
மற்றும் யூடியூப்
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)

காந்தி எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நிரூபிக்கவோ நிறுவவோ முயலவில்லை, கண்டடையவே முயல்கிறார். கருத்தியல் ரீதியான இறுக்கமான முன்முடிவுகள் கொண்டவராக இல்லை. பரிசோதனை செய்கிறேன் என்று சொல்வதன் மூலமே இது தெரியவருகிறது. எந்த ஒரு பரிசோதனையையும் நடைமுறைதளத்தில் செய்து பார்க்கிறார் அதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தடைகிறார். அப்பொழுது அம்முடிவே சரியானது சத்தியமானது என்று எண்ணுகிறார். அதன் அடிப்படையில் செயல்படுகிறார். அச்செயல் எங்கு தன்னை எடுத்துச்செல்கிறதோ அங்கு செல்லத் தயாராக இருக்கிறார். தான் கண்டடைந்தது ஒரு சார்பு/பகுதி உண்மை என்றும் அது இறுதியானதோ முழுமுற்றானதோ அல்ல என்றும் அவர் அறிகிறார், அறிவிக்கிறார்.
தான் எவ்வளவு தூரம் உண்மையைக் கண்டடைந்துள்ளாரோ அவ்வளவு தூரம் மட்டுமே பதிவு செய்கிறார். படைத்தவனுக்கும் ஆன்மாவுக்குமான சில நுண்ணிய விஷயங்கள் அந்த ஆன்மாவுக்கு மட்டுமே தெரியவரும் என்றும் அதனை எழுதிப் புரியவைத்துவிட முடியாது என்றும் அதனை எழுதவில்லை என்றும் முன்னுரையில் கூறுகிறார். இந்த அணுகுமுறை மிக முக்கியமானது.
சொல்வதைப்போலன்றிப் பின்பற்ற மிகவும் சிரமமானது. எதையும் தொடங்கும்போதே நிறுவ முயலாதவனிடம் சுமைகள் ஏதும் இருப்பதில்லை. அவனிடம் அபாரமான ஒரு நேர்மை கைகூடிவிடுகிறது. அதுவே அவனை உண்மையின் அருகில் அழைத்துச் செல்கிறது.
நன்றி: விஜயராகவன் சுந்தரவரதன், முகனூல்
எப்பேர்ப்பட்ட மகான்! இந்த நிமிடம் நினைத்தாலும் மெய் சலிர்க்கிறது; இப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருக்க முடியுமா என்று எண்ணியெண்ணி பிரமிக்கிறேன்.
அவர் வாழ்க்கையிலிருந்து எத்தனையோ படிப்பினைகள்! எனக்கேற்றாற்போல் சிலவற்றை மட்டும் எனது நாட்குறிப்பில் பல வருடங்களுக்குமுன் குறித்துவைத்து, அடிக்கடி நினைவுகூர்ந்தேன். ஆனால் என்னால் அவற்றை சிறிதளவுகூட கடைப்பிடிக்க முடியவில்லை, முற்றிலுமாகத் தோற்றுவிட்டேன் என்பது என் சோகம். அவை:
1. உண்மை, வாய்மை, மெய்மை
Truthfulness in Thought, Word and Deed
2. எண்ணத்தில், சொல்லில், செயலில் அஹிம்சை
Non-Violence in Thought, Word and Deed
3. அனைவரிடத்தும் அன்பு
UniversalLove
4. எளியவாழ்க்கையும் சீரிய சிந்தனையும்
Simple Living and High Thinking
5. பிறனில் விழையாமையும் எதன்மேலும் கடுமபற்றுக் கொள்ளாமையும்
Non-Covetousness and Non- Possessiveness
6. தன்னலமில்லா வாழ்க்கையும் தன்னலமில்லாத் தொண்டும்
Selfless Life and Selfless Service
அடுத்த பிறவியிலாவது இவை கைகூடட்டும் என்று பிரார்த்தித்து வருகிறேன்.
இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பி.எஸ்.மூன்ஜி, சாவர்க்கர், கோவல்க்கர் இத்தாலி முசோலினியும் ஃபாசிசத்தையும், ஜெர்மனியின் ஹிட்லர் நாசிசத்தையும் ஆதரித்ததார்கள் ….1930 களில் இத்தகைய வலதுசாரி தலைவர்கள் ஹிட்லரையும், முசோலினையும் ஆதரித்தபோது, காந்தியார் ஹிட்லரையும், முசோலினையும் எதிர்த்தார்….காந்தியார் நினைத்திருந்தால் பிரிட்டிஷாரை விரட்ட அவர்களின் எதிரிகள் இத்தாலியோடும், ஜெர்மனியோடும் கூட்டு சேர்ந்திருக்கலாம்..காந்தியார் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சூழ்ச்சி, தந்திரங்களில் இறங்கவில்லை...
இரண்டாம் உலகப் போரின் கொடூரத்தை அறிந்த காந்தியார் ஜூலை 23, 1939ல் ஹிட்லருக்கு கடிதம் எழுதுகிறார்..ஒரு வித தயக்கத்துடன் தான் அத்துமீறி அறிவுரை கூறுகிறேனோ என அச்சத்தோடு கடிதத்தை துவங்குகிறார். உலகப்போரை ஹிட்லர் ஒருவரால்தான் நிறுத்த முடியும் மற்றும் மானுட குல நலத்திற்காக போரை கைவிடுமாறு மன்றாடுகிறார். கடிதத்தில் ஹிட்லரை, காந்தியார் நண்பர் என்றே விளித்து எழுதி, நான் உங்களின் உண்மையான நண்பன் என்றே முடிக்கிறார். கடிதத்தின் இறுதியில் தான் ஏதாவது தவறுதலாக எழுதியிருந்தால் மன்னிக்கவும் என பணிவன்புடன் எழுதியதையும் கவனிக்கவேண்டும்.
1940 இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைகிறது. ஹிட்லர் மற்றும் நாஜி வதை முகாம்களைப் பற்றி அறிந்து கலக்கமடைந்த காந்தியார் இரண்டாவது கடிதத்தை டிசம்பர் 24 1940 மீண்டும் எழுதுகிறார். ஆனால் இரண்டாவது கடிதத்தில் போரை கைவிடுமாறும் மற்றும் அகிம்சை போராட்ட்த்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.இக்கடிதத்தின் அழுத்த தொனி முதல் கடிதத்தை காட்டிலும் கூடுதலாக இருக்கிறது.இக்கடிதத்திலும் நண்பர் என விளித்து எனக்கு எதிரிகள் எவரும் இல்லை மற்றும் கடந்த 33 வருடங்களாக சாதி,மதம்,வர்ணம் தாண்டி மானுட சகோதரத்துவத்தை கடைபிடிக்கிறேன் என்கிறார். அடக்குமுறையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் நாஜிகளுக்கும் பெருத்த வித்தியாசமில்லை என்கிறார்.ஆனால் இந்தியர்களான நாங்கள் வன்முறையின்றி போராடுவதை விவரிக்கிறார். பிரிட்டிஷார் எங்களின் நிலத்தை அபகரிக்கலாம், உடலையும் அபகரிக்கலாம் ஆனால் எங்கள் ஆன்மாவை அபகரிக்கமுடியாது என அகிம்சை போராட்ட்த்தை விவரிக்கிறார். இறுதியில் தான் எழுதும் இக்கடிதம் முசோலினிக்கும் பொருந்தும் என எழுதி தான் என்றும் நண்பன் என்று முடிக்கிறார்.
காந்தியார் ஃபாசிசத்தையும், நாசிசத்தின் ஆபத்தையும் உணர்ந்தவர் என்பதற்கு இந்த இரண்டு கடிதங்களுமே சாட்சி…..இறுதியாக காந்தியார் ஒரு வலதுசாரி இந்துத்வாதியால் கொல்லப்பட்டார்.
காந்தியாரின் இந்த இரு கடிதங்களின் பின்ணனியில் ஒரு இந்தி திரைப்படமும் (Gandhi to Hitler) வெளிவந்தது…ஆனால் பெரிதாக கவனம் பெறவில்லை…
முதல் கடிதம்:
http://www.mkgandhi.org/letters/hitler_ltr.htm
இரண்டாம் கடிதம்:
http://www.mkgandhi.org/letters/hitler_ltr1.htm
நன்றி: திரு.வாசுதேவன் (வாட்ஸ்அப்பில் பெற்றது)