என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
10 மே, 2019
24 ஏப்., 2019
ஆரோக்கிய முத்திரைகள்-25: நரம்பு தளர்ச்சி சரியாகும் சுமண முத்திரை
13 ஏப்., 2019
ஆரோக்கிய முத்திரைகள்-24: தைராய்டு குணமாகும் சூன்ய முத்திரை
27 பிப்., 2019
ஆரோக்கிய முத்திரைகள்-23:கருட முத்திரை
16 பிப்., 2019
10 ஜன., 2019
1 ஜன., 2019
31 டிச., 2018
30 டிச., 2018
13 டிச., 2018
11 டிச., 2018
10 டிச., 2018
9 டிச., 2018
8 டிச., 2018
7 டிச., 2018
6 டிச., 2018
5 டிச., 2018
21 நவ., 2018
ஆரோக்கிய முத்திரைகள்-8: சிவலிங்க முத்திரை
சிவலிங்க முத்திரை
🗿அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வெளியில், பல்லாயிரக்கணக்கான வடிவங்களும், வஸ்துக்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. சுயம்புவாகத் தோன்றியும், தேவர்களாலும், மனிதர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டும் வணங்கப்பட்டு வருகின்றது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.
எப்படிச் செய்வது?
👍 ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டைவிரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும். கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம்.
பலன்கள்
😊சிவலிங்க வடிவம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் பஞ்ச பூதங்களும் லயத்தோடு செயல்படுகின்றன. அதேபோல், சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
💪 உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம். உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.
💖 சிவம் தேவையற்றதை எரித்துச் சம்பலாக்கிச் சம்ஹாரம் செய்வதைப்போல், சிவலிங்க முத்திரை நம் உடலில் குடியிருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழித்து, நல்ல சக்தியை நிலைநாட்டுகிறது.
⛪ யோக முறையில் விடாமுயற்சியுடன் இறைவனை அடைய விரும்புவோரும், புனித வாழ்க்கை வாழ விரும்புவோரும் சோர்வின்றித் தங்கள் பயணத்தைத் தொடர, சிவலிங்க முத்திரையைத் தொடர்ந்து செய்து வரலாம்.


