வானந்தம் மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்கு
ஆனந்தம் தந்த அரசே பராபரமே.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
தாயுமானவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயுமானவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30 ஜூன், 2010
29 ஜூன், 2010
தாயுமானவரின் பராபரக்கண்ணி-13:
பார்த்தஇடம் எல்லாம் பரவெளியாய்த் தோன்றஒரு
வார்த்தை சொல்லவந்த மனுவே பராபரமே.
28 ஜூன், 2010
27 ஜூன், 2010
26 ஜூன், 2010
25 ஜூன், 2010
தாயுமானவரின் பராபரக்கண்ணி-9:
திக்கொடு கீழ்மேலும் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக்கனியே பராபரமே
23 ஜூன், 2010
21 ஜூன், 2010
தாயுமானவரின் பராபரக்கண்ணி-7:
உரையிறந்த அன்பர் உளத்தோங்கொளியாய் ஓங்கிக்
கரையிறந்த இன்பக் கடலே பராபரமே.
18 மே, 2010
14 மே, 2010
9 மே, 2010
தாயுமானவரின் பராபரக்கண்ணி-3:
கண்ணாரக் கண்டோர் கருப்பொருள் காணாமல் அருள்
விண்டிருந்த இன்ப வெற்பே பராபரமே.
விண்டிருந்த இன்ப வெற்பே பராபரமே.
8 மே, 2010
2 செப்., 2009
தாயுமானவர் பாடல்-3:
அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சை வைத்து உயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாம்
தம் தெய்வம் எம் தெய்வமென்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல்பகல் அற நின்ற எல்லையுளதெது அது
கருத்திற்கு இசைந்ததுவே
கண்டன எல்லாம் மோனவுரு வெளியதாகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்.
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சை வைத்து உயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாம்
தம் தெய்வம் எம் தெய்வமென்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளதெது மேல்
கங்குல்பகல் அற நின்ற எல்லையுளதெது அது
கருத்திற்கு இசைந்ததுவே
கண்டன எல்லாம் மோனவுரு வெளியதாகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்.
29 ஆக., 2009
தாயுமானவர் பாடல்-2:
ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
ஆளினும் கடல்மீதினிலே
ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.
ஆளினும் கடல்மீதினிலே
ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.
29 அக்., 2008
தாயுமானவர் பாடல்-1:
ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் நாட்டமே
நாட்டத்துள் நிறைந்த வானமே
எனக்கு வந்து வந்தோங்கும் மார்க்கமே
மருளர் தாம் அறியா முதலே
முத்தி நல்வித்தே
முடிவிலா இன்பமே
செய்யும் தானமே
தவமே
நின்னை நான் நினைந்தேன்
தமியனேன் தனை மறப்பதற்கே.
நாட்டத்துள் நிறைந்த வானமே
எனக்கு வந்து வந்தோங்கும் மார்க்கமே
மருளர் தாம் அறியா முதலே
முத்தி நல்வித்தே
முடிவிலா இன்பமே
செய்யும் தானமே
தவமே
நின்னை நான் நினைந்தேன்
தமியனேன் தனை மறப்பதற்கே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)