வேலராம மூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலராம மூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஜூலை, 2021

நூல் நயம் : வேலராம மூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் -

#வாசிப்புமாரத்தான் 2021
Id : RM 00172
புத்தக எண்: 17/25

வேலராம மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்


தேர்வும் தொகுப்பும்-நா.முருகேச பாண்டியன்
மொத்த பக்கங்கங்கள்-128
வெளியீடு-டிஸ்கவரி புக் பேலஸ்

வேலராம மூர்த்தி அவர்களின் ஒவ்வொரு சிறுகதையிலும் அழுத்தமான உட்கருப்பொருளை கொண்டிருக்கிறது.முதல் கதையில் மரபுவழியே திருட்டை சுமந்து வரும் கிராமத்தினர்.கவுல் பட்டி என்ற கிராமத்திற்கு போய் திருடி வந்ததவர்கள் வம்சத்தில் ஒருவர் எஸ்.ஐ ஆக வேலைகிடைக்கிறது.அதற்காக #இருளப்பசாமியும் 21 கிடாய்களை வெட்டச் சொல்கிறார்.போலீசை கண்டு பயந்து வாழும் சமூகம் திண்ணையில் இருக்க,சேது உள்ளிருந்து போலீஸ் உடையில் வர,தோளில் கிடக்கும் துண்டை கக்கத்தில் வைத்து எழுந்து நிற்கிறார்கள்.ஒரு களவை அதிக நாட்கள் செய்ய முடியாது என்பதை லாவகமாக சொல்கிறார்.

இரண்டாவது கதையில் சாதி என்னும் பேய் மனிதரை ஆட்டிப்படைப்பதைக் கூறுகிறார்.#எங்க அய்யாமாருக்காக..எவனோ ?அய்யா மவனை அடிச்சது.எவம்புல என அரிவாள்,கம்புடன் அய்யாவிற்காக களமிறங்கிய ஊரில் உள்ள சாதியினர்.இறுதியில் தங்கள் சாதிக்காரன் தான் அடித்தான் என தெரிந்ததும் சமாதானமாகி விட,இதை அறியாத மாடசாமி#"எங்க அய்யா மவன அடிச்சது எவன்னாலும் எனக்கேட்க,.... எங்காளுங்களையே அவன் இவன்னு சொல்லுதியா என தரையோடு குருதி ஒழுக அடிவாங்கிய நிலை மோசமானது.விளிம்பு நிலை மக்கள் ஆதிக்க சாதியினரால் முரட்டுத்தனமாக நடத்தப்படுவதைப் பற்றி இங்கே மனக்குமறலுடன் சொல்கிறார்.

ஒரு திருமண பந்தத்தில் ஓரே சாதிக்குள் பெண்ணை முன் வைத்து தொடங்குகிறது( #கன்னிதானம்) இக்கதை.திருமணம் முடிந்ததும் "பொண்ணு மசுரு மாதிரி இருக்கு" எனப் போதையில் பால்பாண்டி கத்த,அங்கே தொடங்குகிறது வெட்டுக்குத்து. முறைப்பையன் சேதுவிற்கும் தன் மகளுக்கும் திருமணம் நடக்காத ஆத்திரத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகள் இருவரின் வாழ்க்கையை உதிர்த்து மன உறவை துண்டிக்கும் கடைசி நிலைக்கு குடும்பத்தாரால் ஆளாக்கப்பட்டு பஞ்சாயத்தில் நிற்கிறது.அங்கேயும் வாய் பேச்சு,கைகலப்பாக மாறி வம்புப் பேச்சில் ஈடுபட தயாராகின்றனர்.தங்கள் உறவை மீண்டும் புதுப்பிக்க சேதுவும் மனைவி தமயந்தியும் கண்ணீருடன் கட்டிப்.பிடித்து அழுகின்றனர்.இருஉறவையும் சேர்த்து வைத்து நம்பிக்கையை உறவுக்கு மத்தியில் கொடுத்திருக்கிறார்.

#ரைட் போகலாம் என்ற கதையில் போராடி தங்கள் ஊருக்கு பேருந்தை வரவழைக்கின்றனர்.வேலை இல்லா நாட்களிலும் பேருந்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக ஏறிச் செல்கின்றனர்.ஒருநாள் முனுசாமி ஏதோ தவறாக ஊரை எழுதியதற்காக டிரைவர் மீது செருப்பை வீசுகிறார்.அடுத்த நாள் முதல் பேருந்து ஊருக்கு வராமல் மாற்றுப் பாதையில் செல்கிறது.கையில் குழந்தை மற்றும் கோணிப்பையுடன் இறங்கும் பெண்ணின் குமறல்கள் வலிகளை உணர்த்துகிறது."அந்த கூறுகெட்ட முனிசாமியை பழைய விளக்குமாத்தாலேயே நாலு சாத்து சாத்தனும்" என திட்டுக்கொண்டே நடக்கிறாள்.எளிதில் உணர்ச்சி வசப்பட்டு உணர்வுகளை கோபங்களால் காண்பிக்கும் மக்கள்.அதனால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் அவலங்களை பற்றி யோசிக்காததை தெளிவாக சொல்கிறார்.

வேலராம மூர்த்தியின் கதைகளின் மொழியானது 
ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினரின் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.கிராமத்து கதைகளின் மூலம் ராமமூர்த்தி மிகைப்படுத்தப் பட்ட சம்பவங்கள் ,உணர்ச்சிகள் , கதை சொல்லும் விதம் கதையின் வழியே மூழ்க வைக்கிறது.