இரண்டாம் உலகப் போரின் கதை
SECOND WORLD WAR | கதைகளின் கதை
647,458 views•Jan 21, 2020
News7 Tamil
4.26M subscribers
Grateful thanks to News7 Tamil and YouTube and all the others who made this video possible
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
இரண்டாம் உலகப் போரின் கதை
SECOND WORLD WAR | கதைகளின் கதை
647,458 views•Jan 21, 2020
News7 Tamil
4.26M subscribers
Grateful thanks to News7 Tamil and YouTube and all the others who made this video possible
வரலாற்றில் சில மைல் கற்கள் :
கச்சத்தீவின்
கதை
Kathaiyalla
Varalaru: The Story Of Katchatheevu |
87,548
views•Jun 28, 2019
NEWS18 TAMIL
NADU
1.72M
subscribers
Grateful thanks to NEWS18 TAMIL NADU and YouTube
வரலாற்றில் சில மைல் கற்கள்
ட்வின் டவர் தாக்குதலின் கதை
September 11 | Twin Towers Crash | News7 Tamil
177,073 views•Sep 10, 2018
NEWS7 TAMIL
4.11M subscribers
ட்வின் டவர் தாக்குதலின் கதை | September 11 | Twin Towers Crash | News7 Tamil
Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil
Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting
Private Limited, is rapidly growing into a most watched and most respected news
channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s
strength has been its in-depth coverage coupled with the quality of
international television production.
Grateful thanks to NEWS7 TAMIL and YouTube.
வரலாற்றில் இன்று ஜனவரி ஏழாம் நாள்
ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.
1558 – காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.
1598 – ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.
1608 – வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
1610 – கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.
1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
1789 – ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
1935 – முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1950 – அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
1972 – ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது
1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை), (இ. 1585)
1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், அஞ்சல் ஒன்றியத்தைத் தோற்றுவித்த செருமானியர் (இ. 1897)
1844 – பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (இ. 1879)
1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்
1943 – சடாகோ சசாகி, இரோசிமா, நாகசாக்கி அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர் (இ. 1955)
1948 – இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்
1953 – பாக்கியராஜ், திரைப்பட இயக்குநர், நடிகர்
1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர்
1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை
இறப்புகள்
1943 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1856)
1989 – இரோகிட்டோ, யப்பானிய மன்னர் (பி. 1901)
1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1926)
2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)
நன்றி: ETR News
ஜனவரி 6 கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 நாட்கள் உள்ளன.
*நிகழ்வுகள்*
1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் ஹெரால்டு முடிசூடினார்.
1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராகமுடிசூடினார்.
1540 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிமன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1690 – முதலாம் லியோபோல்ட் மன்னரின் மகன் ஜோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.
1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்புஉருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
1839 – அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.
1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
1899 – இந்தியாவின் வைசிராயாக கர்ஸன் பிரபு நியமிக்கப்பட்டார்.
1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின்லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில்ஆரம்பித்தார்.
1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன்இணைந்தது.
1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
1928 – தேம்ஸ் ஆறு லண்டனில்பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1929 – யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.
1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1930 – முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.
1936 – கலாக்ஷேத்திரா சென்னைஅடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவைஅங்கீகரித்தது. சீனக் குடியரசுஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1959 – பிடெல் காஸ்ட்ரோ குவானாவை அடைந்தார்.
1960 – ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1960 – நியூயார்க்கில் இருந்து மியாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.
1974 – 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.
1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1993 – ஜம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
2007 – கொழும்பிலிருந்து 36கிமீதொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
2017 – அமெரிக்காவின் புளோரிடாமாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
*பிறப்புகள்*
255 – முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)
1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)
1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)
1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)
1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)
1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)
1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக்குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்
1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
*இறப்புகள்*
1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)
1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)
1919 – தியொடோர் ரூஸ்வெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)
1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)
1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு மெற்ற ருசிய இயற்பியலாளர் (பி. 1904)
1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)
2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)
ஆதாரம்: தமிழ் விக்கிப்பீடியா