[29/11, 20:56] SIVASUBRAMANIAN SIVASURIY: நெருப்பு ஓடு என்பது கம்மாள சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கான அடுப்பு வகை. இந்த நாவலில் இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சயனைட் தற்கொலைகள், திருட்டு நகை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாழ்வியல் சமூகத் தாக்குதல்கள், பெரு முதலாளிகளால் நசுக்கப்படும் சிறிய நகைத் தொழிலாளிகளின் வாழ்க்கை அவர்களின் குழுக்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி என அனைத்தையும் பதிவு செய்கிறது.
[29/11, 20:59] SIVASUBRAMANIAN SIVASURIY: தேவி லிங்கம் எழுதிய நெருப்பு ஓடு என்னும் நாவலை வாசித்தேன். ரமேஷ் பிரேதன் விருது பெற்ற பின்னரே தேவி லிங்கம் பற்றி அறிந்தேன். இந்நாவலை சுவாரசியமாக வாசிக்கமுடிந்தது என்பதே இதன் ஆசிரியர் ஒரு தொடக்கநிலை எழுத்தாளர் என்னும் வகையில் முக்கியமான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். பொற்கொல்லர் குடும்பம் ஒன்றின் கதை இது. கந்தசாமி பத்தர், ஜெயலட்சுமி அம்மாள் என்னும் இணையரின் குடும்பம் என்று சொல்லலாம். அவர்களில் தொடங்கி நான்கு தலைமுறையினரின் கதைகளை சரளமாகப் பின்னி கதை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். எண்பதுகளில் நிகழும் கதை. வேதாரண்யம் அருகே முத்துப்பேட்டைக் கதைக்களம்.
கதிர் என்னும் இளைஞரின் வாழ்க்கையை மையமாக்கி பிறருடைய வாழ்க்கையை நினைவுகளாகவும் நிகழ்வுகளாகவும் தொகுத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. நாமறியாத ஒரு சமூகத்தின் வாழ்க்கை. ஆனால் அதிலுள்ள ஆசாபாசங்களும் உறவுச்சிக்கல்களும் நாமனைவரும் அறிந்ததாகவே உள்ளன. ஆண்பெண் உறவு சார்ந்த பல இடங்களில் மனிதமனத்தின் விசித்திரங்கள் வெளிப்படுகின்றன. நகைசெய்யும் தொழில் எண்பதுகளில் நலிவடையத்தொடங்கி மெல்லமெல்ல அச்சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. நகை செய்யும் நெருப்புக்கலம்தான் மைய உருவகம். அதை ஊதி ஊதி நகைசெய்பவர்கள் தாங்களும் அந்த நெருப்பில் உருகி அழிகிறார்கள். தற்கொலைகள்.
.....xxxx.....
வறுமையின் விளைவான சரிவுகள். ஒரு மொத்தவாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கமுடிந்திருப்பது இந்நாவலின் சிறப்பு. கதாபாத்திரங்கள் மிகையில்லாமல் சித்தரிக்கப்பட்டிருப்பதும், நிகழ்வுகள் நாடகத்தன்மை இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு. அத்தியாயங்களின் தலைப்புகள் நகைசார்ந்தவையாக உள்ளன. சில இடங்களில் அவை அந்த அத்தியாயத்தை உருவகரீதியாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அந்தவகையில் இந்நாவலுக்கு ஓர் இலக்கியத்தகுதி உண்டு. ஆனால் தொடர்கதைகளுக்குரிய திருப்பங்களுடன் அத்தியாயங்கள் அமைந்திருப்பதும், உரையாடல்களில் ஆழமில்லாத சாதாரணத்தன்மை இருப்பதும் வணிக எழுத்தின் சாயலை அளிக்கின்றது.
ஆசிரியர் ஒரு சமூகத்தின் அகச்சித்திரத்தை அளிக்கமுயன்று குறிxxddப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார் என நினைக்கிறேன்.
ஆர்.ராஜசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக