ஆக்சிஜன் தரும் அற்புதச்செடிகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆக்சிஜன் தரும் அற்புதச்செடிகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை, 2021

இன்றைய அவசியத் தேவை : ஆக்சிஜன் தரும் அற்புதச்செடிகள்

#ஆக்சிஜன் தரும் அற்புதச்செடிகள்.

நாட்டிற்கு பொதுநலனாக மரங்களை நட முடியாவிட்டாலும், சுயநலமாக வீட்டிலாவது சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை  சுவாசிக்க செடிகளை நட்டு செழிப்படையலாமே....

1 #துளசி :- பொதுவாகவே மனிதனுக்கு தேவையான மருத்துவ குணங்கள் நிறைந்த, இரவிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாலே  இதனை புனிதமான காக்கும் கடவுளாக வணங்குகிறோம்.

2 #மருள் என்னும் பாம்பு கற்றாழை.
இந்த செடி வளர அதிக தண்ணீரும் சூரிய ஒளியும் தேவையில்லை. வீட்டில் எந்த இடத்திலும் வளர்க்கலாம். இது காற்றில் உள்ள  நச்சுக்களை உறிஞ்சி நல்ல ஆரோக்கியமான ஆக்சிஜனை இரவிலும் வெளிப்படுத்தி உதவுகிறது.

3 #கற்றாழை :--இது மற்ற தாவரங்கள் வெளிப்படுத்தும் ஆக்சிஜனையும் சுத்தப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த காற்றாலை.

4 #நித்தியகல்யாணி :- இது புழுதி காற்றையும் வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி சுத்தப்படுத்தி தூய ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த காற்றாக வெளிப்படுத்தும். இதற்கு வாஸ்து குறிப்புகள் இல்லாததால் வீட்டில் எந்த இடத்திலும் வைத்து  வளர்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

5 #லெமன்கிராஸ் :- இது காற்றில் கலந்துள்ள பாக்டீரியாக்களை உறுஞ்சி நல்ல நருமணமுள்ள ஆக்சிஜனை தருவதோடு சோர்வு நீங்கி அமைதி கிடைக்கும், கொசுதொல்லைகளும் இருக்காது.

6 #மணிபிளான்ட்:- காற்றை சுத்தப்படுத்தி அதிக ஆக்சிஜனை தருகிறது. வீட்டில் தென்கிழக்கு திசையில் படரவிட செல்வ வளம் பெறுகும். இது விஷத்தன்மை உடையது, கவணம் தேவை.

7 #ஐவி:- இது படரும் தன்மை உடையது, தூசிக்காற்றை தூய்மையாக்கி நல்ல ஆக்சிஜனை தருவதோடு ஆஸ்துமா, அலர்ஜியை குணமாக்கும்.  

8 #கோல்டன்_போடோஸ் மற்றும் #WEEPING_FIG எனப்படும் வெள்ளள் :-இவைகள் காற்றில் கலந்துள்ள விஷவாயுக்களை சுத்தப்படுத்தி நல்ல  ஆரோக்கியமான ஆக்சிஜனை வழங்குகிறது. ஆகையால் எரிவாயுக்கள் பயன்படுத்துகின்ற இடங்கள், சமையலறை மற்றும் கழிவறைகளில் வைத்து வளர்ப்பது சிறப்பு.

9 #BAMBOO_PALM எனப்படும் #மலைப்பனை :- 
இது கெட்டுப்போன காய்கறிகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றம், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகையை சுத்தப்படுத்தும். இதற்கு குறைந்த அளவு சூரிய ஒளியும், தண்ணீரும் போதுமானது. வீட்டின் ஹால் மற்றும்  வாசற்படி முன்பாக வளர்ப்பது சிறப்பு.

10 #RUBBER_PLANT_எனப்படும்_சீமை_ஆலமரம்:-
இது வெயில் படாத இடங்களிலும் வளரும் தன்மை உடையது. அசுத்தமான காற்றை உறுஞ்சி சுத்தமான ஆக்சிஜனை தருகிறது. இதை கற்றாழையின் அருகில் வளர்ப்பது சிறப்பு.

#கூடுதலாக, வீட்டின் வாசற்பகுதியில் இடம் இருந்தால் #ஆடுதொடா_மற்றும்_புங்கனை வளர்ப்பதால் ஆலைக்கழிவுகளால் உண்டாகும் எரிவாயுக்கள், வாகன புகை மற்றும் தூசிகள் நிறைந்த மாசடைந்த வெப்ப காற்றை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த நல்ல குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி சுவாசிக்க உதவுகிறது.