பிருந்தாவின் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிருந்தாவின் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 நவ., 2011

பிருந்தாவின் கவிதைகள்-6: அம்மாவின் பிறந்தநாள்

இன்று பிறவி எடுத்தாய்!
எங்களை ஈன்றபோது மறுபிறவி எடுத்தாய்!!
எங்களை உருவாக்க உழைத்து உருகி
மறைந்தே போனாய்!
விலைமதிப்பற்ற தாய் அன்பை தொலைத்தாலும்
உன் வயிற்றில் உதித்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளே!!
நீ கொடுத்த இந்த உடலையும்
உன் இனிய நினைவுகளையும்
சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நீ கண்ட கனவுகளை நனவாக்க!!!

(நவம்பர் 27 அன்று எழுதியது)  

29 ஏப்., 2010

பிருந்தாவின் கவிதைகள்-5: சிறுசேமிப்பு

சிறு சிறு சேமிப்பு
வாழ்க்கையின் பாதுகாப்பு
இருக்காது பரிதவிப்பு
எனவே
ஆகட்டும் பணம் சேர்ப்பு
சிறுதுளி பெருவெள்ளம்
இதை ஏற்கவேண்டும்
நம்முள்ளம்.
ஏற்றால் -
வாழ்க்கையில் இருக்காது
மேடுபள்ளம்.

20 ஏப்., 2010

பிருந்தாவின் கவிதைகள்-4: தலைவர் வருகிறார்!

என்ன உயரமான மதில்சுவர்!
அனைத்திலும் பிரம்மாண்டம்!!
பேரன் படிக்கும்
கான்வென்டைக்
காணவேண்டி,
ரசித்தபடி வருகிறார்,
தலைவர்!
தமிழ்வழிக் கல்விக்கு
குரல்
கொடுக்க! !

19 ஏப்., 2010

பிருந்தாவின் கவிதைகள்-3: வந்தது கோடை!

இல்லத்தரசிகளின் மேடையில்
பொதுக்கூட்டமாய்
எறும்புக்
கூட்டங்கள்.
புன்சிரிப்புடன் சிறுவர்களின்
முட்டுச்சந்தில்
மட்டைப்பந்து
.
குளிர்ந்தகாற்றுடன்
வியர்வை
ஊற்று.
மக்களின் திண்டாட்டத்துடன்
குளிர்பானக்கடைகளின்
கொண்டாட்டம்
.
பருத்திஉடையுடன்,
கறுப்புக்குடையுடன்
வந்தது கோடை!

31 ஆக., 2008

பிருந்தாவின் கவிதைகள்-2: "சுனாமி"

அன்று -
அன்பிற்கு மனிதன்
பொறுமைக்கு நிலம்
பெருமைக்குக் கடல்.
இன்று -
ஒரு பக்கம் கொலை, கொள்ளை
மனித நேயம் என்பதே இல்லை
எங்கும் பொய், புரட்டு;
மண்ணுலகெங்கும் இருட்டு.
மனிதனின் ஆசையின் எல்லை
அதற்கோ முடிவில்லை.
நிலத்தைச் சுரண்டினான்;
கடலைச் சூறையாடினான்;
நிலம் பூகம்பமாய் வெடித்தது;
கடலும் தன் பங்கிற்கு அள்ளியது;
எதற்கும் கொடுக்கும் 'விலை',
இவற்றிடம் செல்லவில்லை.

(2004 டிசம்பரில் இந்தியாவைத் தாக்கிய சுனாமிக்குப்பின் எழுதியது.)

19 ஜூலை, 2008

பிருந்தாவின் கவிதைகள்-1 : அன்புள்ள அம்மா!

அன்புள்ள அம்மா!
எங்கு திரும்பினாலும்
வீட்டின் நினைவலைகள்
நினைக்க நினைக்க கவலைகள்.
என் கண்ணில் நீர்த்தேக்கம்,
மனத்தில் தனிமையின் தாக்கம்,
எல்லாம் நீயில்லாத ஏக்கம்.
விடுதியும் வீடும் ஒன்றாகுமா?
அங்கோ,
காலையில் எழுப்பவும்,
அறுசுவை உணவளிக்கவும்
அன்பான நீ!
இங்கோ,
கரகரப்பான அழைப்பு மணி!