28 நவ., 2022

படித்ததில் பிடித்தது

திசையை எட்டாகப் பிரித்தான் தமிழன் 

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 
இசையை ஏழாக கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் 
சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு 
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் 
நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்
வாடை 
கோடை 
கொண்டல்

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் 
இசை
நாடகம்

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 
புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 
புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 
அதை... 
உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

" ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "

திருச்சிற்றம்பலம்🙇
👌👌👌👌👌

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

இன்றைய குறள்

27 நவ., 2022

படித்ததில் பிடித்தது

இரண்டிற்கும் வித்தியாசம்,
வயது மட்டுமே...

35 வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர். 
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த  பிள்ளை.  
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து , 
குளித்துக் கொண்டிருந்தேன். 

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை.  கண்ணை திறக்க முடியாமல், 
இரண்டு கையாலும், 
என்னை சுற்றி , சுற்றி, 
சொம்பை, தேடினேன். 

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.  

எனக்கு புரிந்து விட்டது. 

 சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. 

 எனக்கு , கண் எரிகிறது 
என்று அவளுக்கு தெரியவில்லை. 

 நான் , சொம்பை தேடுவதில்,
 அவளுக்கு ஒரு ஆனந்தம். 

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் , 
ஒரு தூசி  விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.  

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை , 
மறைத்து வைத்து... 
அவர்கள் தேடுவதை கண்டு 
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக  மாறும் போது.... 

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து, 
அவள் மனதை,  காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன்  சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். 
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என , 
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது , 
என  கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு. *Simple but beautiful*..👌👌👌

சர்வம் *கிருஷ்ணார்ப்பணம்*..

நன்றி :
முனைவர் 
பி ஜி பாலகிருஷ்ணன்

கவிதை நேரம்

பூனை : கு.அழகர்சாமி 

சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல

இன்று ஒரு தகவல்

26 நவ., 2022

இன்றைய குறள்

கவிதை நேரம்

நன்றி :
முனைவர்
அ சு இளங்கோவன் 

சிரிக்கவும் சிந்திக்கவும்

இன்றைய திருமந்திரம்

இன்று ஒரு தகவல்

👏அரசு புதிய திட்டம்....

🚑🚑🚑
இன்று முதல், '104' என்பது இந்தியாவில் இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்ணாக இருக்கப் போகிறது. 
"Blood On Call" என்பது சேவையின் பெயர்.. இந்த எண்ணை அழைத்த பிறகு, 40kms சுற்றளவில் நான்கு மணி நேரத்திற்குள் இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/ மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100. 
தயவுசெய்து இந்த செய்தியை அனுப்பவும். 
இந்த வசதியால் பல உயிர்களை காப்பாற்ற முடியும்........
🚨🙏

24 நவ., 2022

ஆன்மீக சிந்தனை

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

வஉசி நினைவுகள்

நூல்மயம்

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

இன்று சில தகவல்கள்

23 நவ., 2022

மாணவர்கள் கவனத்திற்கு

ஆன்மீக சிந்தனை

இன்றைய குறள்

இன்றைய சிந்தனைக்கு

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

நூல்மயம்

NCBH புத்தகத் திருவிழா 2023

சேலம் புத்தகத் திருவிழா 2022

18 நவ., 2022

இன்றைய குறள்

அபூர்வமான படம்

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

நண்பர் அண்ணாமலையின் ஓவியக் கண்காட்சி

அண்ணாமலை செந்திலுடன் (இணைபிரியா நண்பர்கள்) 

       காரைக்குடி செக்ரி 

17 நவ., 2022

இன்றைய குறள்

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

நூல் நயம்


வேடிக்கை பார்ப்பவன்,
நா. முத்துக்குமார்,
கட்டுரை தொகுப்பு,
விகடன் பிரசுரம்,
செப்டம்பர் 2014,
239 பக்கங்கள்,
ரூ 230/-

   1975ல் காஞ்சிபுரத்தில் பிறந்த இந்நூலாசிரியர், இளங்கலை இயற்பியல் மற்றும் முதுகலை தமிழ் இலக்கிய பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் ஆய்வுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஃபிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    தன் வரலாறு கூறுவதை, மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்திருக்கிறது இந்நூல். தாயை இழந்த ஒரு கிராமத்து சிறுவன், தன் பால்ய வயது நினைவுகளை, தந்தையின் கரம் பற்றி தடம் பதித்த இடங்களை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த பொழுதுகளை, திரைப்படத்துறையில் முன்னுக்கு வர எடுத்துக்கொண்ட பயிற்சிகளை, பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவங்களை, முதல் இரண்டு கவிதைத் தொகுப்பு, நூலாக வெளிவர உதவிய நல்லுள்ளங்களை, தன் மகனுடன் வாழ்க்கையைக் கொண்டாடிய தருணங்களை அவர்தம் எளிய எழுத்து நடையின் வழி நம்மை வேடிக்கை பார்க்க செய்திருக்கிறார்.

    இவரின் அப்பா ஓர் அரசுப்பள்ளி தமிழாசிரியர். சம்பளத்தின் பெரும்பகுதியை மட்டுமல்லாது, கடன் வாங்கியும் புத்தகத்தைக் குவித்திருக்கும் இலக்கிய தாகத்தைத் தன் மகனிடம் பகிர்ந்தபோது, "நீங்கள் கடன் வாங்கி நிறைய வாசியுங்கள். உங்கள் கடனை நான் அடைக்கிறேன்." என கூறும்போது முகம் தெரியாத அக்குழந்தையின் மீது வாஞ்சை ஏற்படுகிறது.

    இக்கட்டுரைகள் தொடராக வந்த போது பூங்காவில் ஒருவர், இதை எழுதி இருக்கலாமே! அதை எழுதி இருக்கலாமே! என்று கருத்து சொன்ன போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக,
"எழுது உன் கவிதையை நீ
          எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை                 
      என்றால் ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னை கேட்காமலேனும் இரு" என்ற சுந்தரராமசாமி வரிகளைப் பகிர்ந்தது பல கருத்து கந்தசாமிகளுக்கும் பொருந்தும்.

படித்ததில் பிடித்தது:
"இருப்பதற்காக வாழ்கிறோம்
இல்லாமல் போகிறோம்"
நகுலன்.

"பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். சூரியனைச் சிறைபிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை". நன்றி!

நன்றி :
பா. கெஜலட்சுமி,
சென்னை - 19.


சிரிப்புத்தான் வருகுதையா

சர்வதேச மாணவர்கள் தினம்

அருள்வாக்கு

16 நவ., 2022

அபூர்வமான படம்

A Police officer transporting a prisoner in a holding cell in 1921

இன்றைய குறள்

நூல்மயம்

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

நலக்குறிப்புகள்

உலக சகிப்புத்தன்மை தினம்