிய பல விஷயங்கள் இருப்பினும், யதார்த்தமான கதைகளத்தோடு, கள்ளங்கபடமற்ற மனத்துடன், நேர்த்தியான விவரணையுடன், தூய்மையான காதலை வழங்கியிருப்பது இக்கதைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.”

நன்றி: rama_sindhia (இன்ஸ்டகிராம் பதிவு)
https://www.instagram.com/p/DOWKTUnklMS/

நூலைப் பெற:https://books.kalachuvadu.com/catalogue/palyakaala-saki_32/

D.i. Aravindan Kannan Sundaram

#kalachuvadupublications #kalachuvadubooks #tamilbookreaders #tamilnovel

நலக்குறிப்புகள்

ஆன்மீக சிந்தனை

இன்றைய சிந்தனைக்கு

பாரத தரிசனம்

இன்று ஒரு தகவல்

அருள்வாக்கு

24 அக்., 2025

இன்றைய புத்தகம்


எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய

நாலுகெட்டு  நாவல் பற்றிய பார்வை

https://www.instagram.com/p/DP8O1PJD7p0/?igsh=NzN2eGd3dWdmc2No

நன்றி: திவ்யா தைலியண்ணன் (இன்ஸ்டகிராம் பதிவு)

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/naalukettu_95/

அமேசானில் வாங்க: https://www.amazon.in/dp/B097PWG4X8/

மின் நூலைப்பெற 
https://www.amazon.in/dp/B08P4LGBXX/

@followers D.i. Aravindan Kannan Sundaram Divya T

#kalachuvadupublications #kalachuvadubooks #naalukettu #tamilbookreaders #tamilnovel


சுற்றுச்சூழல்

அபூர்வமான படம்

விழிப்புணர்வுப் பதிவு

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி

இன்று ஒரு தகவல்

23 அக்., 2025

இன்றைய புத்தகம்


"நீ நதி போல ஓடிக்கொண்டிரு" என்பது பாரதி பாஸ்கர் எழுதிய ஒரு புத்தகம். இது பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் சவால்களை எப்படி அன்பாகவும், அமைதியாகவும், உறுதியாகவும் கடந்து செல்வது என்பதைப் பற்றி பேசுகிறது. 

புத்தகத்தின் நோக்கம்: கணவன், மாமியார், நாத்தனார் போன்றோருடன் உறவுகளை அன்பால் நிர்வகித்தல், குழந்தைகள் வளர்ப்பில் பொறுப்புணர்வு, குடும்பத்தில் மனைவியின் பங்களிப்பு போன்ற விஷயங்களை இந்த புத்தகம் விளக்குகிறது. 

உதாரணம்: கரைகளை உடைக்காமல் அமைதியான நதி போல ஓடுவது எப்படி என்பதை மிகவும் நெகிழ்ச்சியாகவும் மனம் கவரும்படியும் ஆசிரியர் விவரித்திருக்கிறார். 

பயன்பாடு: பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தடைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளை இந்த புத்தகம் வழங்குகிறது. 
பிற தகவல்கள்: இந்தத் தொடர் விகடன் இதழ்களில் வெளியானது, மேலும் இந்த புத்தகம் பல ஆன்லைன் புத்தகக் கடைகளிலும், கூகிள் புத்தகங்கள் போன்ற தளங்களிலும் கிடைக்கிறது. 

நன்றி: Google AI OVERVIEW

சாதனையாளர்கள்

கவிதை நேரம்

சுற்றுச்சூழல்

சீரிய சிந்தனைகள்

கருத்து மேடை

புள்ளிக்கணக்கு

ஆன்மீக மஞ்சரி


 ஆரம்பிக்கிறது கந்த சஷ்டி விரதம் 2025 🙏

முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும். 

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு. 

இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான். 

முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.

கந்த சஷ்டி விரதம் 2025 துவங்கும் நாள் :

மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். 

இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள். 

இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது. 

விரதம் துவங்கும் முறை :

* முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.

* விரதம் துவங்கும் நாளான நாளை காலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்காக விரதம் இருக்க போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை ஆரம்பிக்கவும்.

* கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.

* காலை எழுந்ததும் குளித்து முடித்து, 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபட வேண்டும்.

* காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.

* நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.

* தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.

விரதத்தின் போது செய்ய வேண்டியவை :

*  கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.

* தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.

* வாரம் ஒரு முறை வீடு பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.

* விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.

* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.

* முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.

* முருகனுக்கு வைக்கும் நைய்வேத்தியத்தை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

* விரதம் முடிந்த மறு நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.

குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :

குழந்தைக்காக வேண்டி 48 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஷட்கோண கோலம் போட்டு, ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி, வேல்மாறல் மற்றும் செகமாயை யுற்றெ என துவங்கும் திருப்புகழ் படிக்கவும். 

தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி இருப்பது சிறப்பு. 

விரதம் காலத்தில் முடிந்த வரை மற்றவர்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்னதானம் அளிப்பது, குழந்தைகள் படிப்பிற்காக உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.

நிறைவு‌‌ நாளன்று முருகன் கோவில்களில்‌ நடக்கும் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுவிட்டு விரதம்‌ முடிக்கலாம். 

அல்லது மறுநாள் திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம்‌ முடிக்கலாம்

நன்றி:
*🍃Sri Yoga & Naturopathy*🍃

உங்கள் கவனத்திற்கு

பாரத தரிசனம்

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

இன்று ஒரு தகவல்

சிரிப்புத்தான் வருகுதையா

முன்னேற்றப் பாதை

19 அக்., 2025

இன்றைய புத்தகம்


பின்தொடரும் நிழலின் குரல்" என்பது எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்ட ஓர் அரசியல் நாவல், இது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இலட்சியவாதத்திற்கும் அறத்திற்கும் இடையிலான உறவை விவாதிக்கிறது. இந்த நாவல், கருத்தியல்கள் எவ்வாறு அரசியல் செயல்திட்டங்களின் விளைவாகத் தோல்வியடைகின்றன என்பதையும், அதனால் உயிர்கொடுத்தவர்களின் அர்த்தத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது


நாவலின் முக்கிய அம்சங்கள்:


ஆசிரியர்: 


ஜெயமோகன் 


வெளியீடு: 

1999 ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 


கதைக் கரு: 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னணியில், தமிழ்நாட்டின் தொழிற்சங்கச் சூழலில் இலட்சியவாதம், கருத்தியல், மற்றும் அறம் ஆகியவற்றின் முரண்பாடுகளை ஆராய்கிறது. 


மையக் கதாபாத்திரங்கள்: 

கரு. அருணாச்சலம் என்ற தொழிற்சங்க ஊழியரின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. 


விவாதிக்கும் தலைப்புகள்: 

வரலாறு, இலட்சியவாதம், தியாகம், மற்றும் மானுட அறத்தின் அடிப்படைகள் போன்ற ஆழமான கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. 


காலகட்டம்: 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஏற்பட்ட காலகட்டத்தில், கம்யூனிசக் கோட்பாடுகளின் தத்துவார்த்தப் பின்னடைவுகளையும், அதனால் ஏற்பட்ட சிந்தனைக் கொந்தளிப்புகளையும் புனைவாக விரித்துரைக்கிறது. 


நன்றி: GOOGLE AI OVERVIEW