ஆன்மீக மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 நவ., 2021

ஆன்மீக மலர்கள்

கார்கலந்த மேனியான் கைகலந்த
                                                            ஆழியான் 
பார்கலந்த வல்வயிற்றான்
                     பாம்பணையான் -- சீர்கலந்த
சொல் நினைந்து போக்காரேல்
                            சூழ்வினையின் ஆழ்துயரை 
என்நினைந்து போக்குவர்இப் போது  ?(2670)

பொருள் :

உலக மக்கள் இறைவன் திருக்குணங்களை சொல்லி அனுபவியாமல் வீணே பொழுது போக்குகின்றார்களே !

அப்பெருமான் மேகம் போன்ற திருமேனி உடையவன் ;
பிரளய காலத்தில் உலகமெல்லாம் வந்து சேரப்பெற்ற வலிய திருவயிற்றை உடையவன் ;
கையோடு சேர்ந்தத திருச் சக்கரத்தை உடையவன் ல
ஆதிசேடனை படுக்கை ஆக கொண்டவன் ;
இப்படிப்பட்ட பெருமானின் திருக்குணங்களை சொல்லிசைத்த வண்ணம் துதித்து வந்தால் நம் பாவங்களால் வரும் துயர் தொலையும். இவற்றை போக்கிக் கொள்ளாமல் இவ்வுலகத்தவர் வீணே கழிக்கிறார்களே.! 
பகவத் குணம் பேசாமல் இவரகள் பொழுதை எப்படித் தான் கழிக்கிறார்களோ?.... 

சிறப்பு பொருள் :
---------------------------
1).கார் கலந்த மேனியான் =இராம பிரான் 
   அவன் சீர் கலந்த சொல் =இராமாயணம் 
2).கை கலந்த ஆழியான்= கண்ண பிரான் 
அவன் சீர் கலந்த சொல் = பாகவதம், 
            மகா பாரதம், அரிவம்சம் முதலியன. 
3).பார் கலந்த வல் வயிற்றான் 
அவன் சீர் கலந்த சொல் =புராணங்கள். 
4).பாம்பணையான் =திருவரங்கன். 
அவன் சீர் கலந்த சொல் =திருவரங்கனின் பெருமை பேசும் திருவாய் மொழி.. 

இது ஒரு 
சாற்றுப் பாசுரம்...

நன்றி:

திரு கருணா மூர்த்தி, 
முகநூல்

26 நவ., 2021

ஆன்மீக மலர்கள்


தன்னை அறிந்தவன்
ஆசைப்பட மாட்டான்.
உலகை அறிந்தவன்
கோவப்பட மாட்டான்.
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்பப்பட மாட்டான்.
                                     
*பகவத் கீதை*

20 நவ., 2021

ஆன்மீக மலர்கள் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்


#கண்ணதாசன் அவர்களின்
அர்த்தமுள்ள இந்து மதம்
----------------------------
1.கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள், .. நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,

■பெண் ஆசையை ஒழிக்க...
👉இராமாயணம்,

■மண் ஆசையை ஒழிக்க...
👉மகாபாரதம்,

■கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த...
👉பகவதம்,

■அரசியலுக்கு...
👉அர்த்தசாஸ்த்திரம்,

■தாம்பத்தியத்திற்கு....
👉காம சாஸ்திரம்,

■மருத்துவத்திற்கு...
👉சித்தா, ஆயுர்வேதம்,

■கல்விக்கு...
👉வேதக் கணிதம்,

■உடல் நன்மைக்கு...
👉யோகா சாஸ்த்திரம்,

■கட்டுமானத்திற்கு...
👉வாஸ்து சாஸ்திரம்,

■விண்ணியலுக்கு...
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 

 *இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்.
கண்ணதாசன்💕

நன்றி :

26 அக்., 2021

ஆன்மீக மலர்கள் : எல்லாமே குருதான்!

*எல்லாமே குருதான்!*
***

*ஞானத்தை யாரிடம் கற்பது ?*

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் 
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு. 

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. 
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும். 

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும். 

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும். 

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை. 

ஆனால், 
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே? 

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே? 

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”. 

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. 

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான். 

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். 

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான். 

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர். 

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான். 

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, 

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, 

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு 
ஆகியவையும், 

“ஒரு நாட்டியக்காரி, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், ஒரு வேடன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர். 

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்... 

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; 

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். 

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். 

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது. 

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன். 

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. 
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன். 

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். 

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். 

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. 

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். 

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. 

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். 

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... " 
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார். 

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான். 

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே.. 

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, வேதாத்திரி  மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும். 

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

*நன்றி : திரு. விஸ்வநாதன் பவுன்சாமி*