கருணை உள்ளமே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணை உள்ளமே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2025

கருணை உள்ளமே, கடவுள் இல்லயே...


.                                                                   Wikimedia Commons 


கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரைஇந்த இடைப்பட்ட 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 310 கோடி ரூபாயை ஒரு தமிழ் நடிகர் நன்கொடையாக பிறருக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் அந்த சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்.

🙏🙏🙏🙏🙏🙏

10 மார்., 2023

கருணை உள்ளமே... : டாக்டர் ஐடா ஸ்கடர்..!

நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார்.  "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!

ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.

"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..!

இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!

இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம்,  தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.

ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! 

ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும்  பெற வைத்தார் ஐடா..!

இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!

நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..!

ஆனால், யார் இந்த பெண்?  இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்?  இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!!

ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!

28 ஜன., 2022

கருணை உள்ளமே...

படத்தில் நீங்கள் பார்ப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; இவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று இவர் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!

அலோக் சாகர் இவரது பெயர். ஐ.ஐ.டி டெல்லியில் படித்து பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அதன்பின் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எச்.டி என்னும் முனைவர் பட்டம் பெற்று ஐ.ஐ.டி பேராசிரியராகப் பணிபுரிந்தும் வந்தார். ஒருநாள் திடீரென அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் வந்தடைந்த இடம் 750 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம்!

ஆம்... கடந்த 35 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் வசிக்கும்  கிராமத்தில் வசித்து வருகிறார்; மேலும் அங்கு வாழும் மக்களுக்கு சேவை செய்தும் வருகிறார்.
சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழிகளையும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இவருடைய முன்னாள் மாணவர். அவரைப் போன்று இன்று புகழ் பெற்று விளங்கும் பலரும் இவரிடம் பயின்றவர்கள்.

ஐஐடி வேலையை ராஜினாமா செய்ததும் மத்தியபிரதேசத்தில் உள்ள பேட்டுல் மற்றும் ஓசங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி கிராமங்களில் முதலில் பணி செய்ய ஆரம்பித்த அவர் தன் இருப்பிடமாக ஒரு சின்னம் சிறு குடிசையை கொசாமு என்கிற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் ஏற்படுத்திக் கொண்டு வசிக்க ஆரம்பித்துவிட்டார்.

அங்குள்ள பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக்கிறார். கிராமவாசிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கி மரம் நடுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.

"நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர மக்கள் பாடுபட வேண்டும். இங்கு அறிவை பெருக்குவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தான் மக்கள் தங்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்களே தவிர கஷ்டப்படும் ஏழை மக்களின் துயர் துடைப்பதில்லை" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய பின்புலம் பற்றி மக்கள் முதலில் அறியவில்லை. ஒரு தேர்தலின் போது தான் இவரைப் பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்து இருக்கிறது. அது வரை மக்களோடு மக்களாக ஒரு எளிய வாழ்க்கை முறையைத் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்.

சாகர் டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்கத் தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்களை இலவசமாகக்  கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சாகர் அதை மறுத்து விட்டார்.

இவரது தந்தை ஐ.ஆர்.எஸ். அலுவலராக இருந்தவர் 2015- இல் மரணித்து விட்டார். தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்; தம்பி ஐஐடி டெல்லியில் பேராசிரியர். இன்று 69 வயதாகும் இவர் தினசரி 60 கிலோமீட்டர் கிராமங்கள்தோறும் சோர்வில்லாமல் பயணித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

“கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே” என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. "தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்" 

எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளென மாறிவிட்ட நிலையில் இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே சான்று!

நன்றி :

20 ஜூலை, 2021

கருணை உள்ளமே.... மாமேதை ஜோனாஸ் சால்க்

#தெரிந்து_கொள்ளுங்கள்_நீங்களும்

     மொத்தமும் தேவையில்லை.அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்...

--என்று அவர் கூறியதை உலகம் அதிசயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தது.

அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்?

-- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது.

அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு மொத்த உலகமே காத்திருந்தது.

ஏப்ரல் 12, 1955.

ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.
ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.
அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.

அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி  வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.
ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.
இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.
பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து பார்த்து விட்டோம்.
அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.
இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின்
"அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார்.
எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

---என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,
பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, பிரார்த்தனைகள் நடக்கிறது.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--
மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும்,
புகைப்படக்காரர்களும்
அந்த மனிதரை--
அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு,
பல கேள்விகளைக் கேட்டார்கள்.
அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி...

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,
பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?"
என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு,
அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே.
இதை மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே...
இவர் ஏன் அப்படி செய்யவில்லை....
என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எல்லோரும் கேட்டனர்.

அமைதியான
சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?
இதற்கா?
எனக்கா?
உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"

---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்ல,
அக்காலக் கட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள
ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--
உடலின் நோயெதிர்ப்பு சக்தி--
அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை,
ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.

எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,
இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால்,
அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை.
வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-
பின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த,
அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.
பின் அந்த செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்--
உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.
இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை
செய்து விட்டு,
அதை இலவசமாக
மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற,

அவர்தான்
மருத்துவர்  "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

நன்றி :