எனதென தென்னல் இடராகும் என்று
மவனது வென்ன அருள்.
'இது எனது பொருள், எனது செயல், எனதே பெரிது' என்னும் அகங்கார மமகாரங்களால்தான் எல்லா இடர்களும் பிரிவினைகளும் போட்டி, பொறாமை, போர்வினைகளும் வருகின்றன. 'எல்லாம் அவன், அவனன்றி யாதுமில்லை, அதுவாகிய சுத்தான்மா அவனே (அவன் + அது), இறைவனே எனக்கும் எதற்கும் முதல்வன். அவன் இச்சை என்மூலம் நிறைவேறுக' என்று பணிவுடல் கருதினால் இறைவன் அருள் விளங்கும். அதனால் இருளாட்சி ஒழிந்து உலகில் அருளாட்சி துலங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக