பிரார்த்தனை செய்வது எவ்வாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரார்த்தனை செய்வது எவ்வாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 ஆக., 2021

ஆன்மீகம் : பிரார்த்தனை செய்வது எவ்வாறு ?

*பிரார்த்தனை செய்வது எவ்வாறு ?*

வாழ்க்கையில் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்வதில்லை.

இந்த சமுதாயமும் மற்றவரும் நமக்கு தேவை இல்லாதவற்றையே கற்றுத் தருகிறார்கள்.

நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது நமக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக கடவுளிடம் போய் வேண்டிக்கொள் கண்டிப்பாக கிடைக்கும் என்று வழிகாட்டுகிறார்கள். 

நாமும் கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.

உதாரணமாக எனக்கு பணப் பிரச்சனை உள்ளது எனவே என்னை பணக்காரனாக மாற்று என்று கூறுவதோ அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை ஆரோக்கியமாக மாற்று என்று கூறுவதோ அல்லது எனது பிசினஸ் சரியாக போகவில்லை எனவே எனக்கு மேலும் நல்ல பிசினஸ் ஐ கொடு என்று கூறுவதினாலோ எந்த பயனும் கிடையாது. 

ஏனெனில் நாம் கூறும் அனைத்து வேண்டுதல்களும் எதிர்மறையான வேண்டுதல்களே. 

அப்படியானால் நேர்மறையாக எப்படி வேண்டுவது என்றுதானே கேட்டகிறீர்கள். 

இதோ மேற்கூறிய அனைத்தையும் எவ்வாறு நேர்மறையாக கூறுவது என்று பார்ப்போம்.

*பணத்தேவைக்கு*

என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்னை மிகவும் செல்வவளத்துடன் நல்ல பணவசதியுடனும் மகிழ்ச்சியுடனும் என்ன வைத்திருக்கும் உனக்கு கோடான கோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

*ஆரோக்கியத்திற்கு*

என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்ன மிகவும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த சந்தோஷத்துடனும் வைத்திருக்கும் உனக்கு கோடானகோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

இது போன்று நமக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்டவன் நமக்கு அளித்துவிட்ட உணர்வோடு சொல்ல வேண்டும்.முக்கியமாக நாம் சொல்லும் சொற்றொடர் PRESENT CONTINUOUS TENSE ல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனுடைய கான்செப்ட் என்னவென்றால் THOUGHTS ,FEELING ,BELIEVES ,
THANKS NOTE AND ACTION. 

அதாவது உங்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது அதனை அடைந்துவிட்ட உணர்வுடன் கடவுள் அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை தெரிவிக்கும் போது நாம் விரும்பியவை நமக்கு கிடைப்பதற்க்கான வழிமுறைகள் தோன்றிவிடும்.

இதுதான் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கான ஒரே வழிமுறை. 

ஆனால் அதை விட்டுவிட்டு நான் கடனில் உள்ளேன் காப்பாற்று அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் எனக்கு ஆரோக்கியத்தை கொடு என்று கூறும்போது நமது கூற்றில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் தான் நமக்கு திரும்பவும் நடக்கும் .

எனவே நமக்கு எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைத்து விட்டதைப்போல் உணர்வுடன் கடவுளுக்கு நன்றி கூறும்போது அது கிடைப்பதற்க்கான வழிமுறைகள் நம் கண்முன்னே தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை. 

இதுதான் பிரபஞ்ச விதியாகும்!!!

சரியான முறையில் பிரார்த்தனை செய்து வேண்டியதை பெற்று மகிழ்வோடு இருங்கள் !!!


நன்றி :