14 ஜூலை, 2020

கருத்து மேடை : இன்றைய கல்விமுறை


தங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் வல்லமை கொண்ட கல்வியை ஆசையாய் விருப்பப்பட்டுக் கற்க வேண்டிய டீன்ஏஜ் பருவத்தில்,

பெண்குழந்தைகள்  காதலில் விழுவதற்கும்
பையன்கள்  ரவுடியாவதற்கும் காரணம் : 

1.கவர்ச்சியற்ற கல்விமுறை,

 2.மனப்பாடம் செய்ய வேண்டிய சூழ்நிலை , 

3.அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள்  அதிபுத்திசாலிகள், 

4.குறைந்த மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மண்டுகள்  என்று நம்பும் சமுதாயம் ,

5. தொடக்கப் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்களுக்குப் பதிலாக
இரு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் பணிச்சுமையால் கற்றல் பாதிக்கப்படுவது ,

6.குடித்துவிட்டுத் தெருவில் சாக்கடை ஓரத்தில்  வீழ்ந்து கிடக்கும் தகப்பன்களால் மனஉளைச்சலில் ஊறிவரும் குழந்தைகளின் மனநிலை ,

7.குழந்தைகள் மீதான தாய்களின் பாசம் தந்தைகளின் கொடுமைகளால் குறைந்து போகும் போக்கு ,

இவையெல்லாம் 

எதிர்காலத் தமிழகத்தில் மக்கள், புரிதல் இல்லாத , இயந்திரத்தனமான,  சுரத்தில்லாத வாழ்க்கை வாழக் காரணமாகிவிடும். அதுவும் பானிபூரிக் காரர்களுக்கு அடிமைகளாக.

அப்புறம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக, 
அதன்பிறகு ஏதேனும் ஒரு வல்லரசு ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறிவிடும்.

கல்வியும் விவசாயமும் சிறப்பாக உள்ளதாகக் கூறி நடித்தால் இரண்டும் இல்லாமல் போய்  மீண்டும் ஏதேனும் ஒருநாட்டில் தேயிலைத் தோட்ட அடிமைகளாகத்தான் பிழைக்க நேரிடும்.


Grateful thanks to Ms Sengamala, Facebook.

கருத்துகள் இல்லை: