"அமெரிக்காவில் ஓராண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் 5லட்சம் 'பரிசோதனை கொரோனா தடுப்பூசி'களினால் ஏற்பட்ட பாதகங்கள் மக்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முப்பது ஆண்டுகளாக வந்த தடுப்பூசி புகார்களை விட மூன்று மடங்கு அதிகம்" ~ ராபர்ட் கென்னடி ஜூனியர்.
அமெரிக்க அரசியல் தலைவர்.
இந்தப்பதிவில் எனக்கு இரு முக்கிய விடயங்கள் உள்ளது.
ஒன்று.
இந்தியாவில் தடுப்பூசி பாதகங்கள் பற்றி புகார் அளிக்க மக்களுக்கு ஏதுவான ஒரு தளம் இல்லை.
தற்போது செயல்பட்டு வரும் AEFI பற்றிய அறிவு மருத்துவர்களுக்கே கிடையாது. இத்தனைக்கும் மக்களிடம் தென்படும் பாதகங்களை புகார்களை மருத்துவர்கள் தான் இத்தளத்தில் சேர்க்கவேண்டும்.
மக்களும் மருத்துவர்களும் ஒரேமாதிரி தடுப்பூசி பாதகங்கள் பற்றிய போதிய அறிவியல் மற்றும் அறம் சார்ந்த அறிவு இல்லாமல் இருப்பது இத்தளம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருக்க முக்கிய காரணம். மருத்துவர்களுக்கு இந்த அறிவை சேர்ப்பது ஒரு பக்கம் செய்தாலும், புகார்களை அளிக்க மக்களுக்கு தடையாக இருக்கும் AEFI அறிவில்லாத மருத்துவர்களை முதலில் நீக்க வேண்டும். இங்கும் வளர்ந்த நாடுகளில் உள்ளது போல
மக்களே நேரிடையாக புகார் அளிக்கும் வகை செய்தல் வேண்டும்.
இரண்டாவது, தடுப்பூசி பாதகங்கள் பற்றிய பேச்சுகள் இந்திய அரசியல் தலைவர்களிடம் இதுவரை நடைபெறவில்லை.
இதற்கு காரணம், மக்களிடம் போதிய தடுப்பூசி பாதகங்கள் பற்றி விழிப்புணர்வு பெற்றவர்களின் கணிசமான எண்ணிக்கை அதாவது ஓட்டு வங்கி இல்லை.
எப்பேற்பட்ட அரசியல் தலைவர் ஆகினும் மக்கள் நலன் என்பது ஓட்டுவங்கி வரையிலும் தான். இதை நான் உறுதியாகச் சொல்வேன்.
எனில், மக்கள் மற்றும் மருத்துவர்களிடம் தடுப்பூசி பாதகங்களின் அறம் மற்றும் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு பெருகவேண்டும்.
இது ஒரு நெடிய பயணம். இதை
கொரோனா சற்றே துரிதப்படுத்தியுள்ளது என நம்புகிறேன்.
நன்றி :