31 மே, 2020

பெற்றோர்கள் கவனத்திற்கு

கொரோனா தடுப்பு மருந்து

குட்டிக்கதை

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி

காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது.

“என்னை கண்டு பயமில்லையா“ எனக்கேட்டது புலி

“தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன்

புலிக்குச் சிவப்புக் கொண்டை மீனைப் பிடித்திருந்தது.

மறுநாள் புலி நீர் நிலைக்கு வந்த போது சிவப்புக் கொண்டை மீன் அதே உற்சாகத்துடன் துள்ளியது.

புலி தண்ணீர் குடிக்கும் போது சிவப்புக் கொண்டை மீன் சப்தமாகச் சொன்னது

“உன் கோபத்தைத் தண்ணீரிடம் காட்டாதே“

புலிக்கு அந்த மீனின் மீது கோபம் வரவேயில்லை. மாறாக அதன் மனதில் சிவப்புக் கொண்டை மீன் போலத் தானும் துள்ளியாட வேண்டும் என்ற ஆசை உருவானது.

புலி அந்த மீனைப் பார்த்துச் சொன்னது.

“நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது “

“எனக்கும் தான். ஆனால் உன் உருவம் தான் என்னை அச்சமூட்டுகிறது“

“ நான் உன்னைக் காதலிக்கிறேன். என் கண்களை மட்டும் பார். பயம் வராது“.

“நீ எப்போதும் கோபமாகவே இருக்கிறாய். சந்தோசப்படவே தெரியலை. உன்னிடம் உற்சாகமேயில்லை உன்னை மாற்றிக் கொள்ளாமல் காதலிக்க முடியாது “ என்றது சிவப்புக் கொண்டை மீன்

“அப்படியே பழகிவிட்டேன், நான் ஒரு புலி“

“என்னையே நினைத்துக் கொண்டேயிருந்தால் உன் மனதில் காதல் நிரம்பும். அப்போது உன்னால் துள்ளி ஆட முடியும். `.` என்றது சிவப்புக் கொண்டை மீன்

நிஜமாகவா என்றபடியே புலி தன் இருப்பிடத்திற்குப் போனது. நாள் முழுவதும் மீனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. சிவப்புக் கொண்டை மீனின் அழகும். துள்ளும் விதமும் மனதில் காதலை நிரப்பியது. ஆனால் புலியால் மீன் போல துள்ளியாட முடியவில்லை.

மறுநாள் சிவப்புக் கொண்டை மீனைத் தேடிப் போய்ப் புலி சொன்னது

`.`உன்னை நினைத்துக் கொண்டாலும் என்னால் உன்போல் துள்ளியாட முடியவில்லை`.`

`.`நீ புலி என்பதையே மறந்துவிட வேண்டும். நீயும் ஒரு மீன் என நினைத்துக் கொள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன்.

அதன்படியே மறுநாள் புலி தன்னை ஒரு மீனாகக் கருதிக் கொண்டது. ஆனால் நீரில் துள்ளியாடுவது போல நிலத்தில் ஆட முடியவில்லை.

அடுத்த நாள் மீனைத் தேடிச் சென்றது. ஆனால் அந்தக் குளத்திலிருந்த சிவப்புக் கொண்டை மீனைக் காணவில்லை. ஏதோ ஒரு நாரை அந்த மீனைக் கொத்திக் கொண்டு போனதைப் புலி அறியவில்லை. அது மீனுக்காகக் குளக்கரையில் காத்திருக்க ஆரம்பித்தது.

சூரிய ஒளி தண்ணீரில் நடனமாடுவதைக் காணும் போது அதற்கு மீனின் நினைவு வந்தது. தன்னையே ஒரு மீனாகக் கருதிக் கொண்டு புலி நீரில் இறங்கி துள்ளியாடியது. அதைக் காணச் சிவப்புக் கொண்டை மீன் அங்கே இல்லை. அந்த ஏக்கம் புலியை வாட்டியது. அது பகலிரவாகக் குளக்கரையிலே காத்துக்கிடந்தது.

புலியால் அந்தச் சின்னஞ்சிறிய மீனை மறப்பது முடியாமல் போனது.

அதன் பிந்திய நாட்களில் புலி வேட்டையாடுவதை மறந்து குளக்கரையில் பகல் முழுவதும் காத்துக்கிடப்பதும் சில வேளை குளத்தில் தனியே துள்ளியாடிக் கொண்டிருப்பதும் ஏன் என எந்த விலங்கிற்கும் புரியவில்லை.

காதலில் விழுந்த பிறகு புலியாக இருந்தாலும் ஒரே விதி தானோ.

நன்றி: திரு எஸ்ரா, திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் & முகநூல்

பயனுள்ள தகவல்

உங்கள் கவனத்திற்கு!

இன்றைய குறள்

உணவே மருந்து

வாவ்! படங்கள்

பயனுள்ள குறிப்புகள்

கொரோனா மூன்று நாளில் குணமானது !

சிரிப்புத்தான் வருகுதையா

சாதனையாளருக்கு பாராட்டுக்கள்!

மக்கள் திலகம் நினைவுகள்

பாட்டி_சுட்ட வடையும், மக்கள்திலகம் கொடுத்த கொடையும்...

மக்கள்திலகம், விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச்சொல்கிறார்

தன் உதவியாளரை அழைத்த தலைவர்

"இடதுபுறமாக இருபது கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார்... அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம்

காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு"

-என்று கூறினார். அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது

தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார். அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுவல் பூத்தார்

உதவியாளர், எம்ஜிஆரிடம்

"ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள்?" என வியப்புடன் கேட்க 

அதற்கு எம்ஜிஆர்

"அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை 
அந்தப் பாட்டியோட தன்னம்பிக்கைக்கு, 
தளராத முயற்சிக்கு, இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கிற, அந்த வயதான தாயை கௌரவிக்க ஆசைப்பட்டேன்" என்றார்

இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது

இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, "யார் மூலம் பணம் வருகிறது? " என்பதை கண்டறிய எண்ணினார்

ஒருநாள்... இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி, பணத்தைப் போட யத்தனித்து போது, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்

அங்கே எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க 

" என் மவராசா நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே!

தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்கிற மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும்.

ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட "

அதற்கு வள்ளல் எம்ஜிஆர்,

"நான் உங்களுக்கு கொடுத்ததை, உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன்"

-என்று சொல்லி விடைபெற்றார் 

தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு "முதியோர் பென்சன் திட்டத்தை" அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்.

அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது 

இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்.

கல்விச் சிந்தனைகள்

இன்று ஒரு தகவல்

இன்றைய சிந்தனைக்கு

கோமியம் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகிறது!

வேண்டுகோள்!

30 மே, 2020

ஆன்மீக சிந்தனை

நூல்மயம்

இன்றைய குறள்

சுந்தர ராமசாமி அவர்களது பிறந்த நாள்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக இலக்கிய ஆளுமை பெற்றவர். 

பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். 

நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

நன்றி : தமிழ் விக்கிப்பீடியா


இந்தியாவில் தொற்று மற்றும் இறப்பு விகிதம்

இந்தியாவில் கொரோனா. 

Dr. கோ. பிரேமா MD(Hom),

ஒரு லட்சத்தில் , கொரோனா உறுதியானவர்கள், மற்றும் மரணங்களை பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும் இந்த படங்கள் உணர்த்துவது ஒன்றுதான். 

இந்தியாவில் கொரோனாவிற்கான நடவடிக்கைகளில் நாம் தன்னிச்சையான முடுவுகள் எடுக்கலாம். 

அமெரிக்கா போல, இத்தாலி போல என நம் மரபணு, உணவு, நுண்ணுயிரிசூழ்மம் எதிலும் பொருத்தமில்லாதவர்களோடு நமது ஆரோக்கியத்தை ஒப்பிடுவது தவறு. 

ஊரடங்கு இதை சாதித்தது என சொல்வதற்கு முன், குறைந்தபட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சிந்தித்து பார்க்கவும். 
ஊரடங்கு என்றோ பொய்த்துவிட்டது இந்தியாவில். 

ஆனாலும் கொரோனா எண்ணிக்கை,மரணங்கள் மிக குறைவு. 

காரணங்கள்:
1. நம் தனித்துவமான மரபணு
2. நமது உணவு கலாச்சாரம், இஞ்சி பூண்டு, சிறு வெங்காயம், துளசி, மஞ்சள், மிளகு, போன்றவை நமது அன்றாட உணவில் உள்ளது. 
3. நமது தட்பவெட்பநிலை. 
4. பட்டினியும் கடின உடல்உழைப்பும் பழகிப்போன பெரும்பான்மை இந்தியா.
5. நமது நுண்ணுயிர்சூழ்மம் புழக்கம். பெரும்பான்மை தொழில்கள் நுண்ணுயிர்களோடு. 
6. ஃப்ளு தடுப்பூசி , நிமோகாக்கல் தடுப்பூசி போன்ற சுவாசநோய்களுக்கான தடுப்பூசிகள் போடும் வழக்கம் இங்கே மிகவும் குறைவு. முக்கியமாக பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் பழக்கமே இங்கு இல்லை. 
7. இந்தியாவின் மரபு மருத்துவங்களும், ஓமியோபதியும் ,பல நல்ல மருத்துவர்களின் துணிவால் கணிசமான மக்களுக்கு சென்றடைந்துள்ளது. 

இனியும் உலகசுகாதாரமையம் சொல்லும் ஒற்றை கலாச்சார மனோபாவத்திலிருந்து இந்தியா தனக்கு தகுந்த கொரோனா நடவடிக்கைகளை யோசித்து முடிவு எடுக்கவேண்டும். 

படங்களுக்கு நன்றி: Dr. Srinivasa Ragavan

நன்றி: Dr ஜி.பிரேமா & முகநூல்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருந்து!

பயனுள்ள குறிப்புகள் : சர்தார் பட்டேல் ஸ்காலர்ஷிப்

நலக்குறிப்புகள்

வாவ்! படங்கள்

மலரும் நினைவுகள்

மறந்துபோன வீடியோ கேஸட்டுகள்! 

இன்றைய குறள்!

விவசாயிகளின் துயரம்

குட்டிக்கதை

செங்கல்பட்டில் இலவச ஹோமியோபதி முகாம்!

தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டீர்களா?

சிரிக்கவும் சிந்திக்கவும்

இன்று ஒரு தகவல்

இன்றைய சிந்தனைக்கு

தினமலரில் ஹோமியோபதி!

மக்கள் சேவையில் ஹோமியோபதி : பூவிருந்தவல்லி

இலவச கொரோனா தடுப்பு ஹோமியோபதி முகாம். 

இடம் : பூவிருந்தவல்லி 

நோயே, நோயே ஓடிப்போ நாயே!

மத்திய-மாநில அரசுகளால்  அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டு கொடிய கொரோனாவை உலக விட்டே விரட்டிடுவோம்!

விழித்திடுவோம்!  வென்றிடுவோம்!! 

29 மே, 2020

கொரோனா தடுப்பு மருந்து

இன்று ஒரு தகவல்


கோயில்களில் இதுபோன்ற நீளமான கோடு காணப்பட்டால் இதை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள். அதற்கு பின் இவ்வளவு விசயம் உள்ளது. (எல்லா கோடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டாம் சில நேரங்களில் அது அழகுக்காகவும் போடப்பட்டிருக்கலாம்) தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் குறுக்கே படத்தில் இருப்பதைப் போல் ஒரு கோடு இருக்கும். இது நில அளவைக்காக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழர்களால் பயன்படுத்தப்பட்ட அளவைக் கோல். அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் நிலங்கள் தானமாக அன்றைக்கு அளிக்கப்பட்டது. அப்படி தானமளிக்கப்பட்டது எத்தனை குழி, அந்த நிலம் ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் தெளிவாக கல்வெட்டில் குறிக்கப்படும். வடக்கு, தெற்கு என நான்கு திசைகளும் குறிக்கப்பட்டு இந்த திசையில் இந்த இடத்தோடு முடிவடைகிறது என்று அருகில் இருக்கும் ஒரு அடையாளமும் தெரிவிக்கப்பட்டிருக்கும். கோயில் சுவற்றில் இருக்கும் இந்த கோலின் அளவைக் கொண்டு தான் நிலத்தை அளந்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், நாளை கோயில் நிலத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால் மீண்டும் இந்த பொறிக்கப்பட்டுள்ள கோலின் அளவைக் கொண்டு கணக்கிடலாம் என்பதற்கும் அதை கோயில் சுவற்றில் நிரந்தரமாக பதித்தனர். இந்த கோல் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டது. இது முன்னரே பழக்கத்தில் இருந்தாலும். இராஜராஜன் தான் முதல் முதலாக சோழ நாடு முழுவதையும் நஞ்சையும், புஞ்சையும் தனித்தனியாக அளந்தான். சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் சிறப்பாக செய்து முடித்துள்ளது. இதனால் இராஜராஜன் "உலகளந்தான்" என்ற பட்டமும் பெற்றான். அப்படி அவன் காலத்தில் அளக்கப்பட்ட கோலிற்கு பெயர் "உலகளந்தான் கோல்" என்பதாகும். அது பதினாறு சாண் நீளமுடையதாக இருந்துள்ளது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு அரசு எப்படியெல்லாம் சிறப்பாக இயங்கியுள்ளது என்பதற்கு இதுவெல்லாம் நமக்கு கிடைக்கும் சாட்சி!


நன்றி: Ms அபி அபிநயா, புதிய தகவல், முகநூல்.

நூல் நயம்


புத்தகத்தின் பெயர் - மறைக்கப்பட்ட இந்தியா, எனது இந்தியாவின் பார்ட் 2 

எழுத்தாளர் - எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா) 

பதிப்பகம் - தேசாந்திரி 

வெளியான வருடம் - டிசம்பர், 2018 

லாக் டவுனில் நான் படித்த ஐந்தாவது புத்தகம். இந்த புத்தகமும் இந்த வருடம் புத்தக கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகத்தில் வாங்கியது. இந்த புத்தகம் ஜூனியர் விகடனில் தொடராக வந்தவையின் தொகுப்பு. 

நாம் ஒவ்வொருவரும் வரலாற்றில் நிறைய நிகழ்வுகளை நம் நண்பர்களுடன் பேசும் போது பேச்சு வழக்கில்  பேசி பேசி தெரிந்து வைத்து இருப்போம். சிலவற்றை youtube மூலம் விடியோகள் வழியாக பாத்து தெரிந்து வைத்திருப்போம்.  

அவற்றில் சில நிகழ்வுகள் நமக்கு மிகவும் இன்டெரெஸ்டிங் ஆகவும் படிக்கவும் தூண்டுதலாக இருக்கும். ஆனால் எந்த புத்தகத்தை படிப்பது / எந்த விடியோவை பார்த்து அந்த நிகழ்வை பற்றி இன்னும் தெரிந்து கொள்வது என்று நமக்கு தெரியாயது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நேதாஜி என்ன ஆனார், ராஜிவ் கொலை வழக்கு, operation ப்ளூ ஸ்டார் இப்படி பல விஷங்களை அடிக்கி கொண்டே போகலாம். இதை எல்லாம் பற்றி கண்டிப்பாக நாம் ஒரு முறையாவது நம் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்திருப்போம். 

அப்படி வரலாற்றில் நாம் இத்தனை வருடம் தெரிந்து கொள்ள தவறவிட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள் இதில் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர்.  நிச்சயம் இதில் பல surprise உங்களுக்கு படித்தால் காத்திருக்கு. 

அது போக, "வெள்ளைக்காரன் இந்நேரம் இருந்து இருந்தால் நமக்கு இன்னும் எவ்வளவு நன்மை நடந்து இருக்கம் தெரியுமா??" என்று நமக்குள் எத்தனை முறை பேசி இருப்போம். அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார். 

அது போக டாக்கா முஸ்லின் கதை, இந்திய பருத்தியின் அழிவு, ரகசிய / ஆசாத் ரேடியோவின் வரலாறு, டாடாவின் கதை, நேதாஜியின் இறுதி நேரம், நேதாஜி உருவாக்கிய டோக்கியோ கேடெட்ஸ், சாந்தி நிகேதன் ஆரம்பம் ஆனது, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, நுண்ணோவியங்கள் / கல்லாயுதங்கள், இந்தியாவில் அர்மீர்னியர்கள், காலிஸ்தான் வன்முறை (தற்போதைய பஞ்சாப்,     ஹிமாச்சல், ஹரியானா), பொற்கோயிலுக்குள் ராணுவம்,  காந்திக்கு முந்தைய மகாத்மா, நாயர் / வேரேந்திரநாத் சட்டோபாத்யாய, மணமகனுக்கு வலை வீசிய கப்பல்கள் / திருமண வேட்டை, நமது தேசிய கொடி அமைந்த வரலாறு, காந்தி - தாகூர் உறவு, பிரம்மோ சமாஜ் / ஆரிய சமாஜ் என்று நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளாளர். 

இதெல்லாம் நாம் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு பொக்கிஷங்கள். தேடி தேடி நாம் படிக்க ஆசைப்பட்ட அனைத்தும் இதில் அடக்கம். அனைவரும் படிக்க வேண்டிய நூல். 

வரலாறு முக்கியம் அமைச்சரே!

நன்றி: திரு ஆனந்த் கோவிந்தராசு, வாசிப்பை நேசிப்போம், முகநூல்.

சிரித்து வாழ வேண்டும்!

நோயெதிர்ப்பு சக்தியூட்டி

நலக்குறிப்புகள் : சிறுநீரகக் கற்கள் கரைய...

கண்ணீர் அஞ்சலி! 🙏🙏🙏

சிரிப்புத்தான் வருகுதையா!