இன்றைய வாசிப்பு : "துணையெழுத்து".
எஸ் ராமகிருஷ்ணன் எழுதியது
இரண்டாம் முறையாக வாசிக்கிறேன் ஓவியங்கள் மருது எனக்கு பிடித்த ஆசிரியர் எனக்கு பிடித்த ஓவியர் .எனவே மீண்டும் வாசிக்க விரும்பினேன்.
ஒருவன் நிறைய புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும் நிறைய நாடுகளுக்குச் செல்ல விரும்பினாலோ அல்லது நிறைய உலகப்புகழ் திரைப்படங்களை பார்க்க விரும்பினாலும் தவறாமல் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்களை படித்தாலே போதும் அதனால் தான் நான் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசிக்கிறேன்; ஒருமுறைக்கு இருமுறையாக.
இது விமர்சனம் அல்ல ,வாசிப்பு அனுபவம் .நான் வாசிக்கும் பொழுது என்னை பரவசப்படுத்தும் பரவசப்படுத்திய வரிகளைத்தான் இங்கே நான் அங்கே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இவரின் உபபாண்டவம் படிக்கிறேன் படிக்கிறேன் படித்துக்கொண்டே இருக்கிறேன் எத்தனை முறை வாசித்தேன் என்று எனக்கே தெரியவில்லை வாசிக்க வாசிக்க புதிய வாசல்களைத் திறந்து வைக்கிறார் புரிந்து கொள்ளத்தான் எனக்கு போதிய அறிவு இல்லை.
இவர் தேசாந்திரி இவரை சுற்றி வராத நாடுகளே இல்லை ,இடங்களேஇல்லை இந்தியா முழுக்க சுற்றி இருக்கிறார் இவர் பார்க்காத படங்களே இல்லை இவர் படிக்காத புத்தகங்களை இல்லை என்று சொல்லிவிடலாம் இவையெல்லாவற்றையும்விட எழுத்துக்களை வாசித்து விட எழுத்துக்களை எழுதியவரின் எழுதியவரை நேரிலே நேரடியாகச் சென்று கொஞ்சி குலாவி வாசித்து மதிப்பவர் . இது வியப்புக்குரியது .தேசாந்திரி பதிப்பகத்தை ஆரம்பித்த இவர் ஒரு தேசாந்திரி.
இவர் சொல்வது போல ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகை கொண்டிருக்கிறான் .அது அவனை ஒரு வயதில் இருந்து இன்னொரு வயதுக்கு மெதுவாக கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்துக்கு அறியாமையிலிருந்து விழிப்புக்கு அறிந்ததிலிருந்து விஞ்ஞானத்துக்கு என அதன் சிறகுகள் அசைந்தபடி தான் இருக்கின்றன .துணை எழுத்தின் வழியாக இவர் தனது வாழ்வை அவிழ்த்து பார்த்துக்கொண்டு விவரிக்கிறார். வாழ்வின் கசப்பும் தித்திப்பு நாக்கில் மறுமுறை தோன்றி மறைகிறது. யாரெல்லாம் இவர்கள் ஒளிந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் இவரை ஆச்சரியப்படத்தக்க அளவிலேயே எழுதி வைக்கிறார்.
விகடன் ஆசிரியர் சொல்வது போல ஒருஜன நெருக்கடி மிகுந்த ரயிலில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு போவதைப் போல ,தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடி கொண்டே பயணம் ஆகிக் கொண்டிருக்கிறார் .பயணத்தில் நம்மையும் சக பயணியாக சேர்த்துக் கொண்டிருக்கிறார் பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள் பாத்திரங்களில் சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்ல இறங்கி பேரன்பில் மலர்த்தி வைப்பவை.
பல கட்டுரைகள் அவற்றில் சில கட்டுரைகள் குறித்து கீழே உள்ளவாறு.
" காலத்தின் சங்கீதம் "தலைப்பில் அவர் எழுதும் பொழுது 'வாழ்வின் துவக்கமும் முடிவும் வயதால் மட்டுமே வருவதில்லை உருவாவதில்லை; செயல்கள்தான் வாழ்வை அர்த்தப்படுத்தும் 'என என்று மிகவும் அற்புதமாக குறிப்பிடுவார் .நம் காதோரம் வருகின்ற நரை கூட காலத்தின் நுரை பட்ட கறைதான்.
நத்தைகளின் கால்களால் நடந்தால் கூட உலகை சுற்றி வர முடியும் என்று தோன்றுகிறது .மீதமிருக்கும் நாட்களுக்காக ,சந்திப்புக்காக, நிகழ்ச்சிகளுக்காக ,ருசிக்காக வேலைகளுக்காக ,சரி தவறுகளுக்காக என்னை சுற்றிய உலகுக்கு அதன் கருணைக்கு நன்றி சொல்லவே ஆசைப்படுகிறேன்,' என்பார்.
"முதற் கல்"கட்டுரையில் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் வன்முறையால் உயிர் பலிஆவது தவிர்க்க வேண்டும் . இது காலத்தில் சகஜமாக போய் விடுவதை மிகவும் கண்ணீரோடு சொல்வார்.
" வெறுங்கோபம் "இதில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது .கட்டுப்படுத்த மிகவும் நலமாக இருக்கும் என்று குறிப்பிடுவது .ஒரு பிச்சைக்காரர்களின் கோபத்தினால் அவர்கள் கூட்டு கோபத்தினால் நடந்த நிகழ்வை மிகவும் அற்புதமாக விவரிப்பார் .கோபம் ஒரு காட்டுக் குதிரையைப் போன்றது .அப்படியே விட்டுவிட்டால் கைவசப்படுத்த முடியாது. கடிவாளமிட்டு விட்டால்நினைத்ததை சாதிப்பதற்கு உதவியாக இருக்கும் .ஆனால் கோபத்தை பழக்குவது எளிதல்ல .மிகவும் அற்புதமான ஒரு கருத்து குவியல்.
முத்திரையிடப்பட்ட நாட்கள் புதுமைப்பித்தனின் அறைக்குச் சென்று வந்த விபரங்களை குறிப்பிடுவார் கண்ணீர் கங்கை என பெருகக் கண்டேன். இவரின் விசேஷமே எதையும் போகிற போக்கில் எழுதாமல் அந்த இடத்திற்குச் சென்று அதனை நேரில் கண்டு ஆழ்ந்து அனுபவித்து தான் எழுதுவார் .இவர் சொல்வார்" லண்டனில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் நாடகாசிரியரும் பிறந்த வாழ்ந்த பணியாற்றிய இடத்துக்கும் சிறப்பான அடையாளக்குறிகள் இடப்பட்டு அந்தந்த தெருக்களில் பெயர்ப்பலகைகள் இருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. அது போல் தமிழ்நாட்டில் ,பாரதி தவிர ஒருவரையும் எந்த எழுத்தாளரும் பெருமை படுத்தாமை இவரை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்கிறது.
"கல்லில் உறைந்த புன்னகை" சிற்பங்களின் சிறப்பு மிக அழகாக எழுதியிருப்பார் கூடவே காசில்லாமல் அடைந்ததையும் விவரித்திருப்பார் அருமை.
" காணாமல் போவது எப்படி".தான் தேசாந்திரியாக ஆக விரும்பியது ,முதல் வித்து விழுந்த விதம் விவரித்திருப்பார்.
" ஒரு கொத்து சாவி "மனதை உருக்கும்.
"வேலை இல்லாதவனின் பகல"் இது குறித்து கலைஞர் முதல் பாலகுமரன் வரை மிகவும் அழகாக விரித்திருப்பார்கள் இவரின் பார்வைகள் இதுவும் அழகாக தெரிவிக்கப்படுகிறது. காருக்குறிச்சி அருணாச்சலம் குறித்து விவரமாக தெரிவித்திருப்பார் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள red violin, life is beautiful லைஃப் இஸ் பியூட்டிஃபுல் இரண்டு படங்களையும் என் வீட்டு home theaterல் பார்க்கும் அனுபவம் கிட்டியது.
