திஜாவின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திஜாவின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை, 2021

நூல் நயம் : திஜாவின், "மலர் மஞ்சம்"

தி.ஜானகிராமனின் இரண்டாவது நாவல் "மலர் மஞ்சம்".சுதேசமித்திரன் இதழில் தொடராக வெளிவந்து பிறகு நூல் வடிவம் பெற்றது.

பாலம்மா என்ற பாலி கதையின் நாயகி.அவள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு இறக்கிறாள் ராமையாவின் நாலாவது மனைவி அகிலாண்டம்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற உறுதியுடன் செயல்படும் ராமையா ஒருபக்கம், அதேபோல இறுதியில் பாலியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற காசிக்குச் செல்லும் கோணவாய் நாய்க்கர். இப்படியாக இரண்டு ஆண்களின் உறுதித்தன்மை.

பெண்ணின் மனநிலையை தி.ஜா அவ்வளவு நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.நிச்சயம் செய்யப்பட்ட ஆடவன் ஒருபக்கம், வளரும்போது ஏற்படும் வேறு ஒரு ஆடவன் மீதான காதல் இந்த இரண்டு பேரில் யாரை மணப்பது என்ற மனப்போராட்டமே கதையின் முக்கிய களம்.

தி.ஜா வின் படைப்புகளில் பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் சீர்காழி போன்ற ஊர்களையே அதிகமாக எழுதியுள்ளார்.தஞ்சையின் பெருமையான பெரிய கோவில் பற்றிய தகவல் இந்த நாவலில் தான் காணப்படுவதாக நான் உணர்கிறேன்.

ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு திரைப்பட காட்சி போன்ற கதை நகர்வு இருக்கிறது.ஏனென்றால் வையன்னா கதாப்பாத்திரத்திம் ஒரு வில்லனைப்போல வரும்.

மலர் மஞ்சம்
காலச்சுவடு
690 ரூபாய்
600 பக்கங்கள்.

நன்றி :