11 அக்., 2017

இன்றைய சிந்தனைக்கு-205: தோல்வி ஏற்படுவது ...

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

இன்று ஒரு தகவல்-61: பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

நலக்குறிப்புகள்-105: இளம்சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு

காலையில் இளம்சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதனால் கிடைக்கும் பொதுவான நன்மைகள்:

நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.
ஜீரண் சக்தி அதிகரிக்கிறது.
சருமம்  பொலிவடையும்.
உடல் எடை குறையும்.
அமிலத்தன்மை குறையும்.
உடல் சுத்தமாகும்.
 நோய் உண்டாக்கும் நுண்கிருமிகள், வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
சளித்தொல்லை குறையும்.
வாய் நாற்றம் நீங்கும்.
மூளையின் திறனை அதிகரிக்கும்.
புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

காப்பி குடிப்பதால் உடலில் சேரும் காஃபைன் எனும் நச்சுப்பொருளை நீக்கும்.

ஆன்மீக சிந்தனை-72: சுவாமி விவேகானந்தர்

நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும்.  உங்கள் குரல் மாறிவிடும்.  உங்கள் தோற்றமே மாறிவிடும்.  மனிதகுலத்திற்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள் – சுவாமி விவேகானந்தர்

10 அக்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-8: வனஸ்பதி (டால்டா)

வனஸ்பதி (டால்டா) ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதனால் மாரடைப்பு, புற்று நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொல்லைகள் உண்டாகலாம். எனவே இதனை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.

நலக்குறிப்புகள்-105: உணவின் நிறமும் சத்துக்களும்

உணவின் நிறமும் சத்துக்களும்

மஞ்சள் நிறமான பொருட்கள் பெரும்பாலும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளவை. உதாரணம்: ஆரஞ்சு, மஞ்சள் பூசணி, கேரட், சேனை, மாம்பழம்

பச்சை நிறமான பொருட்கள் பெரும்பாலும் வைட்டமின் பி நிறைந்தவை.  உதாரணம்: பீன்ஸ், கீரை வகைகள்

சிவப்பு நிறம்:  வைட்டமின் சி.  உதாரணம்: சிவப்பு மிளகாய், இலந்தை வகைகள், சிவப்பு ஆரஞ்சு


 நீல நிறம்: ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த்து.  நாவற்கனி, திராட்சை

இன்று ஒரு தகவல்-60: மொபைலில் புத்தகங்கள்

மொபைலில் புத்தகங்கள்

மொபைலில் நாளிதழ்களைப் படிக்கும் வசதிபோல, புத்தகங்களையும் படிக்கும் வசதியை, www.fubish.com என்ற இணையதளம் தருகிறது.  இந்த இணையதளத்தின் வழியாக அவரவர் மொபைல் மூலமாக, இலவசமாக புத்தகங்களைப் படிக்கும் வசதியைப் பெறலாம்.  பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.  சுமார் 25,000 மேற்பட்ட புத்தகங்கள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன.

நன்றி – தினமலர் டாட்காம்


இன்றைய சிந்தனைக்கு-204: இறையன்பு

காத்திருக்கும் கரியே வைரமாகிறது.  ஆத்திரப்படும் மனிதனோ கரியாகிறான் – இறையன்பு

ஆன்மீக சிந்தனை-71: சத்குரு ஜக்கி வாசுதேவ்

தனக்குள் கடவுளைத் தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களுடன் சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

4 அக்., 2017

இன்றைய சிந்தனைக்கு-203: வாழ்க்கை என்பது...

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

இன்று ஒரு தகவல்-59: ஒரு தலைமுறை என்பது

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

நலக்குறிப்புகள்-104: நோயின்றி வாழ ஐந்து வழிகள்

நோயின்றி வாழ ஐந்து வழிகள்

1.     காலை மாலை கடவுள் வழிபாடு
2.     சந்தி நேரங்களில் உடற்பயிற்சி
3.     ஒரு நாளைக்கு இருவேளை உணவு
4.     நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர்

5.     மாதம் ஒரு நாள் உபவாசம்

ஆன்மீக சிந்தனை-70: சத்குரு ஜக்கி வாசுதேவ்

எண்ணங்கள் குவியலாகக் கிடக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது.  மனசுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது – சத்குரு ஜக்கி வாசுதேவ்