28 மார்., 2012

என் கவிதை-7:

குறுகிய  உள்ளங்கள் 
குறுகிய எண்ணங்கள் 
குறுக்கு வழிகள்
குளறுபடிகள், குற்றங்கள் 
அடாவடித்தனங்கள் 
அத்துமீறல்கள் 
அராஜகங்கள் 
அநீதிகள்.  
விரிந்த வானும் 
பரந்த கடலும்
உறுத்தவேயில்லையோ?   

நலக்குறிப்புகள்-67: கத்திரிக்காய்

கத்திரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.  அதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கூட மிகுந்துள்ளன.  சளித்தொல்லை, வாய்வுத்தொல்லை ஆகியவற்றை குறைக்கும்  ஆற்றல் கொண்டது கத்திரிக்காய்.  

எனக்குப் பிடித்த கவிதை-71: மேகம்

நான் 
மண்ணுக்கும் நீருக்கும் மகள்
வானத்தின் 
செவிலித்தாயால் வளர்க்கப்படும்
குழந்தை
நான்
ஆழமான கடலையும் 
பரந்த கடற்கரைகளையும்
கடந்து செல்லும்போது 
மாற்றமடைவேன் - ஆனால்
அழிவதில்லை 


ஷெல்லியின் கவிதை - தமிழில் மொழி பெயர்த்தவர் கவிஞர் சுபாசு  

27 மார்., 2012

நலக்குறிப்புகள்-66: திராட்சை

திராட்சைப்பழம் மாரடைப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.  மேலும் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பான கொலஸ்ட்ராலை மட்டுப் படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு. 

எனக்குப் பிடித்த கவிதை-70: அணுக்களின் பிள்ளை நான்!

விசுவ வெளிப்பாழின்
மர்மக் கருப்பையில்
நானும் காலமும் 
ஒளிந்திருந்தோம்
நட்சத்திரப் புழுதி அணுக்களாய் .... 
........
அணுக்களின் பிள்ளை நான்
ஆனதால் புவியின் 
எந்தச் சேதமும் 
என்னை அழவைக்கின்றன
எந்த உவகையும்
என்னைத் துள்ளி எழ வைக்கின்றன.


- கவிஞர் சிற்பியின் "காலம்" என்ற கவிதையிலிருந்து சில பகுதிகள். 


நன்றி:  கவிஞர் சிற்பி அவர்கள் 

26 மார்., 2012

நலக்குறிப்புகள்-65: வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. அது ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 22 மார்., 2012

நலக்குறிப்புகள்-64: வேப்பிலை

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் ஓரளவு அறிவோம். நாம்  அறியாத சில தகவல்கள் இதோ: அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பலவற்றை அழித்து (anti-bacterial, anti-parasitic, anti-fungal, anti-protozoal and anti-viral) நம்மை காக்கும் சக்தி கொண்டது. 

நன்றி:    ஆங்கில நாளிதழ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா