உலக சுகாதார நிறுவனம் தோன்றிய நாளை நினைவுபடுத்தும் விதமாக, 1950-ம் ஆண்டு முதல் ஏப்ரல் ஏழாம் நாள் உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அறுபதாம் ஆண்டு. இதையொட்டி, நகரங்களை ஆரோக்கியமானவையாக ஆக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, "ஆயிரம் நகரங்கள் - ஆயிரம் வாழ்க்கை" என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் நகரங்களில் ஆரோக்கியத்திற்காகச் செயல்படும் அமைப்புகளின், ஆயிரம் சாதனைக் கதைகளை தொகுத்து, அனைவரும் அறியச் செய்வது; மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது.
மேலும் தகவல் அறிய:
http://www.who.int/world-health-day/2010/en/index.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக