31 ஜன., 2020

வரலாற்றில் சில மைல்கற்கள் : அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவிற்கு வந்த நாள்

ஜனவரி 31, 1865: 

அமெரிக்க காங்கிரஸ் 13வது சட்ட திருத்தம் மூலம் அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

மனதைக் கவர்ந்தது : கிராமசபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி

`கிராம சபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி!' - ஆச்சர்யம் அளித்த மதுரை எம்.பி!

கிராமசபை கூட்டம் என்பது சடங்காக நடத்தப்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானம் என்பது யாராலும் மாற்ற முடியாத அளவுக்குச் சட்ட அங்கீகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி,
``எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும் உள்ளது. உயர் நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் ஊரிலிருந்து 7 கிமீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி செல்லும்போது நேரத்துக்கு பேருந்து வசதி இல்லை. எனவே, பேருந்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என்று பேசினார். பெரியவர்களே கிராம சபையில் கோரிக்கை வைக்கத் தயங்கும் நிலையில் 5-ம் வகுப்பு மாணவி பேசியது சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்றது.

மாணவி பேசியதை ஊடகங்களில் பார்த்த திரு. சு.வெங்கடேசன் எம்.பி மிகவும் மகிழ்ச்சியடைந்து, இதுபோல, மாணவிகள் சிறுவர் சிறுமியர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இதுகுறித்து, உடனே நான் அதிகாரிகளிடம் பேசினேன். தற்போது பேருந்து விடப்போவதாக உறுதி அளித்துள்ளனர். இதுபோல அனைவரும் கிராம சபையில பேச வேண்டும். மாணவி சஹானாவை வாழ்த்துகிறேன்" என்றார்.

சஹானா கூறியது:  ``நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்னையில்லை. எங்க அக்கா உட்பட நிறைய அக்காக்கள் மாயாண்டிப்பட்டி உயர்நிலைப் பள்ளியில படிக்கப் போறாங்க. ஊருக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை டவுன் பஸ் வருது. ஆனா, அது ஸ்கூலுக்குப் போற நேரத்துக்கு வராது. அதனால எங்க ஊர் அக்காக்களெல்லாம் 7 கிலோமீட்டர் நடந்து போவாங்க. அதுபோல வரும்போதும் நடந்து வருவாங்க. வர்ற வழியில பிராந்திக்கடை வேற இருக்குது. அதனால ஸ்கூலுக்கு போனவங்க திரும்பி வர்ற வரைக்கும் என் அம்மா அப்பா பயந்துகிட்டே இருப்பாங்க. ஊருல உள்ள எல்லோரும் புலம்புவாங்க. அப்பத்தான் எங்க ஊருல கிராம சபைக் கூட்டத்துல பேசலாம்னு நினைச்சேன். யாரும் எனக்கு சொல்லித்தரல. நானாத்தான் பேசினேன். இப்ப எல்லோரும் பாராட்டுறாங்க".
மீனாட்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிக்கு பள்ளி நேரத்தில் பேருந்து விடுவதாக அதிகாரிகள் உறுதியளித்த தகவலைத் தெரிவிப்பதற்காக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீனாட்சிபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு மாணவி சஹானாவை சந்தித்தவர், சிறப்பாகப் பேசிய அவருக்கு பரிசு ஒன்றையும் அளித்தார்.

எம்.பி-யின் பாராட்டு மற்றும் பரிசைப் பெற்றபோது மாணவி சஹானா ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால் அங்குள்ளவர்கள் நெகிழ்ந்தனர்.

நன்றி : திரு.செ.சல்மான் பாரிஸ் மற்றும் விகடம்.காம்.

மாணவி சஹானாவிற்கும்,  எம். பி. திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 

30 ஜன., 2020

நலந்தரும் மூலிகைகள் : ஆடாதொடை

#ஆடுதொடா இலையில் (ஆடாதொடை) இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்!
  
ஆடாதொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால,ஆடாத உடலும் ஆடும்,பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடாதொடை மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.

ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும். நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்..

சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும். வயிற்று வலி குறைய ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

நன்றி: உஷா ரவிகுமார், நாட்டு மருந்து, முகநூல்

சிரித்து வாழவேண்டும்

இன்று ஒரு தகவல்

குட்டிக்கதை

பயணங்கள்

நிகழ்ச்சிகள்

எங்கள் தமிழகம்

எங்கள் தமிழகம்

எங்கள் தமிழகம்

நிகழ்ச்சிகள்

நூல்மயம்

நாஞ்சில் நாடன் விருது

அபூர்வமான படம்

திருவாளர்கள் சி. சுப்ரமண்யம்,  காமராசர்,  கருணாநிதி,  எம். ஜி. ஆர். 

மலரும் நினைவுகள்

கொரோனா வைரஸ்

செய்தி : கொரோனா தாக்குதலின் வீரியசிகிச்கட்டுப்படுத்தலாம் :
ஆயுஷ் அமைச்சகம் 

29 ஜன., 2020

நிகழ்ச்சிகள்

நன்றி : தினமலர் பட்டம் ஜனவரி 27, 2020

பயனுள்ள குறிப்புகள்

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்

நேருஜி, காமராசர், இந்திரா காந்தி 

நூல்மயம்

28 ஜன., 2020

வரலாற்றின் கொடூரமான பக்கங்கள் : அவுஸ்விச் (AUSCHWITZ CONCENTRATION CAMP)

மானுட குல வரலாற்றில் திகிலூட்டும் ஒரே பெயர் “ ஆஷ்விச்”…இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நாஜிக்கள் யூதர்களை கொன்று குவிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஆஷ்விச்…

நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாவப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக்கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப்பெண்களை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொன்றது, வகைவகையான ரசாயனங்கள் மூலம் கொன்றது, சிம்பொனி இசையை ஆயிரம் டெசிபலில் அலறவிட்டு கொன்றது, பட்டினிப்போட்டு கொன்றது,  என இட்லர் நாஜிப்படைகளின் கொலைக் கலை நடுநடுங்க வைக்கும்…

இந்தப்போரில் 75 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்….இதில் 15 லட்சம் பச்சிளம் குழந்தைகள்….ஆஷ்விச்சில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 20 லட்சம்…

இதே நாளில் ஸ்டாலின் சோவியத் ருஷ்யா ராணுவம் ஆஷ்விச்சில் நுழைந்து கைப்பற்றி எஞ்சி இருந்தவர்களை காப்பாற்றியது…இந்த நாள் ஆஷ்விச் நினைவுநாளாக உலகமுழுவதும் நினைவுக்கூறப்படுகிறது…இன்று 75 வது ஆண்டு நினைவு தினம்.

நாஜிகளின் கொலைவெறித் தாண்டவம் மற்றும் ஆஷ்விச் படுகொலைகள் பற்றி எண்ணற்ற நூல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் இருவரின் படைப்புகள் மிக முக்கியமானவை…யூதரான ப்ரைமோ லெவி விஷவாயுக்கிடங்கின் வாயிலில் அவர் ஒரு விஞ்ஞானி என அறிந்து அவரை நாஜிக்கள் ரசாயன தொழிற்சாலைக்கு அனுப்பினார்கள். அதாவது யூதர்களை கொல்வதற்கு வகைவகையான ரசாயனங்களை கண்டுபிடிக்க அவரை நியமித்தனர். பின்னாளில் மன உளைச்சலில் புனைவுகள்/அ-புனைவுகளை அபாராமாக எழுதி, மன அழுத்தத்தில் 70 வயதில் தன்னை மாய்த்துக் கொண்டவர்.

பல திரைப்படங்கள் வெளிவந்தாலும் ரோமன் போலன்ஸ்கியின் The Pianist என்ற திரைப்படம் பார்க்க நெஞ்சுரம் தேவை. கலவரமூட்டும் படம்…

ஆஷ்விச் கொலைகளை பார்த்த ஃப்ராங்பர்ட் மார்க்சிய சிந்தனைப்பள்ளியின் முக்கிய சிந்தனையாளர் அடார்னோ, "இனிமேல் கவிதை சாத்தியமில்லை" என அறிவித்தார்.

வக்கிரம், வன்மம், காழ்ப்பு, பகை, வெறுப்பின் சின்னமாக ஆஷ்விச் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது…

இந்தப்புகைப்படத்தின் பின்புலம் கண்கலங்க வைக்கும்…இளம் யூத தம்பதிகளை கொல்லப்படுவதற்கு  முன் அவர்கள் விரல்களில் அணிந்திருந்த wedding rings….ஒவ்வொரு வளையத்திற்கும் பின் எவ்வளவு அற்புதமான கனவுகள் இருந்திருக்கும்….

நன்றி : திரு வாசுதேவன் 

நூல்மயம்

வாவ்! படங்கள்

பயனுள்ள தகவல்

ஆன்மீக சிந்தனை

ஹைகூ

கவிஞர் மல்லிகைதாசன்
மற்றும் 
நம் உரத்த சிந்தனை இதழ்

நன்றி : தினமலர் பட்டம் ஜனவரி 27, 2020