8 ஜன., 2014

நலக்குறிப்புகள்-77: வாழைப்பூ

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.


பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

ஆன்மீக சிந்தனை-46:

எல்லாவித மதவேறுபாடுகளையும் நீங்கள் விட்டுவிட வேண்டும். ஒரே மதம்தான் உள்ளது.  அதுவே அன்பு மதம்.  ஒரே ஜாதிதான் உள்ளது. அதுவே மனித ஜாதி.  ஒரே மொழிதான் உள்ளது.  அதுவே இதய மொழி.


-ஸ்ரீ சத்ய சாய் பாபா

இன்றைய சிந்தனைக்கு-174:

மனப்பகையே பகை.  அதை அறப்போரில் வெல்க.  வாய்மையே வச்சிராயுதம்.  அன்பே அம்பு.  பொறுமையே வில்.  ஆத்ம சக்தியே பீரங்கியிலும் பெரிய படைக்கலன். 


-           யோகி சுத்தானந்த பாரதியார்

3 ஜன., 2014

நலக்குறிப்புகள்-76: உலர் திராட்சையின் அற்புதம்

புகை பிடிப்பதைத் தடுக்கும் அறுமருந்து  புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிட்டால் அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம்.   புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி இது.

ஆன்மீக சிந்தனை-45:

இந்த உலகே ஒரு மருத்துவமனைதான்.  மனிதகுலம், உடல் ரீதியான, உணர்வு ரீதியான, மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  எந்த வகையான சிகிச்சை தேவை?  தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதே இதற்கான சிகிச்சை ஸ்ரீ சத்ய சாய் பாபா

இன்றைய சிந்தனைக்கு-173:

ஆன்மநேயமென்னும் ஊற்றுனின்று பொசியும் அருவியே அன்பு யோகி சுத்தானந்த பாரதியார்