
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
5 ஜூலை, 2025
இன்றைய புத்தகம்
இவர் எழுதியது இன்றுவரை 127 சிறுகதைகள், தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(1981), வாக்குப் பொறுக்கிகள் (1985), உப்பு(1990), பேய்க்கொட்டு (1994), பிராந்து (2002), நாஞ்சில் நாடன் கதைகள் (2004), சூடிய பூ சூடற்க (2007), கான்சாகிப் (2010), முத்துக்கள் பத்து (2007), நாஞ்சில் நாடன் சிறுகதைகள் (2011), சாலப்பரிந்து (2012) கொங்குதேர் வாழ்க்கை (2013) இவரது சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு கவிதைத் தொகுப்புகள். மண்ணுள்ளிப் பாம்பு (2001), பச்சை நாயகி (2010).
கடந்த பத்துஆண்டுகளாக, கட்டுரை இலக்கியத்துக்கு இவர் பங்களிப்பு சிறப்பானது. திருப்புமுனை எனக் கருதப்படுபவை. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003), நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003), நதியின் பிழையன்றுநறும்புனல் இன்மை (2006), காவலன்காவான் எனின் (2008), திகம்பரம் (2010), பனுவல் போற்றுதும் (2001), கம்பனின் அம்பறாத்துணி (2013), சிற்றிலக்கியங்கள் (2013), எப்படிப் பாடுவேனோ (2014) என்பன கட்டுரைத் தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை காலம் நிகழ்த்திய மாற்றங்கள் எனும் முதல் நூல், இன வரைவியல் எழுத்துக்கு தமிழில் முன்னோடி. காய்தல் உவத்தல் அற்ற கள ஆய்வு தீதும் நன்றும் எனும் தலைப்பில் 20082009 காலகட்டத்தில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைத் தொடர் பெருத்த வாசக கவனிப்பைப் பெற்று, நூலாகி பல பதிப்புகள் கண்டது. தமிழ் பயிற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இவரது நாவல்கள் பாடமாக இருந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.