22 பிப்., 2017

ஆன்மீக சிந்தனை-68: சுவாமி விவேகானந்தர்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்

இன்று ஒரு தகவல்-57: ஜெர்ஸி மாடும், நாட்டு மாடும்

ஜெர்ஸி மாட்டின் பாலில் உள்ள A1 புரதம் புற்று நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்க்களைத் தோற்றுவிக்கலாம். ஆனால் நாட்டு மாட்டின் பாலில் உள்ள A2 புரதம் ஆரோக்கியமானது, நன்மை பயப்பது. எனவே நாட்டு மாட்டின் பாலை வாங்கி அருந்துவீர். முக்கியமாக குழந்தைகளுக்கு ஜெர்ஸி மாட்டுப் பாலைத் தராதீர்.

நலக்குறிப்புகள்-102:மணத்தக்காளிக்கீரை

மணத்தக்காளிக்கீரைக்கு வாய்ப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றும் ஆற்றல் உள்ளது.

இன்றைய சிந்தனைக்கு-201: பூட்டும் சாவியும்

பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பூட்டுக்கள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. அந்தப் பூட்டுக்களோடு சாவிகளும் த்யாரிக்கப்படுகின்றன. அதுபோல் கடவுள் ஒருபோதும் நமக்கு பிரச்சினைகளை மட்டும் கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்ப்பதில்லை. அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் சேர்த்தே தருகிறார். தீர்வுகளை பொறுமையுடன் தேடுங்கள்.

20 பிப்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-6: குளிர்பானங்களில் பூச்சி மருந்தின் அளவு

இந்திய மருத்துவக் கழகம் அண்மையில் அறிவித்தது:

1. தம்ஸ் அப் - 7.2%

2. கோக்  - 9.4%

3. 7 அப் - 12.5%

4.  மிரிண்டா 20.7%

5. பெப்ஸி - 10.9%

6,  ஃபேண்டா - 29.1%

7.  ஸ்ப்ரைட் - 5.3%

8.  ஃப்ரூட்டி - 24.5%

9.  மாஸா - 19.3%

இந்தப் பூச்சி மருந்துகள் ஆபத்தானவை, குறிப்பாக நம் கல்லீரலுக்கு.

நன்றி:- வாட்ஸ் அப்பில் பகிர்ந்துகொண்ட அன்பருக்கு


ஆன்மீக சிந்தனை-67: காந்திஜி

பிரார்த்தனை என்பது ஒரு இதயத் தேடல்.  எல்லாம் இறைவனின் அருளாலே என்ற ஒரு நினைவூட்டல் - மஹாத்மா காந்தி

இன்று ஒரு தகவல்-56: சர்க்கரையின் அளவைத் தீர்மானிப்பது யார்?

1997ம் ஆண்டு வரை, பட்டினியில் இரத்தச் சர்க்கரையின் அளவு 140 வரை இருக்கலாம்.  உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இதை 126 ஆகக் குறைத்தது. இதனால் உலகில் மேலும் 14% சர்க்கரை நோயாளிகள் என்றாயினர்.  2003ல் அமெரிக்க சர்க்கரை நோய் நிறுவனம் மேலும் இதை குறைத்து, 100 ஆக்கியது.  இதனால் இந்திய மக்கட் தொகையில் 60% சர்க்கரை நோயாளிகள் ஆயினர். அது சரி, இந்த நிபுணர் குழுவில் இருந்தவர்கள் யார்? உலகின் 7 மிகப் பெரிய மருந்துக் கம்பெனிகள் ஆலோசகர்கள்!

நன்றி: திரு டோமி ஃப்ரான்ஸிஸ் (முகனூல் வழியே)

விழித்தெழுவோம்!

நலக்குறிப்புகள்-101: சர்க்கரை நோயாள்களின் கவனத்திற்கு

பாகற்காய், புடலங்காய், வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, கொத்தவரங்காய், கோவைக்காய், முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இன்றைய சிந்தனைக்கு-200: நண்பனும் எதிரியும்

நண்பனை நேசிப்பது போல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள்.

நண்பன் வெற்றிக்குத் துணை நிற்பான்.

எதிரி வெற்றிக்குக் காரணமாக இருப்பான்.

18 பிப்., 2017

இன்று ஒரு தகவல்-55: பழங்கள் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்கள்

ஆப்பிள் பழங்கள் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களைப் பார்த்திருக்கலாம்.  அவற்றின் பொருள் என்னவென்று தெரிந்து கொண்டால் நல்லது.

ஐந்து இலக்க எண் - ஒன்பதில் ஆரம்பமானால் அது இயற்கை முறைப்படி உற்பத்தி செய்யப்பட்டது. அதில் செயற்கை நச்சுக்கள் (உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லை).

ஐந்து இலக்க எண் - எட்டில் ஆரம்பமானால் - மரபு அணு மாற்றம் செய்யப்பட்ட விதையிலிருந்து உருவாக்கப்பட்டது.

நான்கு இலக்க எண் - அன்றாட முறைப்படி உருவாக்கப்பட்டது; ஆனால் அதில் பூச்சி மருந்துகள் உள்ளன.

வாட்ஸ் அப்பில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

நலக்குறிப்புகள்-100: பனைவெல்லம்

1. உடற்சூட்டை அகற்ற வல்லது.
2. உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க வல்லது.
3. இதயத்தை வலுவடையச் செய்யும்.
4. பித்த நோய்களை குணப்படுத்த வல்லது.
5. சொரி, சிரங்கு, ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்லது.
6. மெலிந்த குழந்தைகளுக்கு உகந்தது.
7. பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவைப் போக்க வல்லது.
8. கருவுற்ற பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்ற உணவு.
9. தவிர 821 பயன்கள் இருப்பதாக தாளவிலாசம் எனும் நூல் கூறுகிறது.

இன்றைய சிந்தனைக்கு-199: நம்பிக்கை

நீ  சுமக்கின்ற நம்பிக்கை, நீ கீழே விழும்போது நாளை உன்னைச் சுமக்கும் -   தினகரன்.காம்

17 பிப்., 2017

ஆன்மீக சிந்தனை-66: யாருடைய நிலம்?

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, "இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

* துறவி கேட்டார், "இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார்.

"அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அந்த செல்வந்தன்.

"ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

- செல்வந்தன், "அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை'' என்றான்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க..


"அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் செல்வந்தன்.

"நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு..

* அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி..

"அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அந்த செல்வந்தன்.

* துறவி சிரித்துக்கொண்டே..


"நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.  செல்வந்தனோ தன் அறியாமை எண்ணி தலை குனிந்தான்.

* உலகில் எதுவும் நிலையானது அல்ல.  கவுரவம், பணம், சொத்து, பதவி எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டுச் சென்று விடும்.

* அதனால் அவற்றின் மீது அளவுக்கு மீறி பற்று வைக்க கூடாது. மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள்.

அன்பே சிவம். நாம் எல்லோரும் சமம் என்பதை உணருங்கள்

இன்று ஒரு தகவல்-54: நீங்கள் வாங்கும் மருந்து உண்மையானதா அல்லது போலியானதா?

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மருந்தும் உண்மையானதா அல்லது போலியா என்பதை அறிந்துகொள்ள:-

(1) மருந்து அட்டை அல்லது பெட்டியின் மேல் ஒன்பது இலக்க எண் (Unique Product Identification Code)  ஒன்று இருக்கும்.

(2) அந்த எண்ணை 9901099010 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

(3) பத்தே வினாடிகளில் அந்த மருந்தின் குழு எண்(Batch No.), காலாவதி தேதி, தயாரிக்கும் கம்பெனியின் பெயர் ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த சேவையை உங்களுக்கு வழங்குவோர்:  Pharmasecure.com.

நன்றி:  Pharmasecure.com.
நலக்குறிப்புகள்-99: டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் ஊரெங்கும் பரவி வருகிறது. நம்மை பாதுகாத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யை எடுத்து முழங்காளில் இருந்து பாதம் வரை தடவி கொள்ளவும், டெங்கு கொசுக்கள் முழங்காளுக்கு மேல் கடிக்காது, அதுவால் உயர பறக்க முடியாது, மேலும் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது, தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமிநாசினி.

இன்றைய சிந்தனைக்கு-198: கோபம், மகிழ்ச்சி, அழுகை

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.

மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.

அழுகையில் ஒருவரையும் நம்பாதே.

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-5: ப்ராய்லர் கோழிகளால் ஆபத்து

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிராய்லர் கோழி ஆண்களின்  உயிரணுக்களை  அழித்து, மலடாக்குகிறது. இன்று குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.  "இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பூப்பெய்தச் செய்து விடுவதாக கூறப்படுகிறது".

பிராய்லர் கோழி  சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.   இன்னும் பிராய்லர் கோழிகளால்
மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று அவை தோற்றுவிக்கும் வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .


ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட  மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி  வருகிறதுவிழிப்புணர்வு தேவை.

நன்றி:  வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்பிய நண்பருக்கு

16 பிப்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-4: எண்ணங்களும், உணர்ச்சிகளும்


எண்ணங்களும், உணர்ச்சிகளும்

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...


பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..

கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..

பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..

சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன.

சந்தோஷமாக இருந்தால் நல்ல ஹார்மோன் சுரக்கும்.
இல்லையேல் அமிலம் சுரந்து உடல் கேடாகும்.

நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

வாட்ஸ் அப்பில் பெற்றது.


15 பிப்., 2017

நலக்குறிப்புகள்-98: எலுமிச்சைச்சாற்றின் பயன்கள்

காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் எலுமிச்சைச்சாற்றைக் கலந்து குடிப்பது நன்மை பயக்கும்.  அமிலத்தன்மையைக் குறைக்கும். அமிலத்தன்மைதான் இன்றைய நோய்கள் பெரும்பாலானவற்றின் அடிப்படை.  நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.  உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும்.. 

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-3: கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள்

மாம்பழங்களை கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்கிறார்கள் சில வியாபாரிகள். கால்சியம் கார்பைடில் ஆர்செனிக், பாஸ்பரஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. மேலும் தண்ணீரில் நனைத்தபின் அசிட்டிலின் வாயு வெளிவரும். இதனால் நரம்பு மண்டல பாதிப்பு, தலைவலி, தலை சுற்றல், மனக்குழப்பம் போன்ற தொல்லைகள் தோன்றலாம். தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிக மறதி போன்ற கோளாறுகளும் ஏற்படலாம்.  எனவே நாம் பழங்களை வாங்கும் போது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

இன்று ஒரு தகவல்-52: தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு

தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு 1,30,058 ச.கி.மீ.

இன்றைய சிந்தனைக்கு-197:யாரோ

வாய்ப்புக்களை பயன்படுத்தி வெற்றி பெறுவது ஒருவகை; வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெறுவது மறுவகை; வாய்ப்புகளை மறுப்பதால் கிடைக்கும் வெற்றி மூன்றாம் வகை - யாரோ

2 பிப்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-2: வனஸ்பதி (Hydrogenated Oil)

வனஸ்பதி (Hydrogenated Oil) மாரடைப்பு, புற்று நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் அதிகரித்தல் போன்ற பல துயர்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால் அதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

இன்று ஒரு தகவல்-51: 24 மணி நேரமும் பிராணவாயுவை வெளியிடும் தாவரங்கள்!

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு, இருபத்து நான்கு மணி  நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுபவை. எனவே அவை அனைத்தும் நம் போற்றுதலுக்குரியவை. இவற்றை வளர்த்து வருதல் நம் கடமை.

நன்றி:- கே.முருகேசன், வனவர், கொடைக்கானல்

நலக்குறிப்புகள்-97: பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தருவது. மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்துள் ளது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவாகும்.   நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், எடை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.


மேலும் பீர்க்கங்காய்ச்சாறு, மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்தாகும். 

பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களும் மிகுதியாக உள்ளன. 

மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் உதவுகிறது.

குறைந்த  கலோரி என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. 

பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாய்ட்ஸ்  போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது. 

பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது.


உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. 

ஓமியோபதி மருத்துவத்தில் பீர்க்கங்காயின் சாறு கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது.

இலைகளை மையாக  அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்துத் பூசி வந்தால் தொழுநோய்ப் புண்கள் விரைவில் ஆறும். பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கி காயம் ஆறும். 

ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனோடு இனிப்புச் சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.

இன்றைய சிந்தனைக்கு-196: நாம் ஒரு வழிப்போக்கன்

உலகில் நாம் ஒரு வழிப்போக்கன் என்பதை மறந்துவிட வேண்டாம். எப்போதும் இதை நினைவில் வைத்திருப்போம்

1 பிப்., 2017

நலக்குறிப்புகள்-96: மஞ்சளின் மகத்துவம்

மஞ்சளின் மகத்துவம்
 
நாம் ஓரளவு அறிந்ததுதான்.  முதுமைக்காலத்தில் மூளை செயல்திறன் இழப்பதை தடுக்கும் அற்புத ஆற்றல் கொண்டது மஞ்சள் என்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையில் உறையும் பீட்டா அமைலாய்டு படிவை (Beta Amyloid Brain Plaque) கரைக்கும் ஆற்றல் இருப்பதால் அல்ஜைமர்ஸ் என்ற மூளை நோயைத் தடுக்கவும், வந்தபின் குணப்படுத்தவும் வல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுக்கும் மஞ்சளுக்கு உண்டு.  எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மஞ்சளை தினமும் உணவில் பயன்படுத்துவீர்!