30 நவ., 2017

எனக்குப் பிடித்த கவிதை-78: கடல்...

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

நன்றி: தண்ணீர் தேசம், கவிஞர் வைரமுத்து


எனக்குப் பிடித்த இணையதளம்/வலைப்பூ,-2: க்ரியா

எனக்குப் பிடித்த இணையதளம்-2:

க்ரியா இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் காணலாம்.

க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில்  450,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்.

திருக்குறள்-32: ஒழுக்கத்து நீத்தார் பெருமை...

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

நெல்லையப்பன் கவிதைகள்-90:

 நெல்லையப்பன் கவிதைகள்

படிப்பினை
பிள்ளையாரப்பா ... 
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!

எங்க வாத்தியாருக்கு 
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!

இதையெல்லாம்
ஏன்  சொல்லித்தரல
இத்தனை நாளா?

சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.

புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.

இப்ப  நான் கத்துக்கிட்டது 
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.திருவருட்பா-6: துடிஎன்னும் இடைஅனம்...

தினம் ஒரு திருவருட்பா

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாள்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

திருமந்திரம்-20: ஒக்க நின்றானை...

தினம் ஒரு திருமந்திரம்

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே.


     இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.உடனாய் நிற்பவன்; அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப்பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறை வனை நான் அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.

திருப்புகழ்-5: திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் ...

தினம் ஒரு திருப்புகழ்

பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்

திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்.     

பாரதி கவிதைகள்-30: ஐய பேரிகை கொட்டடா...

ஐய பேரிகை
பல்லவி

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
சரணங்கள்
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)
3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)

பாரதிதாசன் கவிதைகள்-17: பொறுமை

பொறுமை

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்

பொறுமைதான் உன்றன் உடைமை!.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-67:

வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன்

சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே. 

எங்கள் இந்தியா-2: உலகில் தபால் தொடர்பில் முதலிடம்

எங்கள் இந்தியா-2:  உலகில் தபால் தொடர்பில் முதலிடம்

தபால் தொடர்பில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.  தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை  1,55,015.  சராசரியாக 7,175 மக்களுக்கு ஒரு தபால் நிலையம்.  மிதக்கும் தபால் நிலையம் ஸ்ரீநகரில் தால் ஏரியில் செயல்படுகிறது .

நன்றி : திரு.ஆகர்ஷ் மெஹ்ரோத்ரா

நலக்குறிப்புகள்-108: கரும்புச்சாற்றின் மருத்துவ குணங்கள்

கரும்புச்சாற்றின் மருத்துவ குணங்கள்

உடலை சுறுசுறுப்பாக்கும்.
அஜீரணத்தைப் போக்கும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்

சிரிக்கவும் சிந்திக்கவும்,-5: மனைவி போன்

Call from Wife:
கணவன் : சொல்லுடா தங்கம், என்ன

மனைவி:  ஏங்க இன்னைக்குதேதி என்னங்க

கணவன்:  இன்னைக்கு தேதி 12 ஏன்மா

மனைவி:ஒன்னும் இல்ல,​ வைய்ங்க.

கணவன்:  பதற்றம் அடைந்தவனாக  *அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே என்ன ஆச்சோ, என்ன தேதியோ தெரியலயே,

Eb பில் கட்டியாச்சு
பால் பணமும் கொடுத்தாச்சு
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு
கேபிள் பணமும் கொடுத்தாச்சு

தன் அம்மாவுக்கு போன் பண்றான்
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ

அடுத்த மாசம் டா. ஏன்

ஒன்னும் இல்ல. வை

🙎மாமியாருக்கு போன் பண்றான்

அத்தை.. மாலாவுக்கு  பிறந்தநாள் எப்போ

12வது மாசம்தான் மாப்ள. ஏன்.‼

சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்.

தன்👱மகனுக்கு போன் பண்றான்

அம்மா ஏதும் பாத்திரத்த ஒடைச்சாளா
இல்லப்பா

கோபமா இருக்காளா

இல்லப்பா

என்ன பண்றாள்

டீவீ பாக்குறாங்கப்பா.

சரி வை

மனைவிக்கு போன் பண்றான்

தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட

ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்

சரிடா வைச்சிட்றேன்


பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிருச்சே.. லூஸ்

Posted as received in WhatsApp

ஆன்மீக சிந்தனை-75: சிந்தையில் அழுக்கிருந்தால்...

ஆன்மீக சிந்தனை


கந்தையில் அழுக்கிருந்தால், கசக்கினால்தான் போகும்.  சிந்தையில் அழுக்கிருந்தால், இறைவனைச் சிந்திக்க சிந்திக்கதான் போகும் காஞ்சிப் பெரியவர்

இன்றைய சிந்தனைக்கு-208: மனித உடலின் மகத்துவம்

இன்றைய சிந்தனைக்கு


உறக்கம், உழைப்பு, உணவு, உடலுறவு, எண்ணம் இவைகளில் எவற்றையும் மறுப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம் அறியாதோர் செய்கையாம் வேதாத்ரி மகரிஷி