"சொல்லாத சொல்" மௌனம் இது குறித்து மிகவும் சிலாக்கியமாக எழுதியுள்ளார. பேச்சின் மீது ஏன் இத்தனை பிடிப்பு.பேச்சுதான் நட்பை காதல் உறவை பலவகையில் குரோதத்தையும் எல்லாவற்றின் உருவாக்குகிறது .பேச்சை கற்றுக் கொள்வதைப் போல மௌனத்தையும் எளிதில் கற்றுக் கொண்டு விட முடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வது தான் மௌனம் .சொல்லின் வலி சொல்லால் வெளிப்படுத்தப்பட முடியாதது .
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பாஸ்கர் என்கிற நண்பர் மூலமாக மூலம் கடை பிடிக்க ஆரம்பித்தேன். திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் பள்ளி நாட்களில் கல்லூரி நாட்களில் பிறகு ஒரு பத்து வருடங்கள் பணியிடத்திலும் நான்மௌனம் கடைப்பிடித்தேன். இப்போது என்னாலும் எப்போது வேண்டுமானால் மௌனத்தை ஆயுதமாக கொள்ள முடியும்.
விஸ்தாரமான காடுகளை நூறுவயதான மரங்களை நம் சொந்த நலன்களுக்காக அழித்து ஒழித்து விட்டு அவரவர் வீடுகளில் தொட்டிச் செடிகள் வைத்து ஆறுதல் கொள்கின்ற மனிதர்களாகிய நமது இழிசெயலை "வீட்டுச் செடிகள் "மூலம் வெளிப்படுத்துகிறார்.
"ஏரியின் கண்கள் " நைனிடால்.இங்குள்ள ஏரியில் இதை யாரை பார்க்க விரும்புகிறது அவர்களை மட்டும் தான் இந்த ஊருக்கு அழைத்துவருமாறு செய்யும்.எல்லோரையும் பார்க்கக்கூடிய அந்த ஏரியின் கண்களையும் நம்மால் பார்க்க முடியாது. புத்தகங்கள் வாசிப்பது மட்டுமல்ல அவை இவ்வுலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சாலைகள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு பென்னிகுக் வரலாற்றையும்" நீரில் மிதக்கும் நினைவுகள் "அழகாக சொல்கிறது.
முத்தாய்ப்பாக "காற்று எழுதியகாவியம்". கவிதை கதை ஓவியம் சிற்பம் கட்டுரை மொழியாக்கம் விமர்சனம் என கலை இலக்கியத்தின் முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர் ;தத்துவம் மெய்தேடல் துவங்கி பெயரில் ஜோதிடம் வரை அவரது தேர்ந்த அறிவும் செயல்பாடும் வியப்பானது .தருமு சிவராம் என்று அழைக்கப்படும் பிரமிள் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக பாரதிக்கு நிகரான கவிஞராகவும் கூர்மையான விமர்சகராகவும் அறியப்பட்டிருந்தார் .ஒரு பறவையின் இறகு குறித்து அவர் எழுதிய கவிதை எல்லோராலும் விரும்பப்பட்டது. அவரின் சமாதியை நோக்கி கரடி குடி என்கிற ஊரில் ஒரு அருகிலுள்ள அவரின் சமாதிக்கு இவர் சென்று மரியாதை செய்தது எனில் ஏதோ செய்துவிட்டது. கண்களில் ஜலப்பிரவாகம்.
இதுதான் இவருக்கு மற்ற எழுத்தாளருக்கு உள்ள வித்தியாசம் .எழுத்துக்களை எழுதிய அவர்களைத் தேடிச் சென்று நிதமும் கண்டுகளித்து அனுபவித்து எழுதுபவர்.
வாழ்க எஸ் ராமகிருஷ்ணன்.
நன்றி : திரு.கருணா மூர்த்தி, திரு.எஸ்ரா மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக