பட்டுக்கோட்டை பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டுக்கோட்டை பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-9: "நீரலை வெள்ளி மலர்"

மின்னும் இயற்கையெல்லாம் உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக்கனல் மூட்டுதடி
வானநிலாப் பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவரும் நீரலையில் வெள்ளிமலர் பூத்ததடி!
வள்ளியுனை எதிர்பார்த்த மெல்லுடலும் வேர்த்ததடி!
இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி
மெல்லத்தமிழ் உனது சொல்லில்வந்து கொஞ்சுதடி!

8 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-8: "கண்ணில் கருணை"

உள்ளும் புறமுமாகி ஒளியாகி - ஞான
வெளியாகி நின்ற உமையே!
துள்ளும் கலைகளாகித் துளியாகிக் கடலாகித்
தெளிவாக நின்ற திருவே!

அல்லும் பகலுமாகி அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனதுமலரடி இணையில் இணையுமெனை
ஆண்டருள்வாய் அம்மையே!

கையிலே சூலமும் கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்
கொய்யாத மலர்முகமும் குலுங்குநவமணி அழகுங்
கொண்ட தாயே!

மைபோன்ற இருட்டிலே வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை
மெய்யிலே அறிவெனும் விளக்கேற்றி வைத்தநீ
விடுதலை வழங்குவாயே!

2 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-7:

அன்புரசம் நிறைந்த அமுதக்கலசம் காட்டி
ஆனந்தம் இந்தாவென்று அழைப்பாழ் - கையை
வானவில்லைப்போல வளைப்பாள் - அந்தக்
கத்தும்கடல் கொடுத்த முத்துச்சரம் தொடுத்த
காட்சிஎன்னும் அந்தப் பற்களும் - தமிழ்
சாட்சிசொல்லச் சிந்தும் சொற்களும் - தன்
துள்ளும் எழிற் கெண்டையான விழி இரண்டை
சொல்லுக் கணையாக விடுவாள் - அன்பு
உள்ளத்திலே வந்து தொடுவாள்!

'கத்தும் கடல் கொடுத்த' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலிலிருந்து ஒரு பகுதி.

9 செப்., 2008

பட்டுக்கோட்டை பாடல்-6: "உன்னை நினைக்கையிலே.."

உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி (உன்னை)

பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு
பொங்கிடும் காதல் தேன்குடமே!
தனந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்ரோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

வட்டக்கருவிழி மங்கையே - ஒளி
கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
கட்டுக்குலையாத பட்டுத் தளிர்மேனி
கண்ணில் அபத்தியம் காட்டுதே - இன்பக்
காவியத் தேனள்ளி ஊட்டுதே (உன்னை)

16 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-4

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா.

14 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-3: "காலொடிந்த ஆட்டுக்காகக் ..."

காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்,
கடல்போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்,
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு.
காதில் மட்டும் கேட்டு அதை
ரசிச்சாங்க - ஆனா
கறிக்கடையில் கணக்கைப்
பெருக்கி வந்தாங்க.

12 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-2: "ஆடைகட்டி வந்த நிலவோ..."

ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?

11 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-1: "சின்னஞ்சிறு கண்மலர்...."

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலை
மாணிக்க மாலை ஆரிரோ,
அன்பே ஆராரோ!
ஏழை நம் நிலையை எண்ணி
நொந்தாயோ!
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ!
நாளை உலகம்
நல்லோரின் கையில்
நாமும் அதிலே
உய்வோம் உண்மையில்
மாடிமனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்!

8 ஆக., 2008

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):
----------------------------------------------------------------
பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்...
பாரதிக்கு நிகர் பாரதியே!
பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான்.
பஞ்சைகளின் நிலையைப்
பார்த்துள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப்
பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை
உண்மையைப் புகழ்ந்தான்.