காமராஜர் குற்றாலம் குளியல்...
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
5 ஆக., 2019
காமராஜர் நினைவுகள்-20: காமராஜர் குற்றாலம் குளியல்...
காமராஜர் குற்றாலம் குளியல்...
31 மே, 2019
காமராஜர் நினைவுகள்-19: சீனா இந்தியா இடையே போர் இருந்த நேரம்
காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராஜரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார்.
29 மே, 2019
காமராஜர் நினைவுகள்-18: இதயம் தொட்ட பதிவு
16 பிப்., 2019
காமராஜர் நினைவுகள்-17: ரேஷன் அரிசி சாப்பிட்ட ஒரே முதல்வர் : சீமான் அவர்கள்
1 பிப்., 2019
26 டிச., 2018
காமராஜர் நினைவுகள்-15:
19 டிச., 2018
காமராஜர் நினைவுகள்-14:
காமராஜர் ஆட்சிக் காலத்தில் எத்தனை அணைகள்!
15 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடிக்கு வந்தது.
அப்படிப்பட்ட சாதனைத் தலைவரை மறந்துவிட்டோம்.
16 டிச., 2018
காமராஜர் நினைவுகள்-13:
காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...
அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...
அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."
மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
12 டிச., 2018
காமராஜர் நினைவுகள்-12: காமராஜரின் புகழுக்கு காரணம்
காமராஜரின் புகழுக்கு காரணம்
ஸ்ருதி டிவி
இதுவரை பார்த்தவர்கள் 199071
பதிவிட்ட நாள்: ஜூலை 22, 2018



