30 செப்., 2020

இலையிலே கலை

சமூக வலைத்தளங்களின் அவசியம்

ஆன்லைன் கருத்தரங்கம் : முதியோரின் நிலை - நேற்று, இன்று, நாளை

கல்லிலே கலைவண்ணம்

நூல் நயம் : எஸ்ராவின், "எலியின் பாஸ்வேர்டு"

பெயர் : ரியா ரோஷன் 
வயது : 11 
வகுப்பு : ஆறாம் வகுப்பு 
இடம் : சென்னை 
பிரிவு : #குழந்தைகள் 
புத்தகம் : எலியின் பாஸ்வேர்டு 
ஆசிரியர் : S.ராமகிருஷ்ணன் 
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம் 

கதை : 
பகைவர்களாக இருந்த பாம்பு கூட்டமும் எலி கூட்டமும் நண்பர்களான கதை தான் இது. எலிக்குஞ்சுகளை பாம்புகள் கொன்று தின்று கொண்டே இருக்கின்றன. அதனால் எலி கூட்டத்தின் நண்பன் முயல்,  பாம்புகளின் ராஜா நாகாவை சந்தித்து எலிகளை கொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். நாகாவும் எலிகளின் ஒப்புதல் இல்லாமல் நாங்கள் அவர்களை சாப்பிட மாட்டோம் என்று ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும் பாம்புகள் எலி குஞ்சுகளைத் தின்று கொண்டே தான் இருந்தன. எலி கூட்டத்திடம் முயல் உங்களின் வீட்டிற்கு கதவு செய்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. ஆனால் பாம்புகள் ஒன்று சேர்ந்து கதவை இடித்து குஞ்சுகளை சாப்பிட்டு விடுகின்றன. கடைசியாக முயல் உங்களில் ஒருவனை படிக்க வையுங்கள் என்று சொல்கிறது.எலி கூட்டம் டோம் என்ற எலியை படிக்க வைக்க முடிவு செய்கிறார்கள். அவன் ஒரு வருடத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்து விடுகிறான். அதன் பிறகு லண்டன் சென்று படித்து திரும்புகிறான். எலிக் கூட்டத்திற்கு அவன் ஒரு டிஜிட்டல் கதவும் பாஸ்வேர்டும் அமைத்து தருகிறான். போட்டியாக பாம்பு கூட்டமும் அதேபோல் ராக் என்ற பாம்பை படிக்க வைக்கிறார்கள். டோமிற்கும் ராக்கிற்கும் நடக்கும் பாஸ்வேர்ட் சண்டையில் டோம் வெற்றி பெறுகிறான். எலிக்கூட்டமும் பாம்பு கூட்டமும் ஒன்று சேர்க்கிறார்கள்.

இந்த கதையில் எனக்கு பிடித்தது :

1.Ratatouille படத்தில் வரும் எலி போல cute ஆன எலி தான் டோம்.சுட்டியா இருந்தாலும் hardwork பண்ணி படிக்கிறான்.

2.டோம் கப்பலில் இருக்கும்போது அவனுக்கு பசித்தும் அவனுக்கு உதவி செய்த மீனை அவன் சாப்பிடவே இல்லை. 

3.இதில் வரும் firewall tactics எனக்கு பிடித்து இருந்தது. 

4.மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் லண்டன் சென்று படித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றினர். அது போல டோம் கூட லண்டனில் படித்து அவனின் எலி கூட்டத்தை காப்பாற்றினான்.

நன்றி 
ரியா ரோஷன்

நன்றி : 
ரியா ரோஷன்
மற்றும் 

குட்டிக்கதை

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.

🌼மகிழ்ச்சியாய் இருங்கள்🌼

பக்தி உலா : திருச்செந்தூர்

#திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்:

ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். 

அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 

133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா...!

1. #மௌனசுவாமி

2. #காசிசுவாமி 

3. #ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்

4. #ஸ்ரீவள்ளிநாயகசுவாமி

5. #தேசியமூர்த்திசுவாமி. 
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும்  நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். 

இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்

#நான்காவதாக, 
ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து  சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

#ஐந்தாவதாக, 
ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது  ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.  

அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.

#Sithargalinrajiyam #சித்தம்டிவி #SithamTV #சித்தர்களின்_ராஜ்ஜியம்

நன்றி :


ஆன்மீகம் அறிவோம் : கோவிலுக்குப் போவதேன்?

*கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்:*

1. *பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.*

2. *சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.*

3. *கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.*

4. *இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.*

5. *இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.*

6. *அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும்*..

7. *கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.*

8. *இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.*

9. *மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.*

10. *அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.*

11. *அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..*

12. *பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.*

13. *இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.*

14. *இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.*

15. *கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்*. 

16. *பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.*
*நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்*

17. *பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.* 

18. *கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.*

19. *அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும்*..

20. *நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.*

*இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்.... குழந்தைகளையும் பழக்குவோம் ... அது அறிவியல் ஆகட்டும்... எதுவாகட்டும்.... இறை சக்தி நம்மை காக்கட்டும்..*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ். பி. பி. ?

மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?

தன்னுடைய சிலையை செய்ய எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், ஆந்திராவைச் சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் தன் சிலையை செய்ய ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தப்பேட்டையைச் சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி - தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளைச் செய்வதற்கு எஸ்.பி.பி ஆர்டர் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரைத் தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். 

கொரோனா தொற்று, மற்றும் ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து ஆர்டர் தர முடியாது என்று கூறியதுடன், தேவையான போட்டோ ஷூட் செய்ய முடியாது எனக் கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்.பி.பி திரும்பியதும் சிலையை ஒப்படைக்க சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிலையின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், எஸ். பி.பி இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது. 

இதனால் தன்னுடைய மரணத்தை முன்னதாகவே உணர்ந்து இருப்பாரோ என்ற ஐயம் உறவினர்களிடையே எழுந்துள்ளது. 

தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என உணர்ந்தவராக எஸ்.பி.பி இருந்தது அவரது மரணத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதுதான் பெரும் சோகம்.

🌸🌸🌸🌸🌸🌸👏🏻

நன்றி :

இளையோருக்காக : பெற்றோரின் வலி

*இன்றையப் பதின்ம வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.* ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.
   *கைப்பேசி* அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது. *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது*.
   ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது. *எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை*.
   வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது. *சொந்தப் பெற்றோரிடம் மட்டும் தூக்கியடிப்பதுபோல பேசத்தான் முடிகிறது*.
   எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது. ஆனால் *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.*
   எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.

                  ~ *இறையன்பு.IAS*

நன்றி :
திரு.இறையன்பு.IAS

புதுக்கோட்டை - சில தகவல்கள்

புதுக்கோட்டை சில செய்திகள்....

✔ஆசியாவிலேயே மிகப்பெரிய அனந்த சயண பெருமாள் - திருமெய்யர்

✔உலகில் உள்ள அணைத்து நீர்நிலைகளின் பாவங்களை போக்குவது திருமயம் சத்திய புஷ்கரணி

✔உலகிலேயே சிவன் மற்றும் பெருமாளை ஒருங்கே கிரிவலம் வரும் ஊர் - திருமயம்.

✔புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரே திவ்ய தேசம் - திருமயம் 

✔இமயமலையை விட அதிக சக்தி வாய்ந்தது திருமயம் மலைக்கோட்டை

✔உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர் -  திருமயம் கோட்டை பைரவர்

✔தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் திருமயம்  சத்தியகிரீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் லிங்கோத்பவர்  
 ( பெரிய நந்திக்கு பின்புறம்).

✔ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை - புதுக்கோட்டை குலமங்களம் பெருங்கரையாடி மீட்ட அய்யணார் கோவில் குதிரை சிலை

✔தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலை - புதுக்கோட்டை கீரமங்களம்

✔தமிழத்திலேயே ஏழு சகோதரிகளாக  (சப்தகன்னியர்களாக) அழைக்கப்படும் 

1). திருவப்பூர் முத்துமாரியம்மன்

2). இளஞ்சாவூர் முத்துமாரியம்மன்

3). கொன்னையூர் முத்துமாரியம்மன்

4). நார்த்தாமலை முத்துமாரியம்மன்

5). கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்

6). கண்ணணூர் முத்துமாரியம்மன்

7). சமயபுரம் முத்துமாரியம்மன் 

ஆகிய ஏழு முத்துமாரியம்மன்களில் நான்கு சகோதரிகள் 

(திருவப்பூர், இளஞ்சாவூர், கொன்னையூர்,  நார்த்தாமலை) 

வீற்றிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே.

✔தமிழ் நாட்டிலேயே சமணர்கள் அதிகமாக தங்கிய குகைகளும் மலைகளும் நிறைந்த மாவட்டம் புதுக்கோட்டை. (சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை)

✔இராஜராஜ சோழன் பதவி ஏற்றவுடன் முதல் கோவில் கட்டியது புதுக்கோட்டை நார்த்தாமலை அருகில்.

✔தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இருப்பது புதுக்கோட்டை

✔தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அரசு அச்சகம் இருப்பது புதுக்கோட்டை.

✔தமிழகத்திலேயே நூற்றாண்டு கண்ட முதல் நகராட்சி புதுக்கோட்டை நகராட்சி.

✔ஹெலிகாப்டரில் புனித நீரும் பூக்களும் தூவி, அம்மன் கோவில் இராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்தது கொத்தமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டம்.

✔தனி நாணயம், தனி தபால் தலையுடன் விளங்கிய ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்.

✔முதன்முதலில் கார் வாங்கியது புதுக்கோட்டை மன்னர்.

✔இந்தியாவின் முதல் பெண்மருத்துவர் DR.முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை.

நன்றி :நலக்குறிப்புகள் : தலைவலி குணமாக

இன்றைய சிந்தனைக்கு

29 செப்., 2020

கொரோனா பற்றிய ஆழமான அறிவியல் தகவல்கள் !

கொரனாவுக்கு இது தான் கடைசி தீர்வு

 கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான 
விளக்க பதிவு!!

*நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 

இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர்.

கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன். 

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .

ஒரு ஆர்என்ஏ
(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) 
அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). 

அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். 

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே.

இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.

கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.

இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. 

இது ஒரு முழுமையான 
ஒட்டுண்ணி. 

ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த 
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. 

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் 
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் 
தொண்டை பகுதியை தாக்குகிறது. 

தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. 

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது. 

அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். 

பெரும்பாலான வைரஸ்கள் 
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை 
நமது உடல் கொன்று விடுகிறது, 
கொரோனா வைரஸ் உள்பட. 

நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். 

வைரஸோ, பாக்டீரியாவோ 
அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. 

வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ 
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். 

அதில் ஒன்று Innate lymphoid cells. 

இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. 

மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. 
இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி 
ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை 
அடைந்த கொரோனா 
வைரஸ்கள் அடுத்ததாக 
நமது உடலை பாதிப்பது நுரையீரலை.

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். 

இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். 

இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். 

அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.

10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை 
இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. 

ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.
 
மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. ழ

இந்த கொரோனா வைரஸ், 
நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. 

சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.

ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். 

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். 

இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு 
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. 

வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.

இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. 

அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. 

இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

 ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, 
B cells-களும் ஏற்கனவே 
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் 
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் 
நமது உடல் எதிர்ப்பு சக்தி 
சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

 நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.

அதே போல இதயக் கோளாறு, 
பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் 
போதிய சக்தி கிடைப்பதில்லை, 
நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. 

இங்கேயும் உடலின் எதிர்ப்பு 
சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. 

அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். 

அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி 
எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. 

அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே 
முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில் 
இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

(தற்போதைய வாட்ஸ் ஆப் செட்டிங்கில் forward மெஸேஜை ஒரு முறைதான் forward செய்ய முடியும் என்பதாலும்,ஒவ்வொரு தடவையாக பல நண்பர்களுக்கு forward செய்வதில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த இந்த பயனுள்ள மெஸேஜை காப்பி&பேஸ்ட் செய்து பதிவிட்டுள்ளேன்.

இந்த மெஸேஜை ஐந்து பேருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும் என்பதால் இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்/வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு அனுப்பவும்.)

நன்றி! வணக்கம்!!

நன்றி :
Dr.P.மணி
மற்றும்
வாட்ஸ்அப் 

ஆரோக்கிய வாழ்விற்கு...

சிரித்து வாழவேண்டும்!

நீராவி வாரம்!

நீராவி வாரம் 

    டாக்டர்களின் கூற்றுப்படி, மூக்கு-வாயிலிருந்து நீராவியால் COVID-19 கொல்லப்படலாம், கொரோனாவை நீக்குகிறது.  மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினால், கரோனாவை முடிக்க முடியும்.

  * இந்த வேலையை மேற்கண்ட திசையில் செய்ய, உலகெங்கிலும் உள்ள மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் *

  * செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 03 வரை ஒரு வாரம் நீராவி செயல்முறையைத் தொடங்கவும், அதாவது காலை மற்றும் மாலை.  நீராவி எடுக்க 05-05 நிமிடங்கள்.  இந்த நடைமுறையை ஒரு வாரம் கடைப்பிடிப்பதன் மூலம், கொடிய COVID-19 அழிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் *

  அவ்வாறு செய்வது பயனளிக்கும், பக்க விளைவுகளும் இல்லை.

    எனவே இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள், இதன்மூலம் நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாகவும் நடக்க முடியும்.

  அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதன் மூலம், அது முழு நன்மையையும் பெறலாம்.  மேலும் மேலும் பகிரவும்.

  * வாருங்கள், செப்டம்பர் 27 முதல் .. ஒரு வாரம் .. காலை / மாலை .. 5 நிமிடங்களுக்கு .. நீராவி எடுக்க வேண்டும் ..  ”என்று சபதம் செய்வோம்.  *

           *நன்றி*

  * இதை நீங்கள் அறிந்த குழுக்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் *

  * பொது நலனில் வழங்கப்பட்டது *

கல்லிலே கலைவண்ணம்

குட்டிக்கதை

ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை

உங்களால் பெற்றது துணிவு
உங்கள் கவிதையால் பெற்றது நிமிர்வு
உங்கள் நோக்கால் பெற்றது சுடர்மிகும் அறிவு
உங்கள் போக்கால் பெற்றது கண்ணியம்
ஈரோடு தந்த சீர்களால்
சீரோடு மிளிரும் தமிழ்நாடு.
போற்றிப் புகழ்ந்து வணங்குகிறேன்
பரணரே பாவேந்தர் வழிவழியே
கீரனாரே கிளிமொழிக் கலகலப்பே
இன்னும்ஒரு நூற்றாண்டு இரும்....

நன்றி :

வேதனைக்குரல்

தமிழ்நாட்டில் பிறந்து...
தமிழ்நாட்டில் வளர்ந்து... 
தமிழ்நாட்டில் தொழில் செய்து... 
தமிழ்நாட்டில் சேமித்து 
தமிழ்நாட்டில் இருக்கிற பேங்க்ல பணத்தை போடவோ எடுக்கவோ தமிழைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள் அடுத்தவரின் கையை எதிர்பார்த்திருப்பது இந்த அரசுக்கு ஒரு கேவலமாக தெரியவில்லையா..?

 சொந்த மண்ணில் செயல்படும் வங்கிகளில் எல்லாமும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்குமென்றால் அப்புறம் தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கதி என்னதான் ஆவது...

ஒருவன் ஒரு மொழியை மட்டுமே.. அதுவும் தாய்மொழி மட்டுமே எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது தேசிய குற்றமா..?

தமிழ்நாட்டில் செயல்படும்  வங்கிகளிலிருந்து 
இந்தியை நீக்கு.. தமிழை சேர்!

பதிவு: கருப்பு கருணா
=========
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன தமிழர்களால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை. கனரா, சிண்டிகேட் வங்கி முதலியன கர்நாடகாவிலும் ஆந்திரவங்கி ஆந்திராவிலும் உருவானவை. மத்திய அதிகாரம் இவற்றை எல்லாம் இந்தி வங்கிகளாக் கைப்பற்றி மாற்றுவது தவறு.
கூட்டாட்சிமுறை கெடுகிறது. மக்கள் தம் சொந்த மொழியில் இயங்க முடியாவிட்டால் மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?

நன்றி :
கருப்பு கருணா
மற்றும் 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு 
அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
தமிழ் புதுக்கவிதையின் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். 

கவிதையின் எல்லா வடிவங்களையும் பரிசோதித்த முன்னோடிக் கவிஞர் . 

மரபு, புதுமை , ஹைகூ , கஸல், குறும்பா என வடிவ சோதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர்.

அவருடைய 'நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்', 'தீவுகள் கரையேறுகின்றன', 'காலத்துக்கு ஒரு நாள் ஒன்றில் முந்தி', 'சூரியப் பிறைகள்' போன்றவை எல்லாம் என் ஆரம்பகாலப் பாட நூல்கள் என்றே சொல்லலாம். 

"பத்தாவது முறை விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி 
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ."

'சூரியப் பிறைகளி'ல் இடம்பெற்றிருக்கும் புகழ்பெற்ற இந்தக் கவிதை தன்னம்பிக்கை நூல்கள் தருகிற கற்பனைத் தன்னம்பிக்கைகளைவிட இயல்பான , நடைமுறை சார்ந்த ஊக்க மருந்து. 

"புகை பிடித்தால் இறப்பாய் 
மது குடித்தால் இறப்பாய் 
இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்,"

என்ற நையாண்டி கவிதை இன்றைய நாட்டு நிலையை சுருக்கென சுட்டிக்காட்டும் ஒன்று.

"இறைவனைத் தேட மதங்கள் மார்க்கங்கள் என்றால் 
மனிதனைத் தேட எது மார்க்கம்?"

என்பது மதங்களை தாண்டிய அவரது மனிதத் தேடல்.

"போராட்டம் ஆர்ப்பாட்டம் கிளர்ச்சி என்று காயம்பட்டுக் கதறியபடி முள் காட்டில் ஓடி வருகிற உனக்கு பூங்காக்களின் முகவரிகள் தெரியாதா?"

என்பது 24 மணி நேரமும் பரபரப்பான செய்திகளை கூறும் ஊடகங்களின் முன் அவர் வைக்கும் கேள்வி.

"ஊரில் ஒருவர் 
நகர் மன்ற உறுப்பினர் ஆனார் 
எம்எல்ஏ ஆனார் 
மந்திரி ஆனார் 
ஆனால் மனிதராகும் முன்பே மரித்துப் போனார்"

அரசியலில் மனிதத்தைத் தொலைத்த அரசியல்வாதிகளைப் பற்றிய அவரது சித்திரம் இது .

சூடான கவிதைகளை மட்டுமல்ல சுகமான கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார்.

'நீ ஊதி அணைத்தால் நான் அணைந்துவிடச் சம்மதிக்கிறேன்'

மென்மையான இதுபோன்று நிறைய காதல் கவிதைகளும் அவர் தொகுப்புகளில் காணமுடியும்.

"உடைகின்ற கண்ணாடிப்    
பாத்திரமும் நானே
உடைக்கின்ற கல்மனதின் 
ஆத்திரமும் நானே... "

இது 'கஜல் பிறைகள்' நூலில் அவர் வரைந்து கொண்ட தற்படம்.

இன்றும் சளைக்காமல் இளம் கவிஞர்களோடு போட்டிபோட்டு முகநூலில் கவிதை எழுதி வருகிறார்.

"ஒருபறவை
இறந்தபோது
வானம்
காற்றிடம்
துக்கம் விசாரித்தது

காற்று
கூட்டின்வாசலில்
குஞ்சுகளைத் 
தேற்றிக் கொண்டிருந்தது
அப்போது"

அண்மையில் முகநூலில் அவர் எழுதிய கவிதை இது.

ஹைகூ கவிதை நூல்கள் எழுதியது அல்ல... ஹைகூ அறிமுக  நூல்களை எழுதியும் ,  விளக்க உரைகள் நிகழ்த்தியும்
எண்ணற்ற ஹைகூ கவிஞர்கள் உருவாகத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.

அதேபோல மிகச் சிறந்த சொற்பொழிவாளர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
ஒரு உரை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை கற்க வேண்டுமென்றால்  தமிழன்பன் அவர்களின் உரையை நேரில் கேட்க வேண்டும். எடுத்துக் கொண்ட தலைப்பின் மையப்  பொருளை ஆழ அகலமாகவும், நீள உயரமாகவும் பலப்பல பரிமாணங்களில் அடுக்கடுக்காக விரித்து எடுத்துச் செல்லும் அவரது ஆற்றல் மலைப்பை ஏற்படுத்தும் . ஒரு கவிதைக்கு எத்தனை பொருள்களா என்று வியக்க வைக்கும்.

அவரது உச்சரிப்பைக் கேட்டால் தமிழ் எவ்வளவு  அழகான , இனிமையான மொழி  என்பதை எந்த மொழிக்காரரும் ஏற்றுக்கொள்வர்.

மேடையில் நேர்த்தியாகத் தோன்றுவார். 
சட்டையை இன் செய்து ஒரு கல்லூரி பேராசிரியரின் கண்ணியமான தோற்றத்தில் கனிவும் கம்பீரமும் ஆகத் தோற்றமளிப்பார் . 

இந்த 85 வயதிலும் நின்றுகொண்டு ஒரு மணி நேரம் சொற்பொழிவு நடத்துகிறார். உலக இலக்கியமே அதில் சுழன்றடிக்கும். தமிழ் மேடைகளில் சிலி நாட்டுக் கவிஞனான பாப்லோ நெருடாவை இவரளவுக்கு வேறு யாரும் பேசியிருப்பார்களா என்பது சந்தேகமே. பாப்லோ நெருடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார்.

அவரது கவியரங்கக் கவிதை பாணியும் கேட்கக் கேட்கச் சலிக்காத ஒன்று. கவிதையின் பொருள் முழுவதுமாகப் பார்வையாளரைச் சேரும்படிப் படிப்பார். புதுமையான கற்பனை, இதமான சொல்லாடல்கள், அழகான, எளிமையான படிமங்கள் எல்லாம் கலந்த சொற்ப் பின்னலைக் கணீரென்ற அவருடைய  அவருடைய குரலில் உச்சரிக்கையில் மேடையில் ஒரு மேகத்தின்  நாட்டியம் கண்ணில் தெரியும். இடி , மின்னல், மழை  எல்லாம் நம் புலன்களைக் கைப்பற்றி அதற்குள் நம்மை ஒருமுகப்படுத்திவிடும். 

'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 'சாஹித்ய அகடமி' விருதையும், தமிழக அரசின் பரிசுகளையும் பெற்றவர்.

நான் கல்லூரியில் படித்தபோது  அனைத்துக் கல்லூரிகளுக்கான கம்பன் கழகக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்தான் நடுவராக இருந்தார் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

அதேபோல நான் வசனம் எழுதிய முதல் படமான 'ஆனந்தத்தி'ற்கு சென்சார் போர்டு உறுப்பினராகவும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வந்திருந்தார். அப்போதெல்லாம் அவருக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் என் வாழ்வின் முக்கியமான இரண்டு நிகழ்வுகளில்  என்னை அறியாமலேயே அவர் இருந்திருக்கிறார். இது நான் அவர் மீது கொண்ட மதிப்பிற்கும் அன்பிற்கும் கிடைத்த ஒரு பரிசு என்றே நினைத்துக் கொள்கிறேன்.

என்னுடைய 'இருளும் ஒளியும்' நூலுக்கு அணிந்துரை தருமாறு வேண்டியபோது பல்வேறு பணிகளுக்கு இடையில் அற்புதமான அணிந்துரையை வழங்கினார். அதில் இத்தாலிய கவிஞன் 'அங்கரோட்டி' என்பவரின் கவிதையை எல்லாம் மேற்கோள்காட்டி எழுதியிருந்தது அவர் என்மீது காட்டிவரும் அன்புக்கான சாட்சி.

86 ஆம் பிறந்தநாள் காணும் ஒரு மூத்த கவிஞருக்கு அவரைப் பின் தொடரும் ஒரு கவிஞனின் அன்பு வாழ்த்துக்கள்

உடல் நலனும் மனவளமும் குன்றாமல் வழக்கம்போல் அவர் புன்னகையோடு தன் பயணத்தைத் தொடர பணிவோடு வாழ்த்துகிறேன்.
*
அன்புடன் ,
பிருந்தா சாரதி

நன்றி :

கவிதை நேரம்

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

சிரிப்புத்தான் வருகுதையா

கடைசி வார்த்தைகள்!


*உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.  சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*

+"#மரணத்தை_விட_உண்மையானது_இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "

+  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து செல்ல படுகிறேன்.!

+  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

+  என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!

+  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன். 

+  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

+  நான் தினசரி   லட்சக்கணக்கானவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !

+   அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .

+  உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

+  தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

+   எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால் 
சில #அன்பானவர்களின்   #முகங்களும் 
அவர்களது வாழ்த்துகளுமே என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !

Pamini Thusyanthan
Bala Subramanian   பகிர்வு Isai Inban   பதிவில் இருந்து...

நன்றி :
பாமினி துஷ்யநாதன்
பாலசுப்ரமணியன் 
இசை இன்பன்

இன்று சில தகவல்கள் : அதலக்காய்

#அதலைக்காய் என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.  பொதுவாக இக்காய்கள் கரிசல் காட்டுப் பகுதிகளில் அதிகமாக வளரக்கூடியவை. அதலைக்காயை விவசாயம் செய்ய தேவையில்லை. சாதாரணமாக வயல் கரைகளிலும், தரிசுகளிலும் முளைக்கக் கூடியது. இதனை விவசாயம் செய்யக் கூடிய விவசாயிகளும் விருதுநகர் பக்கம் இருக்கின்றனர். சர்க்கரை நோயைப் போல மஞ்சள் காமாலை நோய்க்கும் அதலைக்காய்கள் சிறந்தது. 

இந்த அதலைக்காய்க்கு விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனி மவுசு உண்டு. இதுதவிர, மருத்துவ குணத்திற்காக வெளியூர்களுக்கு வாங்கிச் செல்வோரும் உண்டு. இங்கு விளையும் அதலைக்காய்கள் மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும். 

இக்காய்கள் தமிழ்நாடு தவிர, கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் கொஞ்சம் காணப்படுகிறது. இக்கொடிகள் பாகற்காய் போலவே படரும் தன்மை உடையது. பார்ப்பதற்கு மிளகாயைப் போல தோற்றம் கொண்டிருக்கும். ஆனால் இவற்றுக்குப் பந்தல் தேவையில்லை. தரையிலேயே வளரும் தன்மை உடையது. சில நேரங்களில் வயல் வரப்புகளில் இருக்கும் செடிகளிலோ அல்லது கொம்புகளிலோ பற்றி வளரும் தன்மை உடையது. இக்கொடி பல ஆண்டுகள் வாழும் தன்மை உடையது. ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்துவிடும். ஆனால், மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு உயிருடன்தான் இருக்கும். கிட்டத்தட்ட ஃபீனிக்ஸ் பறவை போலத்தான் இச்செடியும். வறண்டுவிட்டது போல தோற்றமளித்தாலும், மீண்டும் முளைத்துவிடும். அதன் இலைப் பகுதி இதய வடிவமாக இருக்கும். ஒரே கொடியில் ஆண் மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும். இதன் மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். 

 ஒவ்வோர் ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளமும், காய்கள் 20-25 மி.மீ. நீளமும்  உடையவை. காய்களின் கரும் பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய துளைகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன. அதலைக் கொடிகள் ஐப்பசியில் பூக்க ஆரம்பித்து மார்கழி மாதம் காய்த்து தை திருநாளில் அறுவடை செய்யப்படுகின்றன. 

தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களில் அதலைக்காய் காய்க்கும் நேரத்தில் அவற்றைப் பறித்து சமையல் செய்து கொள்கின்றனர். முறையாகப் பயிரிடப்படாமல் தாமாக வளரும் கொடி என்பதால், இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவுதான். இதன் பொரியல் சுவை மிகுந்தது. இதனைப் பெரும்பாலானோர் அதிகமாக வாங்குவது பொரியலுக்காகத்தான். 

இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக்காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வலராதாம். ஏன்னென்றால் இந்த செடி மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடி.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை
மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடல் எரிச்சல்
உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குடற்புழு
குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

நன்றி :

கருத்து மேடை : தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல எந்த தடுப்பூசியும் பலனளிப்பதும் இல்லை பாதுகாப்பானதும் இல்லை. உண்மையில் இவை பல புதிய ஆட்டோ இம்யூன்  நோய்களை அதிகரித்திருக்கின்றன. 

இந்தியாவில் தடுப்பூசி மரணங்கள் மற்றும் பாதகங்களுக்கு தனிநீதிமன்றம் இல்லை. இழப்பீடுக்கான எந்த வரையறையும் இல்லை. 
மருத்துவர்களிடம், 
தடுப்பூசி பாதகங்கள் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. 
அறிவியல் அறியாமை , கண்மூடித்தனமான தடுப்பூசி நம்பிக்கை என சுலபமாக மக்களையும் மருத்துவர்களையும் அரசியல்வாதிகளையும் அறியாமையில் வைத்திருக்க முடிகிறது.  

நமது இலக்கு தடுப்பூசி யில் முடிவு எடுக்கும் உரிமை மட்டுமல்ல , வெளிப்படைத்தன்மை மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க தடுப்பூசி தனிநீதிமன்றம்!

Dr. Mathi Vanan
கொரானா தடுப்பூசி - மருந்து கம்பெனிகளின் மாபெரும் மோசடி அறிவியல்.

100 பேருக்கு கொரானா தொற்று வருகிறது. 90 பேருக்கு அறிகுறி இல்லாமலே சரி ஆகிறது. மீதம் சுரம், இருமல் என வந்து சரி ஆகிறது. வெகு சிலருக்கு தீவிரம். இது உண்மை நிலை.

இப்போது மருந்து கம்பெனிகள் என்ன சொல்கிறது?

கொரனா தடுப்பூசி வைரஸ் தொற்றை தடுக்காது. அது தீவிரமாக மாறுவதை தடுக்கும். அதுவும் 100 பேருக்கு போட்டால் 100 பேருக்கும் பலனளிக்காது. 50 பேருக்கு பலனளித்தாலே வெற்றி என்கிறது. அதாவது தடுப்பூசி போட்டும் 50 சதம் பேரில் கொரானா தீவிரம் வரலாம் என்கிறது.

இதற்கு எதற்கு தடுப்பூசி? 

தடுப்பூசி போட்டாலும் கொரானா வரும். அடுத்தவருக்கும் பரவும். 50 சதம் பேருக்கு பலனும் அளிக்காது. எந்த 50 சதம் பேர் பலனளிக்கும். எந்த 50 சதம் பேருக்கு பலனளிக்காது. அதுவும் தெரியாது.

அதைவிட கொரானா தடுப்பூசி போட்டவர் கொரானா வந்து இறந்தால் பலனளிக்காத 50 சதம் பேரில் சேர்ப்பார்கள். தடுப்பூசி போட்டவர், கொரானா மிதமான பாதிப்போடு சரியானால் அது தடுப்பூசியால் தான் என்பார்கள். உண்மையில் தடுப்பூசி போடாமலே 99 சதம் பேர் சரியாகி விடுவார்கள். அவர்களை எல்லாம் எங்கள் தடுப்பூசியால் தான் சரியானார்கள் என்பார்கள்.

50 சதம் பேருக்கே பலன், அதுவும் தானாகவே சரியாகிற நோயை தடுப்பூசியால் சரியாக்கினோம் என்கிற, ஆனால் 8 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுகிற, 

கொரானா தடுப்பூசி மருந்து கம்பெனிகளின் மாபெரும் மருத்துவ மோசடியாகவே இருக்கும்.

(4 வருடம் காத்திருந்து பக்க விளைவுகள் ஆராயாமல், அவசர கதியில் போட்டு, விளைவுகளுக்கு பொறுப்பும் ஏற்க மாட்டோம் என்கிற ஆபத்து தனி).

நன்றி :

Dr. Mathi Vanan
மற்றும் 

மலரும் நினைவுகள்

இந்தப் பேனாவை சட்டையில் சொருகிக் கொள்ளும்போது மனதில் ஹீரோ என்ற நினைப்புதான் வரும்.  உசத்தியான பேனா அன்று! 

எஸ். பி. பி. க்கு எஸ்ராவின் அஞ்சலி !

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

இசையால் வென்றவர்.

நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது.

நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும்  பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு செய்யக்கொடுத்துப் பதிவு செய்து கேட்கும் வழக்கம் இருந்தது. அதில் ராதாகிருஷ்ணன் என்ற நண்பன் எஸ்.பி.பி அவர்களின் தீவிர ரசிகன். கேசட்டில் முழுமையாக எஸ்.பி.பி.பாடல்களை மட்டுமே பதிவு செய்து கொள்வான். அவன் வீட்டிற்குப் போனால் எப்போதும் இளையராஜா இசையில் எஸ்.பி.பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  சின்னஞ்சிறிய கிராமத்தில் ஒரு காரைவீட்டின் வேப்பிலைகள் உதிர்ந்துகிடக்கும் மாடியில் அமர்ந்து எஸ்.பி.பி பாடலைக் கேட்கையில் சிறகை விரித்து பறந்து செல்வது போலவே இருக்கும்.

எத்தனையோ பேரின் காதல் கனவுகளுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் துணையாக இருந்திருக்கிறார். சிலரின் காதல் தோல்விக்கும் அந்தத் துணையே ஆறுதலாக இருந்தது.

என் வீட்டில் எனது சித்திகள் இருவரும் சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பார்கள். ரேடியோவில் பாட்டு ஒலிபரப்பாகும் முன்பே பாட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களின் விருப்பத்திற்குரிய பாடகராக எஸ்.பி.பி இருந்தார். ஆயிரம் நிலவே வா, இயற்கை என்னும் இளைய கன்னி, கம்பன் ஏமாந்தான் என்று எத்தனை எத்தனை சிறந்தபாடல்கள்.

சந்தோஷம் கொப்பளிக்க அவர் பாடுவதைக் கேட்க அத்தனை இனிமையாக இருக்கும். குறிப்பாகப் பாடலின் நடுவில் அவர் சிரிப்பது மயக்கமூட்டக்கூடியது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள் எப்போதும் இளமையின் துள்ளலைக் கொண்டேயிருந்தது. எத்தனை விதமான பாடல்கள் எத்தனை லட்சம் மக்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இசைபட வாழ்ந்த அவரது வாழ்க்கை பெருமைக்குரியது.

சங்கராபரணம் திரைப்படம் மதுரையில் நீண்டநாட்கள் ஓடியது. ஒரு தெலுங்குப்படத்தை மக்கள் இத்தனை ரசித்துப் பார்த்தது அதன் பாடல்களுக்காகவே

அதுவும் எஸ்பிபி பாடும் ராகம் தானம் பல்லவி, தொராகுன இதுவந்தி சேவா போன்ற பாடல்கள் டீக்கடைகளில் நாள் முழுவதும் ஒலித்தபடியே இருந்தது.

அது போலவே ஏக் துஜே கேலியே வெளியான நாட்களில் பைபாஸ் சாலையிலுள்ள உணவகங்களில் எப்போதும் இந்தப்படத்தின் பாடல்கள் ஒலித்தபடியே இருக்கும். டீ மாஸ்டரும் பாடலின் கூடவே பாடுவார். அத்தனை ஈர்ப்பான பாடல்கள்.

கல்லூரி ஆண்டுவிழாவில் “தேரே மேரே பீச் மெய்ன்” பாடலை ஒரு மாணவன் பாடிப் பெற்ற வரவேற்பு மறக்கமுடியாதது.

நான்குமுறை எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.. உரையாடியிருக்கிறேன். நெருக்கமான நண்பரைப் போலவே பழகுவார். ஒரு முறை இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களைப் பாடல் பதிவு ஒன்றின் போது சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது கே.பாலசந்தர் கொண்டிருந்த அன்பும் நட்பும் மறக்கமுடியாதது.

தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மக்களின் மனதை ஆற்றுப்படுத்தியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

அவரது பாடல் ஒலிக்காத வீடேயில்லை.

அவரின் மறைவிற்கு என் இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி :

விவாத மேடை : இந்திமொழிக்கார்கள் ஆளும்நிலை?

இந்திமொழிக்கார்கள் ஆளும்நிலை?

  இந்திமட்டும் அல்ல
உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை !

இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு மொழி அவ்வளவே.

இந்தியுடன் ஒத்துப்போகும் ஒரு சில மொழிகளையும் சேர்த்து கொண்டு இந்தி அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழியாக சித்தரிக்கப்படுகிறது.

சரி.. இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் என்ன?
என்ன குறைந்துவிட போகிறது ?
இது தானே உங்கள் கேள்வி..!

சொல்றேன்.
முதலில் பலதரப்பட்ட வரிகள் இருந்தது. அதை மாற்றி ஒரே தேசம், ஒரே வரி என்று GST கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது. இனி விலைவாசி குறையும் 
மாநிலங்களின் வருமானம் அதிரிக்கும். அதன் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்று தானே.

ஆனால் நடந்தது என்ன?

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய மாநில GST பணமான 12 ஆயிரம் கோடியை இன்று வரை மத்திய அரசு வழங்கவில்லை. அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில்.

இதனால் என்ன நடக்கும் என்றால். நிதி பற்றாக்குறையால் மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் தடைபடும். அப்படி வளர்ச்சி பணிகள் தடைபட்டால் மெல்ல மெல்ல தமிழகம் பின் தங்கிய மாநிலமாக மாறிவிடும்.

இது தான் ஒரே நாடு ஒரே வரியில் இருக்கும் சூழ்ச்சி.

சரி இதுக்கும் இந்தி எரிப்புக்கும் என்ன 
சம்பந்தம்னு கேக்குறீங்களா.?

இப்போது நாம் தமிழ்,  ஆங்கிலம் என்று இரண்டு மொழி படிக்கிறோம். இரண்டு மொழி படிக்கும்போதே நமக்கு ஆங்கிலம் சரியாக வருவதில்லை. உங்களில் எத்தன பேருக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்?

இப்படி இரண்டாவது மொழிக்கே தடுமாறும் நிலையில் இருக்கும்போது, கூட ஒரு மொழியை கூடுதலாக கொண்டுவந்தால் அந்த முன்றாவது மொழியில் நமது கற்றல் எந்த அளவிற்கு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

மூன்றாவது மொழி தானே. அதை அரைகுறையாகவோ
ஓரளவுக்கிற்கோ கற்றுக்கொள்வதில்
தவறில்லையே. அதானே உங்கள் எண்ணம்.

இப்போதே மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்திலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சம்பந்தமான அனைத்து தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

இது எவ்வளவு பெரிய அவலம் என்று புரிகிறதா. நான் மேல சொன்னது போல இந்தியா இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
இது பல மொழி பேசும் மக்கள் உள்ள கூட்டாச்சி நாடு. அப்படி இருக்க தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் நடத்துவது மற்ற மொழியினருக்கு செய்யும் அநீதி இல்லையா ?

இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதான் ஆங்கிலம் இருக்கிறது தானே.
இது தானே உங்கள் கேள்வி..?

பெரும் சிக்கல் இருக்கிறது. ஆங்கிலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இரண்டாவது மொழி தான். அதில் மட்டும் தேர்வு வைத்தால் போட்டி சமமாக இருக்கும். கூடவே இந்தி என்று ஒரு ஆப்ஷன் வரும்போது தான் சிக்கல்.

என்ன சிக்கல் ?

ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி,
இந்தி நமக்கு மூன்றாவது மொழி. ஆனால் இந்தி வட இந்தியர்களுக்கு தாய்
மொழி.

நான் சொல்ல வருவது புரியுதா..!

நாம் இரண்டாவது மொழியில் தேர்வு எழுதுவதே சிரமம். அப்படி நாம் சிரமப்பட்டு தேர்வு எழுதும் அதே தேர்வை அங்க பலர் அவர்களுடைய தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதுவார்கள்.

யோசித்து பாருங்கள்.
அவன் அவனுடைய தாய்மொழியில் தேர்வு எழுதுவான். அவனிடம் நாம் அவன் மொழியிலயே போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் நம்மில் எத்தனை பேர் வெற்றிபெறுவார்கள் ?

இது தான் சூழ்ச்சி. நிச்சயமாக நம்மால் தாய் மொழியில் தேர்வு
எழுதுபவர்களை வெற்றிக்கொள்ளவே முடியாது. அப்போது தானாகவே அவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு.

இதை நான் ஏதோ யூகித்து சொல்லவில்லை. இப்போதே இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் பெரும்பாலும் இந்திக்காரர்கள் ஆக்கிரம்பித்திருக்கிறார்கள். ரயில்வே, தபால், வங்கி என்ன அனைத்திலும் அவர்கள் தான் அதிகப்படியாக இருக்கிறார்கள்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் கிராமப்புறங்களில் உள்ள வங்கி கிளையின் மானேஜர் இந்தி பேசுபவராக
இருக்கிறார். ஒரு வாடிக்கையாளர் கூட இந்தி பேசுபவர் இல்லாத வங்கி கிளையில் எதன் அடிப்படையில் தமிழே தெரியாத ஒருவரை அதிகாரியாக அமர்த்துகிறார்கள். இதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா..?
தமிழர்கள் மட்டும் உள்ள கிளையில் தமிழனை அமர்த்தினால் தானே 
மக்களுக்கு அவரை அனுக எளிதாக இருக்கும் ?

ஒரு மாநிலத்தில் எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ
அந்த மொழி நன்றாக தெரிந்தவருக்கு தானே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்? ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது ??

இந்தியை கடுமையாக எதிர்க்கும்போதே
அவர்களின் ஆக்கிரமிப்பும் ஊடுருவலும்
இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால்
நாம் இந்தியை ஏற்றுக்கொண்டால் 
நிலமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள் ?

கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு 
என்று அனைத்திலும் நாம் பின் தங்கிவிடுவோம்..

இதை செய்ய தான் இந்தியை திணிக்க
இவ்வளவு பாடுபடுகிறார்கள்..

ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லி நமது பொருளாதாரத்தில் கைவைத்து மாநில வளர்ச்சியை சீர்குலைத்து விட்டார்கள்.

இப்போது ஒரே நாடு ஒரே கல்வி என்று
சொல்லி நமது சந்ததியினரின் அறிவையும் வேலை வாய்ப்பையும் சீர்குலைக்க
திட்டமிடுகிறார்கள்.

அவ்வளவு தான்..
மறுபடியும் சொல்றேன்.

இந்தியை தாய்மொழியாக கொண்டவன் எழுதும் அதே தேர்வை உங்கள் பிள்ளைகள் இரண்டாவது மொழியிலோ அல்லது மூன்றாவது மொழியிலோ எழுதவேண்டும்.

இதை நீங்க ஏற்கிறீர்களா ?
ஏற்றால் மட்டும் இந்தி திணிப்பை
ஆதரியுங்கள்.

நன்றி..!(திரு.  T S Natarajan அவர்களின் அக்கறைமிக்க பதிவு நன்றியுடன் பகிரப்பெறுகிறது)

நன்றி :
திரு டி எஸ் நடராஜன்
மற்றும் 

எஸ் பி பிக்கு மணற் சிற்பம் !

அண்ணாமலையின் கைவண்ணம்!

நலக்குறிப்புகள் : சர்க்கரை நோய் குணமாக..