தமிழர்களின் அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்களின் அடையாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை, 2020

தமிழர்களின் அடையாளம் | பனைமரம் பேசினால்



தமிழர்களின் அடையாளம் | பனைமரம் பேசினால் 

Vizhippom Vidhaippom | Tamil ViVi
10,355 views•May 20, 2020

விழிப்போம் விதைப்போம் - Vizhippom Vidhaippom

10.9K subscribers
இது தமிழ் பொக்கிஷம் குடும்பத்தின் புதுமையான படைப்பு.

உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம்  மூத்த மொழிநம் தமிழ் மொழி.   நம் செந்தமிழ் எழுத்துக்கள்  முதன் முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான் என்ற வகையில்  பனைமரம்  தமிழரின் அடையாளமாக உள்ளது.

தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் அடையளங்களை விடுவது இல்லை அதேபோல்,  மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், என தமிழர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தில் உள்ளது போல் பனைமரமும் வளர்ந்தது.

அதனால் தான் நமது முன்னோர்கள் பனை மரத்தைகற்பக விருட்சம் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். பனை மரத்தை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை  போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைப்பதாகத் தகவல்.

உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

நன்றி : விழிப்போம் விதைப்போம் - Vizhippom Vidhaippom மற்றும் யூடியூப்.