ஐந்து நாட்கள்.
மாபெரும் நிகழ்வு இங்கு நடந்து முடிந்துள்ளது.
கொஞ்சம் மலைப்பாகவும் இருக்கிறது.
முழுக்க பெண்கள் கலந்துக்கொண்டு பெண்களுக்காக பேசிய நிகழ்வு.
முதல் நாள் நான் இணையத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி பேசினேன்.
தொழிலில், குடும்பத்தில் ,ஆணாதிக்கத்தில், சட்டம் என பல்வேறு அலசல்கள். டாக்டர்.ஷாலினி உளவியல் பேச்சு அருமை.
முதல் நாள் நெல்லை உலகம்மாள் மாற்றுத்திறனாளிகளின் சவால்கள் , தன்னம்பிக்கை பேச்சு மனதை அன்பில் நெகுழ்ந்து ஊசலாட செய்தது. இரு நாட்கள் காணொலி இன்னும் பார்க்க வேண்டியது உள்ளது
கடைசி நாள் "முந்நீர் மகடுஉ" தலைப்பு. (எப்படிதான் யோசிச்சாங்களோன்னு மூணு நாளா யோசிக்கிறேன் )
புலம்பெயர் பெண்களின் சவால்கள்..பல புரிதல்கள்
தமிழச்சியின் முத்தாய்ப்பான பேச்சு. இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இப்பொழுதைக்கு அந்த ஒடு எடுத்து வைத்து கணவனை பிரிவது. ஏ..கோமதி, வெயிலை இடுப்பில் வைத்துக்கொண்டு போவது, ஊரின் பேச்சுகளில் உள்ள நியாயம், அதிகாரத்தொனி என்று ஊரும், மண்ணும், இலக்கியமும், பெண்களும், தன்னம்பிக்கையும் மிக அசத்தல்..ஒரு கச்சிதமான பேச்சுக்கு எத்தனை உழைப்பு வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். அறச்சீற்றத்தை எப்படி அழகாக வெளிப்படுத்துவது என்பதை அழகிய தோடு ஆட..இரு வட்டப்பொட்டுகள் மிளிர சுயமரியாதையை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது..சரியான, மிகத்திறமையான நபரை தமிழகம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதில் பெருமை.
எப்படிதான் சாத்தியமானாதோ .நிகழ்வை பிறழ்வில்லாமல் சீராக கொண்டு சென்றதன் பின் பெரும் உழைப்பு இருக்கிறது.
Subashini Thf அவர்களின் தீவிர உழைப்பு தெரியும். பல வருடங்களாக என்னை மிக வியக்க் வைக்கும் ஆளுமை அவர்
மலர்விழி ஒருங்கிணைப்பாளராக சோர்வே இல்லாமல் அசத்தினார்கள்..நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் முகத்தில் புன்னகை குறைவே இல்லாமல் இருந்தது.
நிகழ்வின் பேச்சுகள் பலரை சென்றடைய வேண்டும். கீழே தமிழ் மரபு அறக்கட்டளை பக்கத்தை பகிர்ந்துள்ளேன் அங்கு காணொலிகள் காணலாம்.
அப்ப்ப்பா .பெண்களின் மாபெரும் சக்தி. இனிஇணைந்து செய்லபட வேண்டும்
இயற்கை இத்தனை சக்திகளை ஒருங்கிணைத்து உள்ளது.
நம் சக்திகள் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் தெரிவிக்கிறேன்.
இது ஒரு ஆரம்பம்.
இனி சக்திகளின் பயணம் பல்கி பெருக வேண்டும் என்பது என் விருப்பமும்.
நன்றிகள் என்பது வார்த்தைகளின் அமைப்பு. மொழி
அதில் உள்ள உணர்வும், பெருமிதமும் சொல்ல முடியாதவை.
அன்பு அனைவருக்கும்
வேறென்ன.
லவ் யூ ஆல்
Grateful thanks to :
Aaranya Alli
Nivedita Louis
Malarvizhi Baskaran
Kirthika Tharan
and Facebook.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக