30 டிச., 2024

நலக்குறிப்புகள்

இந்துக்களின் பண்டிகைகள் 2025

🌺 *இந்துக்களின்* *பண்டிகைகள் 2025* 

வெள்ளி 10 ஜன - வைகுண்ட ஏகாதசி

செவ்வாய் 14 ஜனவரி - பொங்கல்

செவ்வாய் பிப்ரவரி 11 - தைப்பூசம்

புதன் 26 பிப்ரவரி - மகா சிவராத்திரி

புதன் 12 மார்ச் மாசி மகம் 

ஞாயிறு 30 மார்ச் - உகாதி

ஞாயிறு 6 ஏப்ரல் - ஸ்ரீராம நவமி

வெள்ளி 11 ஏப்ரல் பங்குனி உத்திரம்.

திங்கள் 14 ஏப்ரல் - தமிழ் புத்தாண்டு

திங்கள் 14 ஏப்ரல் - விஷு

திங்கள் 12 மே - சித்ரா பௌர்ணமி

திங்கள் 9 ஜூன் - வைகாசி விசாகம்

வியாழன் 17 ஜூலை - ஆடி தொடங்குகிறது

திங்கள் 28 ஜூலை - ஆடி பூரம்

ஞாயிறு 3 ஆகஸ்டு ஆடிப் பெருக்கு 

வெள்ளி 8 ஆகஸ்ட் - வரலக்ஷ்மி விரதம்

சனி 9 ஆகஸ்ட் - ஆவணி அவிட்டம்

சனி 16 ஆகஸ்ட் - ஆடி முடிவடைகிறது

சனி 16 ஆகஸ்ட் - ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

புதன் 27 ஆகஸ்ட் - விநாயகர் சதுர்த்தி

வெள்ளி 5 செப் - ஓணம்

புதன் செப்டம்பர் 17 - புரட்டாசி ஆரம்பம்

திங்கள் 22 செப் - நவராத்திரி துவக்கம்

புதன் 1 அக்டோபர் - சரஸ்வதி பூஜை

வியாழன் 2 அக்டோபர் - விஜய தசமி

வியாழன் 16 அக்டோபர் - புரட்டாசி முடிவு

திங்கள் 20 அக்டோபர் - தீபாவளி

புதன் 22 அக்டோபர் - கந்த சஷ்டி ஆரம்பம்

திங்கள் 27 அக்டோபர் - சூர சம்ஹாரம்

வியாழக்கிழமை 4 டிசம்பர் திருக்கார்த்திகை 

செவ்வாய் 16 டிசம்பர் - மார்கழி ஆரம்பம்

புதன் 31 டிசம்பர் - வைகுண்ட ஏகாதசி.

குட்டிக்கதை

        நன்றி : மாலை மலர் 

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக சிந்தனை

ஆன்மீக மஞ்சரி

அருள்வாக்கு

29 டிச., 2024

சூரியின் நாட்குறிப்பு -73: விரிந்த பொருள் காணல்


மகான்கள் ஒரு வார்த்தையிலோ, ஒரு வரியிலோ, அல்லது வள்ளுவப் பெருந்தகை போல் ஒன்றேமுக்கால் அடியிலோ சுருக்கமாகச் சொல்வதை உரையாசிரியர்கள் பெரிதாக விரித்துக் சொல்வதை நாம் பார்க்கிறோம்.  எளிதில் புரிந்து கொள்ள அது உதவுகிறது.

திருக்குறளுக்கும், பகவத்கீதைக்கும் எவ்வளவு பேர் உரை எழுதியிருக்கிறார்கள்!

இவை தவிர சீரிய சிந்தனைகளை படிக்கும் நாமும் நமது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு பல இடங்களில் பலவிதமாக பொருள் கொள்கிறோம்.

மகான்களின் ஒப்பற்ற சிந்தனைகளை இடத்திற்குத்தக்கவாறு விரிந்த பொருள் அல்லது ஆழ்ந்த பொருள் காணமுடியும்.

உதாரணமாக வினோபாஜியின் கீதைக் கதைகளில் படித்த ஒரு சிறுகதை என் நினைவிற்கு வருகிறது. சுருக்கமாக அதைக் கீழே தருகிறேன்.

ஒருசமயம் தேவரும், அசுரரும், மானிடரும் பிரம்மாவிடம் உபதேசம் பெறச் சென்றார்கள். 

பிரம்மா அனைவருக்கும் "த" என்ற எழுத்தை உபதேசமாக அளித்தார்.

"தேவர்களாகிய நாம் காமம் அதிகமுள்ளவர்கள். சுகபோகங்களில் நமக்கு ஆசை அதிகம். ஆகவே பிரம்மா நமக்கு 'தமனம்' (புலனடக்கம்) தேவை என்பதை 'த' என்ற எழுத்தின் மூலம் உபதேசித்திருக்கிறார்"
என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

"அசுரர்களாகிய நாம் மிகவும் முன்கோபக்காரர்கள். எனவே தயா (கருணை) தேவை என்பதை சுட்டிக்காட்டவே 'த' என்ற எழுத்தை உபதேதித்திருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

"மனிதர்களாகிய நாம் உலோபிகள், பணப்பித்தர்களாகி விட்டோம். எனவே தானம் புரியவேண்டும் என்பதை உணர்த்தவே 'த' என்ற எழுத்தை உபதேசித்துள்ளார்"
என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

பிரம்மா அவர்கள் புரிந்துகொண்டது சரியென்றார். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவரவர் அனுபவத்திலிருந்தே உபதேசத்தைப் புரிந்துகொண்டிருந்தார்கள். 

கீதையின் உபதேசமும் இத்தகையதே. கீதையின் சொற்களுக்கு விரிந்த பொருள் காணவும், அவரவர் அனுபவத்தை ஒட்டிப் பல்வகைப் பொருள் கொள்ளவும் கீதோபதேசம் சிந்தனை சுதந்திரம் அளிக்கிறது.

என் சொந்த அனுபவங்கள் இரண்டை அடுத்தடுத்து தருகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இன்றைய புத்தகங்கள்

நலக்குறிப்புகள்

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

27 டிச., 2024

குட்டிக்கதை



)எழுதியவர்​ பேர் தெரியல.... சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டுது... செம்ம செம்ம.... இவ்ளோ நகைச்சுவையா ஒரு விஷயத்தை விவரிக்க முடியும்னு தெரியும்போது.... எந்நேரமும் விறைப்பாவே திரியுற நமக்கு வெக்கமாத்தான் இருக்கு...)

வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்....
******** ********** *************
கொலைப் பசியோடு
ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.

முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .
பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.
முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.
நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .

" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.."
சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .

குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .

" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? "
மறுபடி பெருசு உருமியது.

" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..
அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"
அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .
படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.
எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.
ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.

" தம்பி தோசை வரல .."

" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."

" தெரியுதுப்பா ..
அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"

" உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .

அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.

" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.

" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,
இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..
அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.
எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.
அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.

சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.
" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..
சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"

" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .."
எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.
திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..
ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில்
ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.

" வத்தக் குழம்பு இல்லையா ..?"

" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.

" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும்
அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.
இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.
மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .
அவருக்கு பரம திருப்தி.

அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .
" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"

" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .." மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.
காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று.
காபியை இழக்க எனக்கு மனமில்லை.
ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும்
ஒரு சிப் இழுத்துகொண்டேன்.
புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.

" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..
வா அந்த லைனுக்கு போவோம் .."
அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.
அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.
என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர். இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது. இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் , என் அருகில் அனைவரும் புது முகங்கள்.

ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.
என் அருகில் வந்ததும் , " பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் . பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே , ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள்.
வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.
எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .
மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு , இலையை மூடிவிட்டு
ஒரு கையில் ஐஸ் கிரீம்
மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது

" சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே .. உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.
திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால்,

" நான் இல்லப்பா .." என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்.

நிம்மதியா திங்கவிட மாட்றானுவ.....

உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது.

உணவு வீணடிக்கப்படுகிறது.

- படித்து இரசித்தது.

இன்றைய புத்தகம்

அஞ்சலி 🙏

உங்கள் சிந்தனைக்கு

இன்று ஒரு தகவல்

முன்னேற்றப் பாதை

அருள்வாக்கு

வீர வணக்கம்

தாமதமான பதிவு!  தாமதத்திற்கு வருந்துகிறேன் 🙏

25 டிச., 2024

சூரியின் நாட்குறிப்பு-72: என் இனிய தனிமையே...

மதன் கார்க்கி கவிதையை, சித் ஶ்ரீராம் குழைத்து வார்த்தைகளில் வடிக்க, உறுத்தாத இனிய பின்னணி இசையை டி. இமான் வழங்க, டெடி திரைப்படத்தில் வரும் இனிய பாடல்!

இனிய பாடல்தான் என்றாலும் ஒரு மிக மெல்லிய சோகமும் ஏக்கமும் இழைந்தோடும் பாடல் என்பதை படம் பார்த்தவர்களால் ஓரளவிற்கு உணர முடியும்.

தனிமை ! அதைப் பற்றி நிறைய பாடியிருக்கிறார்கள். அதன் மேன்மையை, தனிமை பழகு என்றும், ஏகாந்தம் இனிது என்று அழுத்தந்திருத்தமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறார்கள். 

ஆனால் அதை வாழ்வில் பல கால கட்டங்களில் ஒரு வலியாகவும், குறையாகவும் உணர்ந்திருக்கிறேன். இன்று அதை இனிமையாக உணர முயல்கிறேன். 

ஆர் கே நாராயணின் கதாநாயகனின் வேதனையை என் வேதனையாக உணர்ந்ததுண்டு. The English Teacher நாவலில் வரும் அந்த நாயகன் தற்செயலாகப் பார்த்த பெண்ணை,  செவ்வாய் தோஷம் போன்ற பல தடைகளைப் பிடிவாதமாகத் தாண்டி மணக்கிறான். மூன்று நாள் காய்ச்சலில் அவனையும், அவனது இரண்டு வயது பெண் குழந்தையையும் தவிக்க விட்டு மறைகிறாள். சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிய, அவரவர் தம் வீடு திரும்ப, இறுதியில் அவன் அன்னையையும் அவனது இரண்டு வயது மகளுடன் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்புகிறான். வெறுமையான வீட்டில் அமர்ந்திருக்கையில் அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள், கேள்விகள்.

தன் பால்ய நண்பர்கள்...
அவர்களெல்லாம் எங்கே? பள்ளித்தோழர்கள் எங்கே? கல்லூரி சகாக்கள் எங்கே? 
அப்பா காலத்தில் இருந்த அவனது பெரிய கூட்டுக் குடும்பம் என்னவானது? 

 சிலர் மறைய,  பிறர் அவர்களுக்கென குடும்பம், குட்டி, வேலை என்று சிதறிப் போய் விட்டார்கள். தனிமை மட்டுமே சத்தியம், நிரந்தரம் என்பதை உணர்கிறான். நாராயணின் மறக்க முடியாத, அழகிய ஆங்கில வார்த்தைகளில் சொல்வதானால், *LONELINESS IS THE ONLY UNMITIGATED TRUTH OF LIFE*

திருப்பதியில் எம்.காம். தேர்வெழுதச் சென்றிருந்த போது, தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்டமான, அழகிய வண்ணமலர் பூத்துக்குலுங்கும் தோட்டத்துடன் கூடிய அற்புதமான நூலகத்தால் ஈர்க்கப்பட்டு, என் தேர்வையெல்லாம் மறந்து, சில மணி நேரம் அங்கே செலவிட்டேன். 

அங்கே ஆர் கே நாராயணின் பெயர் கேள்விப்படாத நாவல் ஒன்று: 

*GRATEFUL TO LIFE AND DEATH*. 

ஆச்சரியமாக இருந்தது. அவரது படைப்புகள் அனைத்துமே எனக்கு அத்துபடி. அதை எடுத்து புரட்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அது THE ENGLISH TEACHER தான் என்பது தெரிந்தது.

அதை மறு பதிப்பிட்ட ரசனைமிக்க அமெரிக்க பதிப்பாளர், (throwing away the prosaic title, The English Teacher,) அந்த நாவலின் கடைசி வரியை தலைப்பாக மாற்றியிருந்தார், GRATEFUL TO LIFE AND DEATH என்று!

உண்மையில் அது நாராயணின் சொந்தக் கதை!

தனிமையைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம்,  பேசிக்கொண்டே இருக்கலாம். பார்க்கலாம். ஏன் நீங்களும் பேசலாம்.  பேசுவீர்களா? 

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

22 டிச., 2024

குட்டிக்கதை


கார்கில் யுத்தம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து  பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் . அதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில நாட்களில்  வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்தரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .
.......
கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 
இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர்.  மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .
ஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.
.......
வாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா ? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ... "இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல "...என்று சொல்லி நிறுத்தினார். 
வாத்தியார் அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப் பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் " என்று கூற "நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ... 
"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின்  எச்.எம்.ஜியால்  வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபடவென்று தெறிக்கவிட்டானுங்க.  பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...." என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ  கொஞ்சம் பெருமூச்சு விட்டார். 
"என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்கன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .
அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் . நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .
....
பாகிஸ்தானியர் எச்.எம்.ஜியிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம் ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .
உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார்  . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .
ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் ." என்று பெருமூச்சுடன் முடித்தார். 
கிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார்.  
வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு "
என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல.. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு.. இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க .. அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வச்சிறலாம். ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு  கொண்டு வந்தேன் . ஆனால்  இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் . கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.
நமக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள். வீணாப்போன அரசியல்வியாதிகளையும், சினிமா கூத்தாடிகளையும் கொண்டாடாமல்
வீணான பொழுதுபோக்காக வீட்டில் வெட்டி வேலை செய்யாது 
 உண்மையான செயல்வீரர்களை கொண்டாடுங்கள்..

சூரியின் நாட்குறிப்பு-71: மனம்போன போக்கில்


மனம்போன போக்கில் :
 உறக்கம் வராத ராத்திரிகள்! 

"அவளோட ராவுகள்" மாதிரி கிளுகிளுப்பான தலைப்பு.  ஏமாந்துவிடுவீர்கள்,  முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  

வாலிபத்தில், திருமணத்திற்கு முந்திய காலத்தில்,  ஆஸ்துமா நோயினால் படாதபாடு பட்ட அனுபவங்கள். (திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது) முயன்றால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் மாற்றி ரசிக்கக்கூடியதாக ஆக்கமுடியும் என்று என்னை உணரவைத்த அனுபவங்களில் ஒன்று. 

குளிர் மாதங்களில்,  குறிப்பாக மார்கழி மாதத்தில், இரவு ஏன் வருகிறது,  வராமல் போய்விடாதா என்று எண்ணவைக்கும்.  

இரவு படுத்தால் திகை ஏற்பட்டு,  மூச்சுத்திணறல் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து,  கொஞ்ச நேரம் உலாவி,  எப்படியோ இரவைக் கடத்த வேண்டும். உறங்கவே முடியாது.  நரக வேதனை.  ஆனால் மனதை வேறெதிலோ லயிக்கச் செய்துவிட்டால் பொழுது போவது தெரியாது.  தூக்கமின்மை ஒரு தொல்லையாகத் தெரியாது. சீக்கிரம் விடிந்துவிடும். காலை வந்துவிட்டால் கவலை இல்லை, பெரிய விடுதலை. (உண்மையில் ஒரு ஸ்ப்ரே அல்லது ஒரு இன்ஹேலர் எளிய தீர்வை அளித்திருக்கக்கூடும்.  சரியான வழிகாட்டுதல் இன்றி தேவையில்லாமல் துன்பப்பட்டிருக்கிறேன்.  பழைய கர்மா கடனை அடைத்திருக்கிறேன் என்றும் கொள்ளலாம்.) 

