24 செப்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-7: நான்-ஸ்டிக் தவா (Non-stick Tawa)

நான்-ஸ்டிக் தவா

நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில் வைக்கும்போது, பெர்ஃபுளூரோக்டானாய்க் அமிலம் (Perfluorooctanoic acid -PFOA) வெளியாகும். இதை ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். நாளாக ஆக, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். மேலும், நான் ஸ்டிக்கில் கீறல் விழுந்தால், இதில் வெளியேறும் நஞ்சானது உணவிலும் கலந்துவிடும்.


நன்றி: புஷ்பா ராஜ், www.tinystep.in

சிரிக்கவும், சிந்திக்கவும்-2:

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லைனு தலைவர் சொல்றாரே, யாருய்ய அந்த  நாலு பேரு?”

“அவர், அவர் சம்சாரம், ரெண்டு பசங்க!”


-         நன்றி: எஸ்.வெங்கடசுப்ரமணியன்

நெல்லையப்பன் கவிதைகள்-88 கலி காலம்

95. கலி காலம்

நல்ல தலைவர்கள்
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.
.
தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.
.
இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.
.
வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.
.
மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு

காலம் இன்னும் கனியவில்லையாம்!

தேவாரம்-12 துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர் இன்பம் வேண்டில்...

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.   

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகம் - பாடல் 5.31.3

(ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

திருவருட்பா- 4 திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி...

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

திருமந்திரம்-18 ஒன்ற அவன்தானே ...

ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 

திருப்புகழ்-3 நூற் பயன்

நூற் பயன்

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு.

பாரதி கவிதைகள்-26 இன்று புதிதாய்ப் பிறந்தோம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா 

பாரதிதாசன் கவிதைகள்-15 அன்பு

1.19 அன்பு

அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?

தாயுமானவரின் பராபரக்கண்ணி-65

வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்
சிந்திக்க நின்னதருள் செய்யாப் பராபரமே

நலக்குறிப்புகள்-103 பப்பாளி

பப்பாளி


உயர் இரத்த அழுத்தம், மாதவிலக்குக் கோளாறுகள், தோல் நோய்கள், நீரழிவு, சிறுநீரகக் கோளாறு. இதய நோய் ஆகிய பிரச்சினைகளுக்கு நல்ல மருந்து.

ஆன்மீக சிந்தனை-69: அதிவீரராம பாண்டியன்

புகழ், செல்வம், பேரறிவுடன் திருப்பொலிவு, உண்மையான இன்பம், முக்தி ஆகியவற்றை விரும்புவோர் மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனத் துதிக்கவேண்டும் – அதிவீரராம பாண்டியன்

இன்று ஒரு தகவல்-58: சென்னை தமிழ் அகராதி-2:

சென்னை தமிழ் அகராதி-2:
சென்னைக்கு புதிதாக செல்லும் மற்ற ஊர்க்காரர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

கப்பு – நாற்றம்
கில்பான்ஸ் – பளபளப்பான ஆள்
கில்லி – திறமையான ஆள்
குஜால்ஸ் – கொஞ்சல்
குஜிலி – இளம்பெண்
இப்பிடிகா – இந்த வழியாக
சோமாரி – ஒழுக்கமற்றவன்
ஜகா வாங்குறது – பின்வாங்குவது
ஜல்பு – ஜலதோஷம்
ஜல்சா – சரசம்
பிகிலு – விசில்
வூட்டாண்ட – வீட்டிற்குப் பக்கத்தில்

இன்றைய சிந்தனைக்கு-202:

பஞ்சபூதங்களால் ஆன இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது.  அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன், மனமும் மாசடையும்.  இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம் – ஸ்ரீ சத்ய சாய்பாபா