5 ஜன., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-71: அருள்

சைவனாய் பிறந்து
பழக்கத்தால் ஊனுண்டு
குறள் படித்து தெளிந்து
விட்டுவிடப் போராடி
வள்ளலார் அருளாலே
விட்டு விடுதலையாகி
மாதம் பத்து கடந்த பின்
முரசறைகிறான் இப்போது!

"எங்ஙனம் ஆளும் அருள்?" என்று
குறள் படிக்கும் போது
நெருடல் இல்லை இப்போது
நன்றி பாட்டையா நன்றி!