ஆனால் மனதை லயிக்கச் செய்யும் பொழுதுபோக்கை கண்டுபிடிக்க வேண்டும். படிக்கலாமென்றால் கண்கள் சோர்ந்திருக்கும்.  மேலும் விளக்கைப் போட்டால் மற்றவர் தூக்கத்திற்கு இடைஞ்சல். இருட்டிலே வேறென்ன செய்வது? BY TRIAL AND ERROR  அந்த வழியை கண்டுபிடித்தேன்.  

கார்ட்டூனிஸ்ட் அபு ஆபிரஹாம் காட்டிய அந்த வழிக்குப் பெயர் CREATIVE IDLENESS என்பதாகும்.  அது என்ன என்கிறீர்களா?  CREATIVE IDLENESS IS TAKING YOUR MIND FOR A WALK.  மனத்தை அதன் போக்கில்,  சிறு வழிகாட்டுதல்களுடன்,  சுவையான எண்ணங்களை உருவாக்கி அவற்றில் தோய்தல். 

ஒரு சொல் அல்லது ஒரு எண்ணம், அதிலிருந்து அதன் தொடர்புள்ள மற்றொரு எண்ணம் என  சங்கிலித் தொடரை உருவாக்கி,  மனதுடன் உலா வருதல்.

உதாரணமாக,  விடிந்தால் வியாழக்கிழமை.  வியாழன் நோக்கு வந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவது.  

வியாழபகவான்  பிருகஸ்பதி  தேவர்களின் குரு. நவகிரகங்களில் ஒருவராகவும் வழிபடுதல் வழக்கு.  இவர் நான்கு  வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறியவர். நவக்கிரக அந்தஸ்து பெற்றவர். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழ கிரகம் ராஜகிரகம் எனப்படுகிறது. ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர்.

ஆங்கிலத்தில் வியாழக்கிழமை THURSDAY.  THOR'S DAY என்பதன் மாற்று வடிவம்.  THOR IS THE NORWEGIAN GOD OF THE SEA என்று படித்தது நினைவிற்கு வருகிறது.  

தோர் என்ற பெயர் வேறெங்கோ அறிமுகமான பெயரல்லவா! ஆம்,  தோர் ஹேயர்தால் (THOR HEYERDAHL) ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அறிவியலளாளர்,  எக்ஸ்ப்ளோரர். 
இவரது KON-TIKI EXPEDITION உலகப்புகழ் பெற்றது.  1948ல் வெளியான இந்த நூல் உலகப்புகழ் பெற்றது.  நான் அதை வாங்கிப் படித்து பல காலம் வைத்திருந்தேன்.  அதிலுள்ள படங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.  

பஸிபிக் மஹா சமுத்திரத்தை கட்டுமரத்தில் கடந்து பாலினீசிய தீவுகளுக்கு பயணம் செய்து,  கொலம்பஸ் வருவதற்கு முந்திய காலத்தில் தென்அமெரிக்காவிலிருந்து பழங்குடியினர் பசிபிக் மஹாசமுத்திரத்தை கட்டுமரத்தில் கடந்து பாலினீசியாவில் குடியேறி இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்ய இந்தப் பயணம்.  

அவரது கட்டுமரத்தின் பெயர் கோன்-டிகி. இது இன்கா இந்தியர்கள் வழிபட்ட சூரிய பகவானின் பெயர்.  அந்தப் பழங்குடியினரைப் போலவே தாமும்  ஐந்தாறு நண்பர்களுடன் கட்டுமரத்தில் கடந்தார்.  மிகுந்த ஆபத்தான,  பாதுகாப்பில்லாத இந்தப் பயணம் பெரிதும் பேசப்பட்டது.  புத்தகமாக வந்து விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது.

இந்தியாவிலும் சூரியன் கடவுளாக வழிபடப்படுகிறார்.  ஆதிசங்கரர் தொகுத்த ஆறு மதங்களில் (ஷண்மதம்)  சௌரமும் (சூரியனும்) ஒன்று.  அநேகமாக எல்லாக் கோவில்களிலும் சூரிய தேவனுக்கு ஒரு இடம் உண்டு.  ஒரிஸ்ஸா மாநிலம் கோனாரக்கில் சூரியனுக்கு தனிக்கோவிலே உண்டு. 

சூரிய பகவானை போற்றிப்பாடும் பக்தி சூத்திரம் ஆதித்ய ஹிருதயம்.  ஆதித்தன் என்றாலும் சூரியன்தான். கதிரவன்,  மலரவன், ஆதவன் என்று தமிழில் பல பெயர்களில் வழங்குவதைப் போல் வடமொழியிலும் ஆயிரம் பெயர்கள். ஆதித்ய  ஹ்ருதயம்  வால்மீகி இராமாயணத்தின் ஒரு சிறு பகுதி. 

காஞ்சிப் பெரியவர்கள் கூறியது :

''பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கள். அந்த ஸ்லோகத்தைப் படித்தால் மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும். இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். முடிவில்லாதபோரால்
ராமருக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. ''எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது! இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?'' எனக் கவலைப்பட்டார். அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார். அவ்வளவு தான்...ராமரின் 
சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்''.

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். 

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. 

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை மையமாக   வைத்துக்கொண்டு அனைத்துக் கிரங்களும் சுற்றுகிறது. சூரியன் தலைமை தாங்கும் தகுதியைத் தருகிறார். ஆண்மையைத்     தருகிறார். நிர்வாகத்திறமை அளிக்கிறார். சூரிய ஒளி அனைவருக்கும் பாகுபாடு இன்றி அளிப்பது போல் எல்லோரையும் சமமாக நினைப்பவர், தயாள தன்மை உடையவர். பேதம் கிடையாது, சாதி  பாகுபாடு கிடையாது. எல்லோரையும் சரி சமமாக நடத்துவர். இரகசியம் கிடையாது. வெளிப்படையாக பேசுவர். வள்ளல் தன்மை உடையவர். இல்லை என்று சொல்லாத தன்மை பேரும் புகழும்  உடையவர்.

SUN GAZING கண்களுக்கு அற்புத ஆற்றலைத் தருகிறது. ஆனால் அதை முறைப்படி செய்ய வேண்டும். 

இன்னும் விடியவில்லையா?  மீதி எட்டு கிரகங்கள் இருக்கின்றனவே! இல்லாவிடில் ஏதாவது ஒரு தொடர்புள்ள சொல் கிடைக்கும். அதைப் பிடித்துக் கொண்டு சங்கிலித் தொடராக பயணம்! 

இப்படி காலம் வழிந்தோட,  சிவன் கோவிலில் மார்கழி மாத  பஜனைப் பாடல்கள் இசைத்தட்டு ஒலிக்க ஆரம்பித்து விடும்!  

அப்புறமென்ன?  பல் துலக்கி, சூடான வென்னீர் பருகி,  காலைக்கடன்கள் முடித்து,  அருமையான காப்பி பருகி,  அடுத்த நாளுக்கு தயாராகிவிடுவேன்!

😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

நலக்குறிப்புகள்

21 டிச., 2024

புத்தகப்பிரியர்களுக்காக


ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.

விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும்
இந்த தமிழ் நூல் காப்பகமே..
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் .

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் 

புலவர்
பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. 

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீசியசு  அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.

திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. 

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள்,  சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்சு , அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்..

நூலகத்திற்கான
தனி கட்டிடத்தை
50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும்  கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.

இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், 
நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார்.  24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். 

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....

எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

இன்று ஒரு தகவல்

*முக்கியச் செய்தி*

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, 
*பட்டா* மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, 
உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது 
*பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், 
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். 
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 
தவறு செய்யும் விஏஓக்களை 
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை 
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. 
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
*பட்டாவை* வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம *நத்தம்* நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. 
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு 
பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய 
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். 
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) 

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும். 

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court 

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் 
*பட்டா* மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை,  பதிவுகளை
 
மக்களுக்கு விழிப்பு உணர்வு
ஏற்படுத்துங்கள்

அருள்வாக்கு

நலக்குறிப்புகள்

இன்றைய புத்தகம்

கவிதை நேரம்


நன்றி, நெல்லையப்பா!