30 அக்., 2018

வேதனைச் செய்திகள்-11:

எங்கள் இந்தியா-12:

எங்கள் தமிழகம்-22:

திருக்குறள்-36:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-32:

இன்றைய சிந்தனைக்கு-112:

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-17:

ஆரோக்கிய உண்மைகள்-6:

சிரித்து வாழவேண்டும்-49:

வாவ்! படங்கள்-20:

பயனுள்ள குறிப்புகள்-27: எம்ப்ளாய்மென்ட் பதிவை புதுப்பித்தல்

சிரிக்கவும் சிந்திக்கவும்-18:

நலக்குறிப்புகள்-112: கருப்பட்டி

எங்கள் தமிழகம்-21: பழுவூர்க் கோயில்

இன்று ஒரு தகவல்-111: சென்னையில் 15 ரூபாய்க்கு மதிய மூலிகைச் சாப்பாடு

♥சென்னையில் 15 ரூபாய்க்கு மதிய மூலிகைச் சாப்பாடு....

♥ஒரு டீ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிற இந்தக் காலத்தில், 15 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கிறது, அதுவும் சென்னையில் கிடைக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம்பவில்லை என்றால் சென்னை சென்ட்ரல் அருகேயுள்ள ரிப்பன் பில்டிங்கிற்கு செல்லுங்கள்.

♥அங்கிருக்கும் மூலிகை உணவகத்தில் தான் 15 ரூபாய்க்கு மதிய சாப்பாடு தருகிறார்கள். ஒரு கப் புழுங்கலரிசி சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த மோர், ஏதேனும் ஒரு காய்கறி அல்லது கீரைக்கூட்டு எல்லாம் சேர்த்து 15 ரூபாய்தான். அதுவும் வாழை இலையில் சுடச்சுட சாப்பிடக் கிடைக்கிறது.

♥முக்கியமான விஷயம், இங்கு வழங்கப்படும் உணவுகள் எல்லாமே மருத்துவக்குணம் நிரம்பியவை. ஆவாரம்பூ சாம்பார், முருங்கைக்கீரை சாம்பார், முடக்கற்றான் சாம்பார், சுண்டவற்றல் காரக்குழம்பு, காராமணி காரக்குழம்பு, பூண்டு குழம்பு, வேப்பம்பூ ரசம், மணத்தக்காளி ரசம், கொள்ளு ரசம் என தினம்தினம் ரெஸிப்பிக்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

♥சாப்பாடு மட்டுமின்றி, கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், மல்லி சாதம், முடக்கற்றான் சாதம், தூதுவளை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டியான சாத வகைகளும் இங்கு கிடைக்கின்றன.
காலையில் கம்பு, திணை, சாமை, துளசி, ஆவாரம்பூ, கறிவேப்பிலை, முடக்கற்றான், தூதுவளை ஆகியவற்றில் இட்லி, தோசை வகைகளும் கிடைக்கின்றன.

♥மேலும், மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், ஜூஸ், திணை உருண்டை, சுய்யம், வாழையிலை கொழுக்கட்டை, சிறுபருப்பு பாயசம், சோள பணியாரம், உளுந்தங்களி, கொள்ளு சுண்டல் என சிற்றுண்டி வகைகளும் இங்கு கிடைக்கின்றன.

♥15 ரூபாய்க்கு எப்படி மதிய உணவு தர முடிகிறது? இந்த உணவகத்தை நடத்திவரும் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் கேட்டேன்.
“கடந்த 8 வருடங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் நடத்துவது சிரமமாகத்தான் இருந்தது. 15 ரூபாயில் 1 ரூபாய் வாழை இலைக்கே சரியாகிவிடும். ஆனால், சிற்றுண்டிகள் விற்பனை செய்யத் தொடங்கியபிறகு. அதில் கிடைக்கும் லாபத்தை, மதிய உணவில் பகிர்ந்து கொள்கிறேன்” என்கிறார் வீரபாபு.

♥குறைந்த விலையில் உணவு வழங்குவதால், மாநகராட்சி இவரிடம் இடத்துக்கான வாடகையோ, கரண்ட் பில்லோ வாங்குவதில்லை. அது இவருக்கு உதவியாக இருக்க, மக்களுக்குப் பசியாற்றுவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார் வீரபாபு.

♥மாநகராட்சி அலுவலகத்துக்குள் இந்த உணவகம் இயங்கி வருவதால், அரசு விடுமுறை நாட்களில் இந்த உணவகம் இருக்காது. மற்ற நாட்களில் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் இந்த உணவகத்தில், யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிட்டுச் செல்லலாம்.
“விலையும் குறைவா இருக்கு, சாப்பிடறதுக்கும் ருசியா இருக்கு, ஒடம்புக்கும் நல்லதுனால நாம் இங்க அடிக்கடி வந்து சாப்பிடுவேன்.

♥என்னை மாதிரி ஏழைங்களுக்கு இந்த சாப்பாடு வரப்பிரசாதம்” என்கிறார் துப்புரவுத் தொழிலாளியான முத்து.

♥கண்ட கண்ட ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொண்டு, பர்ஸுக்கும் வேட்டு வைக்கிற உணவகங்களுக்கு மத்தியில், மூலிகை உணவகத்தின் மகத்தாண பணி போற்றத்தக்கது.

♥நீங்களும் ஒரு முறை சென்று சாப்பிட்டு கூறுங்கள்.......
--------------
நல்லநேரம்♥
உலகத்தமிழ் மங்கையர் மலர்♥

படித்தேன்-5: ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்

ஒற்றை வைக்கோல் புரட்சி! (The One-Straw Revolution).உலகம் முழுக்கவே விவசாயத்தில் ஒரு புரட்சிகரமான புரிதலுக்குப் பாதை அமைத்த ஒப்பற்ற புத்தகம். இதற்கு முன்பு, விவசாயத் துறையில் இப்படியொரு புத்தகம் வந்ததில்லை.

29 அக்., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-17:

ஒரு அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.

அடுத்து என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி,

"நீங்க ஏன் ஒரு வெட்னரி டாக்டர் கிட்டபோகக் கூடாது?"

என்று கேட்டாள்.

அதிர்ச்சி அடைந்த கணவன்,

"உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?" என்றான்.

மனைவி சொன்னாள்,

"எனக்கொன்றும் இல்லை.
உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால 🐔கோழி மாதிரி எந்திரிச்சு,

அப்புறம்
🐦காக்கா மாதிரி குளிச்சிட்டு,

🐒குரங்கு மாதிரி லபக் லபக்னு தின்னுட்டு,

🐎 பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி,

அங்க 🐮 மாடு மாதிரி உழைக்கிறீங்க.

உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட
🐻 கரடி மாதிரி கத்துறீங்க.

மேலே உள்ளவங்க கிட்ட
🐱பூனை மாதிரி பம்முறீங்க.

சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட

🐩 நாய் மாதிரி குரைக்கிறீங்க.

அப்புறம்
🐊முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு,

🐃 எருமை மாடு மாதிரி தூங்குறீங்க.

அதனால தான் சொல்றேன்.
உங்களுக்கு வெட்னரி டாக்டர் தான் சரிப்பட்டு வரும்.

"என்ன சொல்வதென்று புரியாமல் கணவன் விழிக்க,

மனைவி சொன்னாள்,

😳"என்ன ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க?"

வீட்டுக் குறிப்புகள்-32:

தோசை மாவில் ஒரு கையளவு கடலை மாவு போட்டு நன்றாக கலந்து தோசை வார்த்து திருப்பிப் போட்டு அதன் மேல் வெண்ணெய்யோ நெய்யோ தடவி வைத்து கொடுங்கள். ஓட்டல் தோசை போன்று மொறு மொறுவென்று இருக்கும்.

குட்டிக்கதை-22: தலைமுறை இடைவேளி

குட்டிக்கதை - தலைமுறை இடைவேளி

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்

சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,😥

டேய் உனக்காவது இது கிடைத்தது ,
நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
வசதியில்லை என்று சொன்ன

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!😉😉

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது

150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி
இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரைப் பார்த்து என் மகள் கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

என் மகளிடம் பொறுமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்,,

ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;;

என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெருவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

இன்று அப்பா filter water கேன்
(2 குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔

, இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாடிவிட்டு

தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி

( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)

அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ;

இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் ,

ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

இன்று
ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைக்கார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secret of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

இன்று பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

இது நெட்டில் சுட்டது இல்லை!
வாழ்கையில் பட்டது!!..

நன்றி: எல்.கார்த்திகேயன், புதிய தகவல்கள், முகநூல்

ஆரோக்கிய சிந்தனைகள்-5:

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

பாராட்டுக்கள்-2: ஐஸ்வால் மக்களுக்கு

இது இந்தியாவில்தான். ஐஸ்வால், மிஸோராம். வலது புறம் காலியாக இருக்கிறதே என்று யாரும் அதை ஆக்கிரமிக்கவில்லை. இதுவே நம் சென்னையாக இருந்தால்...

காமராஜர் நினைவுகள்-2:

ஆன்மீக சிந்தனை-105:

சிரித்து வாழவேண்டும்-48:

சுற்றுச்சூழல்-18:

வாவ் படங்கள்-19:

பயனுள்ள குறிப்புகள்-26: க்ரீஸ் கறை

துணிகளில் கரீஸ் கறை பட்டுவிட்டால், அந்த இடத்தில் முகப்பவுடர் போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்தால் கறை போய்விடும்.

முதல் உதவி-1: தீக்காயம்

நலக்குறிப்புகள்-111: முட்டைக்கோஸ்

இன்றைய சிந்தனைக்கு,-111:

இன்று ஒரு தகவல்-110:

28 அக்., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-16:

சிரித்து வாழவேண்டும்-47:

குழந்தை வளர்ப்பு-8: குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகள் பாதுகாப்பு...

பெரியவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். வெளி இடங்களின் பாதுகாப்பு நம் கையில் இல்லை என்பது உண்மை தான். நம் வீட்டில் இருந்து பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கலாமே:

# சின்ன அழி ரப்பர், தீப்பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி, பாதி தீர்ந்துபோன கிரேயான் பென்சில்கள், மீதமான சோப்புத் துண்டுகள், பூச்சி உருண்டை கள், வாசனை உருண்டைகள், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, பட்டாசு, பிளேடு, கத்தரிக்கோல், முள்கரண்டி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், ஆசிட், வீடு கழுவும் சோப்புத் திரவப் பாட்டில், இதர மருந்து பாட்டில்கள்... எல்லாம் குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.

# பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்தத் துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவிக் குழந்தையின் மீதே விழக்கூடும். சென்னையில் இப்படி ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.

# வாஷிங் மிஷின் இயந்திரத்தைத் திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்ட குழந்தை, உள்ளே இறங்கிக் கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குளிர்பதனப் பெட்டியின் பின்புறம் குழந்தைகள் அணுகாதபடி, சுவரை ஒட்டி வையுங்கள். குளிர்பதனப் பெட்டியின் பிளாஸ்டிக் ஸ்டாண்டு கொஞ்சம் பலவீனம் அடைந்து லேசாக ஆடினால்கூட, உடனே மாற்றிவிடுங்கள். குளிர்பதனப் பெட்டியைக் குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, அது குழந்தையின் மீதே விழக்கூடும். விண்டோ ஏசி பெட்டிகளை உயரத்தில் பொருத்துங்கள்.

# டேபிள் ஃபேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்காத குழந்தைகள் அரிது. நெருக்கமான கம்பித் தடுப்புகள் இருக்கும் டேபிள் ஃபேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கி னாலும், அதைத் தொட்டு விளையாடக் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

# டேபிள் ஃபேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றைக் குழந்தையின் கையில் படாத உயரத்தில் வையுங்கள்.

# குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவுப் பொருள் களைக் கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத் துண்டுகளைக் கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. தொண்டையில் பூரி சிக்கி சமீபத்தில்கூட ஒரு இளம் பெண் இறந்து போயிருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

# குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சார சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையைக் கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளைச் செய்வது நல்லது.

# சுவரில் மாட்டும் கனமான கடிகாரம், ஃபிரேம் செய்யப்பட்ட கனமான அலங்கார ஓவியங்கள், ஒளிப்படங்கள், கைவினைப் பொருட்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில், உறுதியான ஆணியை அடித்து மாட்டுங்கள்.

# குழந்தை தூங்கி எழுந்த பின்பு, தொட்டில் துணியை நன்றாக முடிச்சிட்டு எட்டாத உயரத்தில் சொருகி வையுங்கள். அதில் உட்கார்ந்து சுற்றி விளையாடும்போது தூளியில் கூடுதலாகத் தொங்கும் துணி குழந்தையின் கழுத்தை இறுக்கிவிடும் ஆபத்து உண்டு.

# தொட்டிலைப் போலவே திரைச் சீலைகள், அலங்காரத் தோரணங்கள் போன்றவற்றிலும் கவனம் தேவை. இது சார்ந்த இறப்பு சமீபத்தில்கூடச் சென்னையில் நடந்துள்ளது.

# லட்சம், கோடிகள் செலவு செய்து வீட்டைக் கட்டியிருப்போம். ஆனால், பால்கனித் தடுப்புச் சுவரைச் சரியான உயரத்தில் கட்டியிருக்கிறோமா என்று கவனியுங்கள். பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதில் குழந்தைகளுக்கு அலாதி விருப்பம். இதில் கூடுதல் கவனம் தேவை. பால்கனித் தடுப்புச் சுவர்களில், ஜன்னல் சுவர்களில், தோட்டத்தின் சுவர்களில் பூந்தொட்டிகள் நழுவி விழும்படி ஓரமாக வைக்க வேண்டாம்.

# தரைத் தண்ணீர்த் தொட்டிகளை ஒவ்வொரு முறையும் கவனமாக மூடுங் கள். அதன் மூடி குழந்தைகள் தூக்க முடியாத அளவுக்குக் கனமானதாக இருக்க வேண்டும். பூட்டுப் போடும் வசதி இருந்தால் ரொம்ப நல்லது.

இப்படி இன்னும் என்னென்ன அபாய அம்சங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று யோசியுங்கள். உங்களுக்கு இன்னும் நிறையத் தட்டுப்படலாம்.

நம் குழந்தைகளை, நம்மால்தான் பாதுகாக்க முடியும்!

நூல்மயம்-5:

இன்று ஒரு தகவல்-109:

பயனுள்ள குறிப்புகள்-25: மின் சிக்கனம்

இன்றைய சிந்தனைக்கு-110:

வாவ்! படங்கள்-18:

வீட்டுக் குறிப்புகள்-31:

முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதன் மேல் உப்பைத் தூவி சிறிது நேரம் கழித்து துடைத்தால் சுத்தமாகிவிடும்.

நலக்குறிப்புகள்-110:

திருக்குறள்-35:

எங்கள் தமிழகம்-20:

21 அக்., 2018

ஆரோக்கிய உண்மைகள்-6:

சிரிக்கவும் சிந்திக்கவும்-15:

சிரித்து வாழவேண்டும்-46:

குழந்தை வளர்ப்பு-7:

நூல்மயம்-4:

இன்று ஒரு தகவல்-108:

பயனுள்ள குறிப்புகள்-24:

இன்றைய சிந்தனைக்கு-109:

வாவ்! படங்கள்-17:

வீட்டுக் குறிப்புகள்-30:

வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவும்போது சிறிது பால் சேர்த்துக் கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்.

நலக்குறிப்புகள்-109:

மக்கள் கேள்வி-3:

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-16:

எங்கள் தமிழகம்-19: