இன்றைய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்., 2026

இன்றைய புத்தகம்

முன்வெளியீட்டு விலைத்திட்டம்

ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)

நூலைப் பெற:

https://books.kalachuvadu.com/catalogue/GnaanakoothanKatturaikal_1959/

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram

#kalachuvadubooks #TamilBookReview #PreBookingOffer
#gnanakoothankavithaigal #gnanakoothan #tamilliterature #தமிழ்literature #tamilbookstore #தமிழ்நூல்கள் #kalachuvadubooks #prereleaseprice #tamilreaders #bookloverstamil #ReadTamil

4 மார்., 2026

இன்றைய புத்தகம்

அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவல்
வாசகப் பார்வை

…ஒரே தருணத்தில் இந்த வாழ்க்கை எவ்வாறு மாறக்கூடும் மற்றும் விஷயங்கள் உங்களுக்கு எதிராக எப்படி மாறும்.இதை பற்றியதே இந்த சின்ன விஷயங்களின் கடவுள்.

சமூக பொருளாதார சிக்கல்கள், கம்யூனிசத்தின் திண்டாட்டம் , பேரினவாத சமூகம், அருவருப்பான சாதி கோட்பாடு, சாதி ஒடுக்குமுறை,சிறுவர் துஷ்பிரயோகம், ஏகாதிபத்தியம், பாலியல் சுரண்டல் என்று நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற எல்லா பிரச்சனைகளுமே இந்த புத்தகத்தில் ஆற்றல் மிகுந்த வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது.

எத்தனையோ முறை கேரளாவை நேரில் கண்டிருந்த போதும் இந்த புத்தகத்தில் ராய் அவர்கள் காட்டி இருக்கும் கேரளாவின் வனப்பும் நேர்த்தியும் அதிகம்.

மொழிபெயர்ப்பை பாராட்டியே ஆகவேண்டும். மொழி மாற்றம் என்று மட்டுமல்லாமல் உணர்வு பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார் ஜி. குப்புசாமி அவர்கள்…

நன்றி: ரம்யா ரோஷன் (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=3627851397267585&set=gm.3303494989698652

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/chinna-vishayankalin-kadavul_84/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B092S554PQ

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0FH691XJ1

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram Ramya Roshan

#சின்னவிஷயங்களின்கடவுள் #ArundhatiRoy
#அருந்ததிராய் #thegodofsmallthings
#bookreview #வாசகபார்வை #tamilreaders
#தமிழ்வாசகர் #bookstagramtamil #IndianLiterature
#சாதிஒடுக்குமுறை #castesystem #keraladiaries
#கேரளா #literaryfiction #சமூகஅரசியல்
#communismdebate #TranslationMatters
#மொழிபெயர்ப்பு #mustread #contemporaryliterature
#readersofinstagram #தமிழ்ப்புத்தகம் #booklovers

3 மார்., 2026

இன்றைய புத்தகம்


வண்ணநிலவனின் ‘ஆட்டனத்தி’ சிறுகதைகள்

வாசிப்பு அனுபவம்

”எளிமையான மனிதர்களின் கதைகள்” 

நன்றி: அபிராமி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:

https://www.instagram.com/p/DT9ncxaktpf/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/Aattanaththi_1729/

மின் நூலைப்பெற: 

https://books.kalachuvadu.com/catalogue/Aattanaththi_1743/

அமேசானில் வாங்க:  

https://www.amazon.in/dp/B0G6T8CWBF

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0G7F4DQNW

@followers D.i. Aravindan TopFans Kannan Sundaram

#kalachuvadubooks  #வண்ணநிலவன் #ஆட்டனத்தி #சிறுகதைகள் #வாசிப்புஅனுபவம் #தமிழ்புத்தகம்
#தமிழ்இலக்கியம் #புத்தகவிமர்சனம் #தமிழ்வாசிப்பு
#bookstagramtamil #tamilbooks #tamilreaders #readingcommunity #bookreviewtamil #instabooks

11 ஜன., 2026

இன்றைய புத்தகம்


கல்யாணராமன் எழுதிய “நடுப்போரில் தீவைத்தல்”

நூலுக்கான மதிப்புரை

“ஒரு படைப்பை எவ்வாறு நுணுகியும் அணுகியும் விமர்சிக்க வேண்டும் என்பதற்கான எளிய கையேடு மாதிரி இக்கட்டுரைகள் திகழ்கின்றன. 

இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அவர் நுட்பமானவர் என்பது மட்டுமல்ல நகாசு வேலையுடன் படைப்பை ஆராய்வதில் நிபுணர் என்பதையும் அறியலாம்.”

நன்றி: ஆனந்த விகடன் (நா. கதிர்வேலன்)

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/Naduppotiltheevaiththalcriticalanalysisonliteraturephilosophypoliticsandcinima_1582/

மின் நூலைப்பெற: 

https://books.kalachuvadu.com/catalogue/NadupporilTheeVaithal_1600/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0FKN3ZH61

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0FMFGJXXJ

TopFans D.i. Aravindan Kannan Sundaram

#bookreview #booklovers #ReadingCulture #கல்யாணராமன்
#நூல்மதிப்புரை #booklovers #ReadingCulture
#இலக்கியவிமர்சனம் #ஆனந்தவிகடன் #tamilbookstore #literarycriticism #தமிழ்நூல்கள் #புத்தகமதிப்புரை #தமிழ்இலக்கியம் #tamilliterature #indianliterature #LiteratureReview #booktalk #bookrecommendations

6 ஜன., 2026

இன்றைய புத்தகம்

சென்னை புத்தகக்கண்காட்சி 2025-2026 புதிய வெளியீடு

அஸ்தினாபுரம் 

கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’.

கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதையும் அந்தத் துறையில் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் உயர்ந்த நிலையை அடைவதையும் சொல்லும் ‘அஸ்தினாபுரம்’ கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த கதையாகவும் விரிகிறது. கள அனுபவமும் அபாரமான நிர்வாகத் திறனும் கொண்ட நாவலின் மையப்பாத்திரம் வழியே ஜோ டி குருஸ் பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறார். பல கேள்விகளை எழுப்புகிறார். கப்பல் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தைக் கதைப்போக்கினூடே மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் சொல்கிறார். கூடவே ஒரு தனிமனிதனின் வாழ்வை யும் அவன் வாழ்வு எவ்வாறு பிற மனிதர்களுடன் பிணைந்தும் அறுந்தும் மீண்டும் இணைந்தும் பயணிக்கிறது என்பதையும் காட்டுகிறார். மானுட இனத்தின் கீழ்மை சமூகத்தின் சகல அடுக்கு களிலும் பரவியிருக்கும் இன்றைய யதார்த்தத்தையும் நாவல் கவனப்படுத்துகிறது.

@followers D.i. Aravindan Kannan Sundaram 

#kalachuvadupublications #சென்னைபுத்தகக்கண்காட்சி #chennaibookfair2026 #newbookrelease #புதியவெளியீடு
#அஸ்தினாபுரம் #asthinapuram#joedcruz #ஜோடிகுருஸ் #tamilnovel #தமிழ்நாவல் #coastallife #maritimelife #shippingindustry #WorkingClassStories #SocialReality
#contemporarytamilliterature #moderntamilwriting 
#bookstagramtamil #tamilreaders #kalachuvadupublications

29 டிச., 2025

இன்றைய புத்தகம்

எம்.வி. வெங்கட்ராமின் ‘உயிரின் யாத்திரை’ நாவல்
வாசகப் பரிந்துரை 

…திருமூலரின் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்மீக தத்துவ விசாரம் செய்யும் மாய எதார்த்தவாத படைப்பு. குறுநாவல் என்ற வகையிலும், தமிழில் வந்துள்ள மாய எதார்த்த கதைகளில் இலக்கியத்தன்மை கொண்ட ஒன்றாகவும் இந்நூல் தமிழ் வாசகருக்கு முக்கியமான ஒன்று…

நன்றி:  சாய் ராம் (இன்ஸ்டாக்ராமிலிருந்து) 

முழுப்பதிவையும் பார்க்க:

https://www.instagram.com/p/DStUwXUk0uc/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/uyirin-yaathirai_857/

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/uyirinyathirai_1791/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07Q4W8WL5

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/ebook/dp/B08FMLP8Y1

@followers D.i. Aravindan Kannan Sundaram

#உயிரின்_யாத்திரை #uyirinyaathirai #எம்_வி_வெங்கட்ராம் #venkataram #tamilnovel #tamilliterature #tamilbookstore #tamilreaders #ReaderRecommendation #tamilmagicalrealism #spiritualliterature #திருமந்திரம் #thirumandiram #PhilosophicalNovel #bookreviewtamil #kalachuvadu #kalachuvadubooks #tamilbooklovers #ReadTamil

27 டிச., 2025

இன்றைய புத்தகம்


மஹாபளேஷ்வர் ஸைல்லின் ‘யார் அறிவாரோ’ கிளாஸிக் நாவல்
விமர்சனம்

கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு நெடுங்கதை அளவில் நிறுத்தாமல் ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிட முடிகிறது. ஆனால் நிகழ்வுகளை மட்டுமே அடுக்கி குறைவான பக்கத்தில் எழுதப்பட வேண்டிய கதை இது அல்ல என்று தோன்றுகிறது… 

கொங்கணி மொழியிலிருந்து இப்படைப்பு நேரடியாகத் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பான மொழியாக்கம்.

நன்றி:  டி. என். ரஞ்சித் குமார் (முகநூலிலிருந்து) 

முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/t.n.ranjith.kumar.222864/posts/pfbid0xaumpwskRfuXHs6uMecCQ4TxuyuY6pao16JZFS2aBxppbbyrbsWnN4aqyBAd4Gdzl?rdid=iMAthNGnJAWLxuRD

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/yaar-arivaaro_96/

அமேசானில் வாங்க: 

 https://www.amazon.in/dp/B07CQJ67QL

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B08W33D7SZ

TopFans D.i. Aravindan Kannan Sundaram

#yaararivaaro #mahabaleshwarsail #tamilliterature #bookreview #translatedliterature #indianliterature #classicnovels #literaryreview #readingcommunity #bookloverstamil #யார்அறிவாரோ' #தமிழ்நாவல் #நாவல்விமர்சனம் #மொழிபெயர்ப்பு

25 டிச., 2025

இன்றைய புத்தகம்

காலச்சுவடு வெளியிட்ட அம்பை அவர்களின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்பிற்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூலினை வாசகர்கள் இணையம் வழியாக வாங்குவதற்கான இணைப்பினைக் கொடுத்துள்ளோம்.

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/Sivappu-Kazhuthudan-Oru-Pachai-Paravai_265/  

Amazon இணைப்பு: (அச்சு நூலாகவும் மின் நூலாகவும் கிடைக்கும்.)
https://www.amazon.in/dp/B07NRX18YC  

Flipkart இணைப்பு:
https://www.flipkart.com/sivappu-kazhudan-oru-pachai-paravai/p/itmfdp8zshgbygqc  
 

Kannan Sundaram, Lakshmi Chitoor Subramaniam


23 டிச., 2025

இன்றைய புத்தகம்


கணேஷ் தேவியின் ‘மகாபாரதம்’ 
நூல் அறிமுகம்

....தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள்
மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய
சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன்
வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும்
வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும்
திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின்
வசியத்திற்குக் காரணமா?...

நன்றி:  லக்ஷ்மி சரவணக்குமார் (Bookstamil முகநூல் பதிவிலிருந்து) 

முழுக் காணொலிக்கு: 
https://www.facebook.com/reel/1357473962077319

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 
https://books.kalachuvadu.com/catalogue/mahabharatham_1195/

மின் நூலைப்பெற:

 https://books.kalachuvadu.com/catalogue/mahabharatham_1718/

அமேசானில் வாங்க:  

https://www.amazon.in/dp/B0CCP9H4K1

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0CCNZGVX6

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram 

#kalachuvadupublications #tamilbookreaders #mahaparatham #goodbookstoread #bookrecommendations #ganeshdevi #aravindhan

19 டிச., 2025

இன்றைய புத்தகம்


காலச்சுவடு புதிய வெளியீடு 

ஃபிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்: பாதையும் பயணமும் (1945-1954)

புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்து கொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவான பதிவுகள் அதிகமில்லை. புதுச்சேரி மண்ணின் மைந்தரான எம்.பி. இராமன் பல்லாண்டுக்கால ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)’, ‘ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)’ ஆகிய நூல்கள் இந்தக் குறையைப் போக்குகின்றன. இந்த நூல்களின் தொடர்ச்சியாக ஃபிரெஞ்சியரின் காலனிய ஆதிக்கப் பிடியிலிருந்து புதுச்சேரி விடுபட்ட வரலாற்றை  இந்த நூல் விவரிக்கிறது.

புதுச்சேரியில் விடுதலைப் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை, ஃபிரெஞ்சியர்கள் தாமாகவே கிளம்பிவிட்டார்கள் என்பன போன்ற பொதுக்கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக மறுத்து, புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல்.

நூலைப் பெற: 

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/FrenchiyarViduthalaiPorattamPaathaiyumPayanamum19451954_1619/

அமேசானில் வாங்க:

https://www.amazon.in/dp/B0FR9LB2TX
Follower @highlights D.i. Aravindan Kannan Sundaram 

#காலச்சுவடு #புதுச்சேரி #விடுதலைப்போராட்டம் #தமிழ்புத்தகங்கள் #புதுச்சேரிவரலாறு #kalachuvadu #historybooks #viduthalaiporattam #frenchindia
 #historicalbooks

18 டிச., 2025

இன்றைய புத்தகம்


“நிலவைச் சுட்டும் விரல்”

யுவன் சந்திரசேகர்

கவிதைகள் குறித்த கட்டுரைகள்

“இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது.”
- யுவன் சந்திரசேகர்

நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/nilvaichuttumviral_1267/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0CPLJDX5Y?
மின்நூலின் இணைய இணைப்பு:https://www.amazon.in/Nilavi-Chuttum-Essays-ebook/dp/B0CPJS8BMG/

14 டிச., 2025

இன்றைய புத்தகம்


சென்னை புத்தகக்கண்காட்சி 2025-2026 புதிய வெளியீடு

சாந்தினியைத் தேடி 

இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்.

#kalachuvadupublications #newtamilbooks #bookfair #chennaibookfair2026 #BookRecommendations #tamilbookreaders

11 டிச., 2025

இன்றைய புத்தகம்

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ – தமிழ் கிளாசிக் நாவல்- வாசகப் பார்வை

குருஸ்வாமி என்ற சமூக அந்தஸ்து உள்ள ஒருவரை சார்ந்து வாழும் குடும்பங்களில் ஒன்று வேலப்பன், வேலப்பனுக்காக பெரிய வசதியையே குடும்பத்தையே புறக்கணித்து வரும் அவனின் மனைவி ராணி, இன்னும் சில கதாபாத்திரங்கள். இளமையிலியே மனைவியை இழந்து வாழும் குருஸ்வாமி காமத்தை தன்னுடைய அந்தஸ்த்துகாகவே அடக்கி வைக்கிறார். இது குறித்து முதல் பகுதியில் எங்குமே வார்த்தைகளால் நேரடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலுமே கதையின் போக்கில் புரிந்து கொள்ள முடியும்…

அடக்கிவைக்கப்பட்ட காமம் எதனால் நிகழ்கிறது. குறித்து 80களிலேயே ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் ஆ.மாதவன். எல்லாரும் ஏதோரு சமயத்திற்காக காத்திருக்கவே செய்கிறோம் அதில் காமம் அடர்த்தியானது.

நன்றி:  நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.facebook.com/100001272259577/posts/25854872607471794/?rdid=3GEIgaLgD24X7Xby#

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/krishna-parunthu_1058/

மின் நூலைப்பெற: 

https://books.kalachuvadu.com/catalogue/KrishnaParunthu_1712/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0B6FL24SP

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0B726R57K/

#kalachuvadupublications #krishnaparunthu #tamilbookreaders #tamilliterature #bookrecommendations #bookreview #lovetoreadbooks #tamilbookreaders  #amadhavan

9 டிச., 2025

இன்றைய புத்தகம்



ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’ நாவல்
வாசிப்பனுபவம்
 
…பங்கி என்ற தன் மனைவி தங்கம்மையின் முதல் கணவருக்கு பிறந்தவள் மீது அங்குசாமியின் வெறுப்புதான் இந்த நாவலின் மையம். அங்குசாமி, பங்கி, தாமோதரன் இவர்களின் கதையை சொல்லி செல்கிறது ஆனால் வெறும் அக உலகமாக மட்டுமே பேசாமல் ஆற்று மணல் வியாபாரத்தையும் நுட்பமாக பேசுகிறது.

..வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் நாவல் நாம் அதற்காகவே இன்னொரு முறை வாசிக்கவைக்கும் மொழி இன்பத்தை கொடுக்கிறது.

நன்றி:  நிஜந்தன் தோழன் (முகநூல் பதிவு) 

முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/100001272259577/posts/25804884665803922/?rdid=PsacNPn9iF8IFxLx#

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 
https://books.kalachuvadu.com/catalogue/punalum-manalum_127/

அமேசானில் வாங்க:  https://www.amazon.in/dp/B07WG8255Z

மின் நூலைப்பெற: https://www.amazon.in/dp/B08JTQH4R1

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram நிஜந்தன் தோழன் 

#kalachuvadupublications #punalummanalum #RMadhavan #tamilclassicstory #tamilbookreaders #bookrecommendations2025 #tamilnovel

6 டிச., 2025

இன்றைய புத்தகம்


அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ 
நாவல் பரிந்துரை

சினிமா உலகின் பின்னணியில் எழுதப்பட்ட ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் பரிந்துரைக்கிறார் சாரு நிவேதிதா.

நன்றி:  சாரு நிவேதிதா (commonfolks.in முகநூல் பதிவிலிருந்து) 

முழுக் காணொலிக்கு: 
https://www.facebook.com/reel/717498114305968

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 
https://books.kalachuvadu.com/catalogue/karaintha-nizhalkal_109/

அமேசானில் வாங்க: 
http://amazon.in/dp/B07CYG13CB

மின் நூலைப்பெற: 
https://www.amazon.in/dp/B08SM7KC97/

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram 

#kalachuvadupublications #tamilbookreaders #tamilliterature #karainthanizhalkal #ashokamithran  #tamilnovel

2 டிச., 2025

இன்றைய புத்தகம்


[29/11, 20:56] SIVASUBRAMANIAN SIVASURIY: நெருப்பு ஓடு என்பது கம்மாள சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கான அடுப்பு வகை. இந்த நாவலில் இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறைகள் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சயனைட் தற்கொலைகள், திருட்டு நகை பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாழ்வியல் சமூகத் தாக்குதல்கள், பெரு முதலாளிகளால் நசுக்கப்படும் சிறிய நகைத் தொழிலாளிகளின் வாழ்க்கை அவர்களின் குழுக்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி என அனைத்தையும் பதிவு செய்கிறது.
[29/11, 20:59] SIVASUBRAMANIAN SIVASURIY: தேவி லிங்கம் எழுதிய நெருப்பு ஓடு என்னும் நாவலை வாசித்தேன். ரமேஷ் பிரேதன் விருது பெற்ற பின்னரே தேவி லிங்கம் பற்றி அறிந்தேன். இந்நாவலை சுவாரசியமாக வாசிக்கமுடிந்தது என்பதே இதன்  ஆசிரியர் ஒரு தொடக்கநிலை எழுத்தாளர் என்னும் வகையில் முக்கியமான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். பொற்கொல்லர் குடும்பம் ஒன்றின் கதை இது. கந்தசாமி பத்தர், ஜெயலட்சுமி அம்மாள் என்னும் இணையரின் குடும்பம் என்று சொல்லலாம். அவர்களில் தொடங்கி நான்கு தலைமுறையினரின் கதைகளை சரளமாகப் பின்னி கதை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். எண்பதுகளில் நிகழும் கதை. வேதாரண்யம் அருகே முத்துப்பேட்டைக் கதைக்களம்.

கதிர் என்னும் இளைஞரின் வாழ்க்கையை மையமாக்கி பிறருடைய வாழ்க்கையை நினைவுகளாகவும் நிகழ்வுகளாகவும் தொகுத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. நாமறியாத ஒரு சமூகத்தின் வாழ்க்கை. ஆனால் அதிலுள்ள ஆசாபாசங்களும் உறவுச்சிக்கல்களும் நாமனைவரும் அறிந்ததாகவே உள்ளன. ஆண்பெண் உறவு சார்ந்த பல இடங்களில் மனிதமனத்தின் விசித்திரங்கள் வெளிப்படுகின்றன. நகைசெய்யும் தொழில் எண்பதுகளில் நலிவடையத்தொடங்கி மெல்லமெல்ல அச்சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. நகை செய்யும் நெருப்புக்கலம்தான் மைய உருவகம். அதை ஊதி ஊதி நகைசெய்பவர்கள் தாங்களும் அந்த நெருப்பில் உருகி அழிகிறார்கள். தற்கொலைகள்.

.....xxxx.....

வறுமையின் விளைவான சரிவுகள். ஒரு மொத்தவாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கமுடிந்திருப்பது இந்நாவலின் சிறப்பு. கதாபாத்திரங்கள் மிகையில்லாமல் சித்தரிக்கப்பட்டிருப்பதும், நிகழ்வுகள் நாடகத்தன்மை இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு. அத்தியாயங்களின் தலைப்புகள் நகைசார்ந்தவையாக உள்ளன. சில இடங்களில் அவை அந்த அத்தியாயத்தை உருவகரீதியாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அந்தவகையில் இந்நாவலுக்கு ஓர் இலக்கியத்தகுதி உண்டு. ஆனால் தொடர்கதைகளுக்குரிய திருப்பங்களுடன் அத்தியாயங்கள் அமைந்திருப்பதும், உரையாடல்களில் ஆழமில்லாத சாதாரணத்தன்மை இருப்பதும் வணிக எழுத்தின் சாயலை அளிக்கின்றது.

ஆசிரியர் ஒரு சமூகத்தின் அகச்சித்திரத்தை அளிக்கமுயன்று குறிxxddப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார் என நினைக்கிறேன்.

ஆர்.ராஜசேகர்

28 நவ., 2025

இன்றைய புத்தகம்


MeToo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள், அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன. சுய சிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதி என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாம்.

கோட்பாட்டுப் புரிதலுடனும் சமூக யதார்த்தங்கள் குறித்த பிரக்ஞையுடனும் எழுதப்பட்ட காத்திரமான பெண்ணியக் கட்டுரைகளைத் தமிழில் மிக மிக அரிதாகவே காண முடிகிறது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழுக்கு மிக அவசியமான வரவு.

- அரவிந்தன்